இந்த 10 டிப்ஸ் தெரிந்தால் போதும் சமையலறையில் உங்கள் பணத்தையும் நேரத்தையும் மிச்சப்படுத்த முடியும்

kitchen1
- Advertisement -

பெண்களுக்கான தனி உலகம் சமையலறை. எவ்வளவு தான் கற்றுத் தேர்ந்தவர்களாக இருப்பினும் அனுபவங்கள் பல இருந்தால் மட்டும் தான் சமைப்பதில் வல்லுனராக முடியும். எதை செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும் என்ற பக்குவம் தெரிந்தால் மட்டுமே அளவான, சுவையான உணவினை சமைக்க முடியும். இதற்காக உங்களுக்கு பயன்தரக்கூடிய சிறந்த 10 குறிப்புகளை பற்றி தான் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

milk-boiling

டிப்ஸ் : 1
வெயில் காலங்களில் காலையில் காய்ச்சிய பாலை மதியம் காய்ச்சாமல் மறந்துவிட்டால் அது திரி திரியாகி வீணாகிவிடும். இவ்வாறு மறந்துவிட்டு பிறகு காய்ச்சும் பொழுது பாலில் ஒரு சிட்டிகை சோடா உப்பு சேர்த்து காய்ச்சினால் பால் திரியாமல் நன்றாக இருக்கும்.

- Advertisement -

டிப்ஸ் : 2
தினமும் சமைக்கும் பொழுது எண்ணெயில் கடுகு சேர்த்து தாளிப்போம். அப்பொழுது பாதி அளவு கடுகு வெடித்து வெளியே சிதறிவிடும். இதனை தவிர்க்க கடுகை சேர்க்கும் பொழுது அதனுடன் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்தால் கடுகு வெளியே சிதறாமல் எண்ணெயிலேயே பொரிந்துவிடும்.

thalippu karandi

டிப்ஸ் : 3
அதிகமாக சமையலுக்குப் பயன்படும் முட்டையை பல நாட்களுக்கு வைத்திருந்தால் முட்டை ஓட்டில் உள்ள கண்ணுக்கு தெரியாத துவாரங்கள் மூலம் காற்று உட்புகுந்து முட்டை நீர்த்துவிடும். இதனை தவிர்க்க முட்டை ஓட்டின் மீது ஏதேனும் ஒரு எண்ணையை தடவி வைத்தால் பல நாட்களுக்கு முட்டை வீணாகாமல் இருக்கும்.

- Advertisement -

டிப்ஸ் : 4
உருளைக்கிழங்கின் சுவை குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் இதனை சாப்பிட்டால் வாய்வு பிரச்சனை உண்டாகும் என்பதனால் பெரியவர்கள் இதனை சாப்பிடுவதற்கு சற்று தயங்குவார்கள். எனவே உருளைக்கிழங்கை சமைக்கும் பொழுது சிறிதளவு மஞ்சள்தூள் சேர்த்து வேகவைத்து, மிளகாய்தூளிற்கு பதிலாக மிளகு, சீரகம் சேர்த்து சமைக்கும் பொழுது வாய்வு பிரச்சனை ஏற்படும் என்ற பயமில்லாமல் சாப்பிடலாம்.

curd

டிப்ஸ் : 5
சிறிய துண்டு தேங்காயை தயிருடன் சேர்த்து கலந்து வைத்தால் தயிர் சீக்கிரத்தில் புளிக்காமல் இருக்கும்.

- Advertisement -

டிப்ஸ் :6
என்னதான் சாம்பார் பொடி போட்டு சாம்பார் வைத்தாலும் அதன் நிறம் குறைவாகத்தான் இருக்கும். ஆனால் ஒரு பழுத்த தக்காளியை மிக்ஸியில் அரைத்து இறுதியாக சாம்பார் மீது சேர்த்தால் நல்ல சுவையுடனும் சிவந்த நிறத்துடனும் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

டிப்ஸ் : 7
புதியதாக டீத்தூள் வாங்கி வரும் பொழுது அதனை வெயிலில் காயவைத்து பிறகு பயன்படுத்தினால் நல்ல சுவையுடனும் நல்ல நிறத்துடனும் இருக்கும்.

karuveppilai

டிப்ஸ் : 8
காய்கறிகள் வாங்கும்போது இலவசமாக கிடைக்கும் கருவேப்பிலையை வீணாக்காமல் அவற்றை வெயிலில் காய வைத்து ஒரு டப்பாவில் எடுத்து வைத்துக் கொண்டால் வருடம் முழுவதும் தேவைப்படும் பொழுதெல்லாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.

டிப்ஸ் : 9
பச்சைமிளகாயின் காம்பை நீக்கிவிட்டு எடுத்து வைத்தோம் என்றால் பச்சை மிளகாய் சீக்கிரத்தில் வீணாகாமல் பல நாட்களுக்கு நன்றாக இருக்கும்.

Beetroot

டிப்ஸ் 10:
பீட்ரூட் சீக்கிரம் வதங்கி வீணாகாமல் இருக்க அதன் மேற்புற தண்டையும் அடிபுற வேர் பகுதியையும் நீக்கிவிட்டு ஒரு டப்பாவில் நியூஸ் பேப்பரை வைத்து அதனுள் பீட்ரூட்களை வைத்து, அதன் மேலேயும் நியூஸ் பேப்பர் அல்லது டிஷ்யூ பேப்பர் வைத்து மூடிபோட்டு வைத்தால் நீண்ட நாட்கள் நன்றாக இருக்கும்.

- Advertisement -