கஷ்ட காலம் மாற, சங்கடங்கள் தீர, லக்ஷ்மி கடாட்சம் உண்டாக வெள்ளிக் கிழமையில் தேங்காய் வைத்து இப்படி வழிபாடு செய்யுங்கள்!

coconut-lakshmi
- Advertisement -

குடும்பத்தில் இருக்கும் வறுமை நீங்க மகாலட்சுமி கடாட்சம் அவசியம் தேவை. கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணம் நம்மிடம் நம்முடைய தேவைக்கு கூட நிலைக்கவில்லை என்றால் அங்கும் வறுமை இருப்பதாக தான் அர்த்தமாகிறது. சம்பாதித்த பணத்தில் உங்களுக்கு தேவையானதை முழுமையாக உங்களால் செய்து கொள்ள முடியும் என்றால் உங்களிடம் லட்சுமி கடாட்சம் அதிகம் இருக்கிறது என்பது தான் அதன் அர்த்தம் ஆகும். அந்த வகையில் லட்சுமி கடாட்சம் பெருக, வெள்ளிக்கிழமை தோறும் தேங்காய் வழிபாடு எப்படி செய்வது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

mahalakshmi

ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் நீங்கள் வீட்டை சுத்தம் செய்ய வேண்டும். நீங்கள் வீட்டை சுத்தம் செய்யும் தண்ணீரில் கல் உப்பு மற்றும் மஞ்சள் கலந்து சுத்தம் செய்யுங்கள். இதனால் வீட்டில் இருக்கும் கெட்ட திருஷ்டிகள், துர் தேவதைகள், தீய தோஷங்கள் அனைத்தும் நீங்கும். அதன் பிறகு பூஜை அறையில் சுவாமி படத்தை எல்லாம் அலங்காரம் செய்து விட்டு பன்னீரை தெளித்து அங்கு ஒரு தலைவாழை இலையை விரித்து வையுங்கள். குத்து விளக்கு அல்லது காமாட்சி அம்மன் விளக்கில் நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி பஞ்சில் திரியிட்டு கொள்ளுங்கள்.

- Advertisement -

எல்லா சுவாமி படங்களுக்கும் மணமிக்க மலர்களால் அலங்காரம் செய்து கொண்ட பின்பு வாழை இலையில் முழு தேங்காயை மஞ்சள் பூசி வைக்க வேண்டும். தேங்காய்க்கு சந்தன, குங்கும திலகமிட்டு கொள்ள வேண்டும். அதன் மீது கொஞ்சம் பூ வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு தாம்பூல தட்டில் 108 மல்லிகை மலர்களையும், கொஞ்சம் குங்குமத்தை கிண்ணத்தில் போட்டும் வைக்க வேண்டும்.

mahalakshmi

மகாலட்சுமி மூல மந்திரம்:
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத,
ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மஹாலக்ஷ்மியை நம!!

- Advertisement -

இந்த மகா லட்சுமி பூஜையை பெண்கள், ஆண்கள் என்று வயது வித்தியாசமின்றி யார் வேண்டுமானாலும் துவங்கலாம். சுத்த பத்தமாக அமர்ந்து கொண்டு மேற்கூறிய இந்த மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். ஒவ்வொரு முறை நீங்கள் இந்த மந்திரத்தை உச்சரிக்கும் போதும், ஒவ்வொரு மல்லிகைப் பூக்களை எடுத்து தேங்காய் மீது அர்ச்சனை செய்ய வேண்டும். மல்லிகை பூவை அர்ச்சித்த பிறகு குங்குமத்தை எடுத்து அதே போல தேங்காய் மீது தூவி அர்ச்சிக்க வேண்டும்.

mahalakshmi

மணம் மிக்க மல்லிகை மலரில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம் உண்டு. அதே போல தூய குங்குமத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். மகாலட்சுமியை கொண்டு தேங்காய்க்கு அபிஷேகம் செய்யும் பொழுது முக்கண் உடையோன் ஆசீர்வாதம் கிடைக்கும். இதனால் குடும்பத்தில் இருக்கும் வறுமை நீங்கி செல்வ செழிப்பு அதிகரிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. பூஜை நிறைவடைந்த பின்பு மறுநாள் காலையில் குளித்து முடித்து விட்டு பூஜை அறையில் இருக்கும் தேங்காய் வலப்புறமாக நகர்த்தி வையுங்கள்.

coconut

பின்னர் அதனை ஒரு மஞ்சள் தோய்த்த சுத்தமான துணியில் வைத்து மஞ்சள் நூலினால் இறுக்க கட்டப்பட வேண்டும். இந்த முடிப்பிற்கு சந்தனம், குங்குமம் இட்டு உங்கள் பிரதான வாயிலாக இருக்கும் நிலை வாயிலில் நடுப்பகுதியில் ஆணி அடித்து மாட்டி விடுங்கள். அதன் பிறகு நீங்கள் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் பூஜை செய்யும் பொழுது இதற்கும் சேர்த்து தூப, தீப, ஆரத்தி காண்பிக்க வேண்டும் அல்லது சாம்பிராணி புகை போட வேண்டும். இப்படி செய்து வருவதன் மூலம் குடும்பத்தில் இருக்கும் எல்லா பிரச்சனைகளும் தீர்ந்து வறுமை நீங்கி நல்ல வாழ்வு பெறலாம் என்பது ஆன்மிக கருத்தாகும்.

- Advertisement -