வலதுபுற தும்பிக்கையை கொண்ட விநாயகரை வீட்டில் வைக்கக் கூடாது ஏன் தெரியுமா?

vinayagar-thumbikai
- Advertisement -

முழுமுதற் கடவுளான விநாயகர் எல்லோருக்கும் மிகவும் பிடித்த கடவுள் ஆவார். சங்கடம் என்றால் உடனே தீர்க்கும் சங்கடஹர மூர்த்தியாக விளங்கும் விநாயகருக்கு பல முகங்கள் இருந்தாலும், பல பெயர்கள் இருந்தாலும் அவருடைய தும்பிக்கை மீது நம்பிக்கை வைத்து வழிபடுபவர்கள் ஏராளம். விநாயகர் சிலை அல்லது படம் இல்லாத வீடுகளே இல்லை என்று கூறலாம். இப்படி அனைவரும் வணங்கும் விநாயகருடைய தும்பிக்கை வலதுபுறம் இருந்தால் வீட்டில் வைக்கக் கூடாது என்கிற ஐதீகம் உண்டு அது ஏன்? என்கிற ஆன்மிகத் தகவல்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.

முழுமுதற் கடவுளான விநாயகர் சிலையை வீட்டில் வைத்திருந்தால் துஷ்ட சக்திகள் அணுகாது என்பது நம்முடைய நம்பிக்கையாக இருந்து வருகிறது. அதனால் தான் வீட்டின் முன் பகுதியில் விநாயகர் சிலையை பலரும் வைத்து வழிபட்டு வருகின்றனர். இப்படி வழிபடும் பொழுது விநாயகர் சிலையை எந்தெந்த இடங்களில் எப்படி வைக்கக்கூடாது? அதனால் உண்டாகும் விளைவுகள் என்ன? என்பதையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

- Advertisement -

விநாயகர் சிலையை வீட்டின் முகப்பில் நீங்கள் வைக்கும் பொழுது தனியாக வைக்கக் கூடாது. எந்த ஒரு அறையிலும் விநாயகரை நாம் பின்புறமாக இருந்து பார்க்கும்படி அமைக்கப்பட்டு இருக்கக் கூடாது, இதனால் வறுமை உண்டாகும். எனவே இப்படி பின்புறமாக முகப்பில் விநாயகரை வைப்பவர்கள் அதற்கு நேர் எதிரே இன்னொரு விநாயகரையும் வைத்து அதனை சரி செய்து விடலாம். இதனால் அதன் பாதிப்புகள் நம்மை தாக்காமல் இருக்கும்.

தலை வாசலுக்கு எதிராக விநாயகர் சிலையைப் வைத்திருந்தால் வீட்டிற்குள் நுழைய இருக்கும் துர் சக்திகளை விரட்டி அடித்து விடுவார் விநாயகர் என்கிற நம்பிக்கை உண்டு. விக்னங்களை தீர்க்கும் நாயகராக விளங்குவதால் விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். இவர் இருக்கும் இல்லத்தில் திருஷ்டி தோஷங்கள் எதுவும் அண்டாது. அதனால் தான் வீட்டிற்கு முன்பு விநாயகர் சிலையை வைத்து அதற்கு அபிஷேகங்களும், வழிபாடுகளும் பெரும்பாலான இல்லங்களில் முறையாக இன்றும் செய்து வருகிறார்கள்.

- Advertisement -

இந்த வகையில் வலது புறமாக தும்பிக்கை கொண்ட விநாயகரை வீட்டில் வைத்து வழிபடக் கூடாது என்கிற நியதியும் உண்டு. வலதுபுற தும்பிக்கை கொண்ட விநாயகருக்கு விசேஷ பூஜைகளும், வழிபாடுகளும் செய்வது வழக்கம். அதனால் தான் கோவில்களில் வலதுபுற தும்பிக்கை கொண்ட விநாயகர் அதிகம் இருக்கிறார். எனவே வலது புற தும்பிக்கை கொண்ட விநாயகரை நாம் வீட்டில் வைத்து வழிபடக் கூடாது. அதற்கு சரியான பராமரிப்பு நாம் செய்ய முடியாது என்பதால் கூடுமானவரை இதனை தவிர்ப்பது நல்லது.

இடது புற தும்பிக்கை உள்ள விநாயகர் அல்லது நேராக தும்பிக்கை இருக்கும் விநாயகரை வீட்டில் வைத்து வழிபடுவது சிறப்பு. எனவே விநாயகர் சிலை அல்லது படம் வாங்க நினைப்பவர்கள் இதனை கவனமாக பார்த்து வாங்குவது நல்லது. வலது கைகளை நோக்கிய தும்பிக்கை உள்ள விநாயகர் அதிசக்தி வாய்ந்ததாக கருதப்படுவதால் அதனை வீட்டில் வைத்து வழிபடும் பொழுது முறையான வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும். இதனை சரியாக கடைபிடிக்க முடியாதவர்கள் இடதுபுற அல்லது நேராக தும்பிக்கை உள்ள விநாயகரை வைத்து வழிபடலாம். இந்த விசேஷ விநாயகர் படங்களை வாங்கும் முன்பே கவனம் செலுத்துவது நல்லது. விநாயகர் சிலைகளை பரிசளிப்பவர்களும், இதனை கவனத்தில் கொண்டு வாங்கி பரிசளிப்பது நல்லது.

- Advertisement -