நாளை வைகாசி வளர்பிறை அஷ்டமி – இவற்றை செய்து அதிக பலன்களை பெறுங்கள்

bairavar
- Advertisement -

பொதுவாக வைகாசி மாதம் துஷ்ட சக்திகளை அழித்த உக்கிர சக்தி கொண்ட தெய்வங்களான முருகப்பெருமான், நரசிம்மர் போன்றோர்களுக்கு சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் செய்யும் மாதமாக இருக்கிறது. இந்த மாதத்தில் வருகின்ற பைரவருக்குரிய அஷ்டமி தினங்கள் சிறப்பானவை. அனைத்தையும் தீயவற்றில் இருந்து காக்கும் கடவுள்களாக இந்த காவல் தெய்வங்கள் இருக்கின்றனர். அதில் மிக அதிகம் பேரால் வழிபடப்படும் தெய்வமாக இருப்பவர் சிவனின் அம்சமான ஸ்ரீ பைரவர் ஆவார். பைரவரை வழிபடுவதற்குரிய சிறந்த தினங்கள் மாதந்தோறும் வரும் அஷ்டமி தினங்கள். அந்த வகையில் வைகாசி மாத வளர்பிறை அஷ்டமி தினத்தில் பைரவரை வழிபடுவதால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

kaala bairavar

நம் கஷ்டங்கள் அனைத்தையும் போக்கும் வழிபாடுகள் செய்வதற்கு சிறந்த தினம் அஷ்டமி தினம் என பெரியோர்களால் கூறப்பட்டுள்ளது. பைரவருக்கு பெரும்பாலும் ராகு கால நேரத்தில் தான் பூஜைகள் செய்யப்படுகின்றன. ஆனால் வளர்பிறை அஷ்டமி தினத்தில் எந்த நேரத்திலும் பைரவரை வழிபடலாம். நாளை திங்கட்கிழமை வரும் சிறப்பு மிக்க வைகாசி மாத வளர்பிறை அஷ்டமி தினம் பைரவர் வழிபாடு செய்ய சிறந்த தினமாகும். அன்று பைரவரை வழிபடுவதால் சிவபெருமானின் அருளும் நமக்கு கிடைக்கிறது.

- Advertisement -

வைகாசி வளர்பிறை அஷ்டமி தினம் காலை முதல் மாலை வரையில் பைரவருக்கு விரதம் இருந்து, மாலையில் அருகில் உள்ள வைரவர் கோயிலுக்கு அல்லது சந்நிதிக்கு சென்று பைரவருக்கு செவ்வரளி பூ மாலை சாற்றி, செவ்வாழைப்பழம் நைவேத்தியம் வைத்து, நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, பைரவருக்குரிய மந்திரங்கள் துதிகள் ஜெபித்து பைரவரை தியானிப்பதும்,வணங்குவது சிறப்பாகும்.

bairavar

மேற்சொன்ன முறைப்படி வைகாசி வளர்பிறை அஷ்டமி திதியில் பைரவப்பெருமானை வணங்குபவர்களுக்கு எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும். கண்திருஷ்டி, துஷ்ட சக்தியின் பாதிப்புகள், செய்வினை மாந்திரீக ஏவல்கள் போன்றவை முற்றிலும் ஒழியும். நெடுநாட்களாக உங்களுக்கு வந்து சேராமல் இருந்த பணவரவுகள் கூடிய விரைவில் உங்களிடம் வந்து சேரும். உங்களுக்கு லட்சுமி கடாட்சம் உண்டாகும். வீட்டில் நிலவி வந்த பொருளாதார கஷ்ட நிலை படிப்படியாக நீங்கும். வீண் செலவுகள் ஏற்படாமல் செல்வ சேர்க்கை அதிகரிக்கும். சோம்பல் தன்மை நீங்கி மனதில் உற்சாகமும் தன்னம்பிக்கையும் உண்டாகும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
கன்னி ராசியினாரின் வாழ்வில் அதிர்ஷ்டம் ஏற்பட இதை செய்ய வேண்டும்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Vaikasi valarpirai ashtami in Tamil. It is also called as Valarpirai ashtami palangal in Tamil or Ashtami bairavar valipadu in Tamil or Vaikasi matham in Tamil or Valarpirai ashtami valipadu in Tamil.

- Advertisement -