நம் வாழ்க்கையில் இந்த ஒரு தானத்தை ஒரு முறையேனும் செய்தால் இறந்த பின்பு அதிகம் துன்பப்பட வேண்டாமாம் தெரியுமா? என்ன தானம் அது?

karudalwar-pasu-dhanam
- Advertisement -

ஒரு மனிதன் வாழும் காலத்தில் செய்யும் புண்ணிய மற்றும் பாவ பலன்களுக்கு ஏற்ப சொர்க்க, நரகம் என்பது நிர்ணயிக்கப்படுவதாக சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. கருட புராணமும் அவர் அவர்களின் புண்ணிய பலனுக்கு ஏற்படும் துன்பமில்லா சொர்க்கமும், பாவ பலனுக்கு ஏற்ப நிம்மதி இல்லாத நரகமும் கிடைக்கும் என்று கூறுகிறது. அந்த வகையில் நம்முடைய வாழ்க்கையில் இந்த ஒரு தானத்தை, ஒரு முறையேனும் செய்தால், இறந்த பின்பு அதிகம் துன்பப்பட வேண்டாம் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. அப்படியான ஒரு தானம் என்ன? அதன் மகத்துவமான வியப்பிற்குரிய பலன்கள் என்ன? என்று தான் இந்த ஆன்மீக குறிப்பு தகவல்களின் மூலம் இனி தெரிந்து கொள்ள போகிறோம்.

இந்த உலகில் அனைத்து ஜீவராசிகளையும் விட, இந்த ஒரு ஜீவன் புனிதமானதாக கருதப்படுகிறது. அது தான் பசு! எல்லா விதமான நூல்களிலும் பசுவின் மகத்துவம் பற்றி பெருமளவில் போற்றி புகழப்படுகின்றது. பசு இருக்கும் இடங்களில் புண்ணியங்களும் நிறையும் என்று சாஸ்திரங்கள் சொல்லுகின்றது. ஒரு மனிதன் தன்னுடைய முழு வாழ்நாளில் ஒரே ஒரு முறையாவது பசுவை தானம் செய்திருக்க வேண்டுமாம். முன்பெல்லாம் கோ தானம் அதிக அளவில் நடைபெற்று வந்தது. ஆனால் இப்போது இவற்றை யாரும் செய்வது கிடையாது. இதனால் பாவங்களும் பெருகி வருகிறது. அதுமட்டுமல்லாமல் பசு வதையும் அதிகரித்து வருவதால் கலியுகத்தில் களியாட்டம் நடைபெறுகிறது.

- Advertisement -

நீங்கள் பசுவிற்கு செய்யும் சிறிய தானமும் அல்லது பசுவை கோவில்களுக்கோ அல்லது பசு வளர்ப்பவர்களுக்கோ தானம் செய்து வந்தால் அதைவிட புண்ணிய பலன் எதுவுமே கிடையாது. பாவங்கள் எவ்வளவு செய்தாலும், அதனை ஒன்றும் இல்லாமல் செய்யும் ஆற்றல் இந்த கோ தானம் எனப்படும் பசுவை தானம் செய்வதற்கு உண்டு.

விஞ்ஞானத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது உலகம். விஞ்ஞானம் எவ்வளவு வளர்ச்சியை காண்கிறதோ, அந்த அளவிற்கு உலகம் பல விதமான பாதிப்புகளுக்கு உள்ளாகி கொண்டிருக்கும். அப்படியான விஞ்ஞான பாதிப்புகளை கூட பசு இருக்கும் இடங்களில் பலிப்பதில்லை என்று புராணங்களும், சாஸ்திரங்களும் குறிப்பிடுகிறது.

- Advertisement -

எங்கெல்லாம் பசுக்கள் நிறைந்து காணப்படுகிறதோ, அங்கெல்லாம் இவ்விதமான விஞ்ஞான பாதிப்புகள் நெருங்குவது கிடையாது. ஒரு மனிதன் இறந்த பின்பு சொர்க்கம் அல்லது நரகம் செல்லும் வழிகளில் பலவிதமான துன்பங்களை, அவன் செய்த பாவங்களுக்கு ஏற்ப அனுபவிக்க வேண்டி இருக்கும். அதில் மிக மோசமாக பாவமாக கருதப்படுவது ‘வைதரணி’ என்னும் நதியை கடப்பது தான்.

இதையும் படிக்கலாமே:
முன்னோர்களின் ஆசி இல்லாததால் கஷ்டத்தில் உள்ளீர்களா? இந்த நாளில் வீட்டில் தூபம் போட்டால் போதும் முன்னோர்களின் ஆசியோடு சித்தர்களின் ஆசியும் பரிபூரணமாக கிடைக்கும்.

கொடூர பாவங்கள் செய்பவர்கள் வைதரணி என்னும் இந்த நதியை கடக்க மிகுந்த துன்பப்படுவார்களாம். மலம், சலம், சளி, சுடுநீர் ஆகியவை கலந்த இந்த நதியானது பெரும் துன்பம் அளிக்கக்கூடிய ஒன்றாக இருக்கும். இந்த நதியை எளிதாக கடக்க நாம் பசுவை தானம் செய்து இருந்தால் போதும். பசு தானம் செய்பவர்களுக்கு வைதரணி நதியை கடக்கும் பொழுது பசு தோன்றி அதன் வாலை கொடுத்து நம்மை எளிதாக அந்த நதியை கடக்க உதவி செய்யுமாம். இந்த வகையில் நாம் தெரிந்தும், தெரியாமலும் செய்யும் பாவங்களில் இருந்து மீண்டு வருவதற்கு பல விதமான புண்ணியங்களை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை மனதில் நிறுத்துங்கள்.

- Advertisement -