இல்லத்தரசிகளுக்கான பயனுள்ள சமையல் குறிப்புகள் 10! காய்கறிகளை வாங்கி வந்த உடன் இப்படி செய்யுங்கள் கிருமிகள் அழிந்துவிடும்.

cooking-veggitables
- Advertisement -

இனிய இல்லத்தரசிகளுக்கு முத்து முத்தான 10 குறிப்புகள் இந்த பதிவின் மூலம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவரும் தங்களுடைய சமையல் இனிமையானதாக இருக்க வேண்டும் என்பதை விரும்புகின்றனர். முழு ஈடுபாட்டுடன், சிரித்த முகத்துடன் சமைத்தால் அந்த சமையலில் ஒரு சில பொருட்கள் குறைந்தால் கூட, நல்ல சுவையாக வரும். ஆனால் முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டு எல்லா பொருட்களையும் சரியாக போட்டு சமைத்தால் கூட, அதில் ருசி இருக்காது. இல்லத்தரசிகளுக்கு பயனுள்ள இந்த பத்து குறிப்புகளை நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்.

குறிப்பு 1:
வெண்டைக்காய் வாங்கியவுடன் பிரஷ்ஷாக சமைத்து விட வேண்டும். சிறிது நாட்களுக்கு வைத்திருந்து நீங்கள் சமைக்க போகிறீர்கள் என்றால் அதன் காம்பு மற்றும் தலை பகுதியை வெட்டி விட்டு பின்னர் ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள் அப்போது தான் முற்றிப் போகாமல் அப்படியே இருக்கும்.

- Advertisement -

குறிப்பு 2:
வாழைக்காய் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்க வாங்கியவுடன் அதை ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி உள்ளே மூழ்கும்படி வைத்து விடுங்கள். ஒரு வாரத்திற்கு மேலும் கெடாமல் அப்படியே வாழைக்காய் பிரஷ்ஷாக இருக்கும்.

குறிப்பு 3:
எலுமிச்சை பழத்தை நீண்ட நாட்களுக்கு அழுகிப் போகாமல் அல்லது காய்ந்து போகாமல் பாதுகாப்பதற்கு தினமும் ஒரு மணி நேரமாவது எலுமிச்சை பழத்தை பிரிட்ஜில் இருந்து எடுத்து தண்ணீரில் போட்டு வையுங்கள். இவ்வாறு செய்ய நீண்ட நாட்கள் எலுமிச்சை பழம் நன்றாக இருக்கும்.

- Advertisement -

குறிப்பு 4:
கருவேப்பிலையை பிளாஸ்டிக் டப்பாவில் ஸ்டோர் செய்வதை விட, ஒரு அலுமினிய பாத்திரத்தில் போட்டு மூடி வைத்து பாருங்கள். காய்ந்து போகாமல் பச்சை பசேலென அப்படியே நீண்ட நாட்களுக்கு இருக்கும்.

குறிப்பு 5:
வீட்டிலேயே ஊறுகாய் தயாரிப்பவர்கள் அதற்கு பயன்படுத்தும் கரண்டி மரத்தாலானதாக வைத்துக் கொள்ளுங்கள். அப்போது தான் நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் ஊறுகாய் உபயோகமாக இருக்கும்.

- Advertisement -

குறிப்பு 6:
மழை பெய்யும் பொழுது மழைத் தண்ணீரை பிடித்து பருப்பு வகைகளை வேக வைத்து பாருங்கள். ஒரு கொதியில் சட்டென மலர்ந்து பருப்புகள் வெந்துவிடும். இதனுடைய ருசியே தனி ருசியாக இருக்கும்.

குறிப்பு 7:
எலுமிச்சை பழங்கள் காய்ந்து போய் விட்டால் அதில் இருந்து சாறு எடுக்க கொஞ்சம் கொதிக்கும் நீரில் 5 நிமிடம் போட்டு வைத்து பிறகு சாறு எடுத்துப் பாருங்கள், சுலபமாக நிறையச் சாறு கிடைக்கும்.

குறிப்பு 8:
வெங்காயத்தை நறுக்கிய பிறகு அதனை ஸ்டோர் செய்து வைக்க கூடாது. அப்படி அதிகப்படியான வெங்காயத்தை வெட்டி வைத்து இருந்தால் அதனுடன் கொஞ்சம் வெண்ணெய் சேர்த்து வையுங்கள், நீண்ட நேரம் பிரஷ்ஷாக வெங்காய வாடை அடிக்காமல் இருக்கும்.

குறிப்பு 9:
கோதுமையை வாங்கி அரைக்க முடியாமல் அப்படியே வைத்திருந்தால் அதில் ஒரு கொத்து வெந்தயக் கீரையை போட்டு வையுங்கள். ஒரு பூச்சி கூட கோதுமையின் பக்கம் வரவே செய்யாது.

குறிப்பு 10:
காய்கறிகள் மற்றும் பழங்கள் இப்போது இயற்கையாக கிடைத்தாலும், அதில் செயற்கை பூச்சிக் கொல்லிகள் அதிகம் தெளிக்கப்பட்டு விளைவிக்கப்படுகின்றன. எனவே எப்பொழுதும் காய்கறி மற்றும் பழங்களை வாங்கி வந்தவுடன் கொஞ்சம் குளிர்ந்த தண்ணீரில் வினிகர் சேர்த்து கலந்து அதில் ஐந்து நிமிடம் போட்டு வைத்து பின்னர் பயன்படுத்துங்கள். அனைத்து கிருமிகளும் அந்த நீரில் அழிந்துவிடும்.

- Advertisement -