கமகமக்கும் வத்தக்குழம்பு இந்த மழை நேரத்தில் இப்படி செய்து பாருங்கள்! அப்படி ஒரு ருசியை தரும்.

vatha-kulambu-recipe
- Advertisement -

மற்ற குழம்பு வகைகளை காட்டிலும் வத்தல் குழம்பு ரொம்பவே விரும்பி சாப்பிடுபவர்கள் ஏராளம் நம் தமிழ்நாட்டில் உண்டு. அதிலும் கல்யாணத்திற்கு சென்றாலே வத்த குழம்பை சாப்பிடாமல் விடுவதில்லை. இந்த மழைக்கால நேரத்தில் சுடச்சுட சாதத்துடன் எண்ணெய் தெளிய வத்த குழம்பை ஊற்றி சாப்பிட்டால் நாவில் ஜலம் ஊற ஆரம்பித்துவிடும். ருசி தரும் இந்த சுவையான வத்தல் குழம்பை நாம் சுலபமாக நம் வீட்டிலேயே எப்படி செய்வது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

manathakkali-vathal

வத்த குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:
புளி – ஒரு பெரிய எலுமிச்சைப்பழ அளவு, பெரிய தக்காளி – ஒன்று, பச்சை மிளகாய் – 2, பூண்டு பற்கள் – ஒரு கைப்பிடி அளவு, கருவேப்பிலை – ஒரு கொத்து, சின்ன வெங்காயம் – 150g, உப்பு – தேவையான அளவு, மணத்தக்காளி வத்தல் – அரை கப், நல்லெண்ணெய் – மூன்று டேபிள் ஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், வெந்தயம் – கால் டீஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், தனி மிளகாய் தூள் – அரை டீஸ்பூன், குழம்பு மிளகாய்த் தூள் – இரண்டு டேபிள் ஸ்பூன்.

- Advertisement -

வத்த குழம்பு செய்முறை விளக்கம்:
முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு அடி கனமான வாணலி ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். வத்த குழம்புக்கு நல்லெண்ணெய் பயன்படுத்துவது தான் நல்லது. உடலை உஷ்ணம் ஆகாமல் தடுக்கும். எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் அதில் வெந்தயம், கடலைப்பருப்பு ஆகியவற்றை தாளிக்க வேண்டும்.

manathakkali

பின்னர் ஒரு கொத்து கறிவேப்பிலை, உரித்து வைத்துள்ள சின்ன வெங்காயம், உரித்து வைத்துள்ள பூண்டு பற்கள் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து எண்ணெயில் வதக்க வேண்டும். பாதி வதங்கி வரும் பொழுது பொடி பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளி துண்டுகளை சேர்த்து வதக்க வேண்டும். இதனுடன் இரண்டு பச்சை மிளகாய்களை கீறி சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் மணத்தக்காளி வத்தல்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள். மணத்தக்காளிக்கு பதிலாக சுண்டைக்காய் வற்றலையும் சேர்க்கலாம்.

- Advertisement -

பின்னர் தேவையான அளவிற்கு உப்பு போட்டு வதக்கி விடுங்கள், நன்றாக வதங்கி வரட்டும். நன்கு மசிய வதங்கி வந்த பின்பு மசாலா பொருட்களை சேர்க்க வேண்டும். மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், குழம்பு மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து அடி பிடிக்காமல் கிளறி விடுங்கள். பச்சை வாசம் போக நன்கு வதக்கிய பின்பு நீங்கள் கரைத்து வைத்துள்ள புளி தண்ணீரை ஊற்ற வேண்டும்.

vatha-kulambu-recipe1

குழம்பு எந்த அளவிற்கு கெட்டியாக வேண்டுமோ, அந்த அளவிற்கு நீங்கள் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். ஒரு ஐந்து நிமிடம் மூடி போட்டு கொதிக்க விட்டால் போதும்! குழம்பு நன்கு கெட்டியாகி வரும். பிறகு திறந்த நிலையில் இன்னும் நன்கு சுண்ட விட்டால் எண்ணெய் தெளிய கமகமக்கும் வத்தல் குழம்பு தயாராகிவிடும். இதே முறையில் இதே அளவுகளில் நீங்களும் ஒருமுறை வீட்டில் செய்து பார்த்து அசத்துங்கள்.

- Advertisement -