உங்கள் கையால் இந்த மாலையை இறைவனுக்கு சாத்திவிட்டு என்ன வேண்டினாலும் அது அப்படியே நடக்கும்.

vettiver-malai
- Advertisement -

வேண்டுதல் நிறைவேற இறைவனுக்கு நாம் எத்தனையோ வகைகளில் பிரார்த்தனையை செய்து கொள்வோம். பொங்கல் வைப்பது, கிடா வெட்டுவது, அபிஷேகம் செய்வது, புடவை சாத்துவது, அங்கப்பிரதட்சனம் முதல் மொட்டை அடிப்பது வரை நிறைய வேண்டுதல்கள் வரிசையில் உண்டு. இருப்பினும் இறைவனுக்கு நம் கையால் வாசனை நிறைந்த ஒரு பூவை வாங்கி கொடுப்பதில் இருக்கக்கூடிய திருப்தி என்பது எந்த வேண்டுதலுக்கும் ஈடு இணையாகாது. வாசனை மிகுந்த மலர்களை நம் கையாலேயே எடுத்து தொடுத்து இறைவனுக்கு போட்டால் அது இன்னும் சிறப்பானது. அந்த வரிசையில் வெட்டிவேர் மாலையின் சிறப்பைப் பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

vettiver1

எந்தெந்த கிழமைகளில் வெட்டிவேர் மாலையை இறைவனுக்கு சூட்டினால் என்னென்ன பலன்களை நம்மால் பெறமுடியும். தெரிந்து கொள்வோமா?

- Advertisement -

திங்கட்கிழமை அன்று வெட்டிவேர் மாலையை இறைவனுக்கு சாத்தினால் பணவரவு அதிகரிக்கும். கடன் சுமை, வீண் விரையங்கள் குறையும். செவ்வாய்க்கிழமை அன்று வெட்டிவேர் மாலை இறைவனுக்கு சாத்தினால் வீடு மனை சொத்து சுகம் வாங்க கூடிய யோகம் கிடைக்கும். அடமானத்தில் வைத்த நகையை சீக்கிரம் மீட்கலாம். அடமானம் வைத்த சொத்து சுகத்தையும் சீக்கிரமாக மீட்டெடுக்கலாம்.

vettiver-malai1

புதன்கிழமை அன்று வெட்டிவேர் மாலையை இறைவனுக்கு சாத்தினால் கல்வியில் சிறந்து விளங்கலாம். வேலை இல்லாதவர்களுக்கு சீக்கிரமே வேலை கிடைக்கும். வியாழக்கிழமை அன்று வெட்டிவேர் மாலையை இறைவனுக்கு சாத்தினால் குருவின் பார்வை நம் மேல் விழும். கோடி நன்மைகள் வாழ்க்கையில் நமக்கு நடக்கும். வெள்ளிக்கிழமை அன்று வெட்டிவேர் மாலையை இறைவனுக்கு சாத்தினால் திருமண யோகம் கைகூடி வரும். வீட்டில் தடைப்பட்டுவந்த சுபகாரிய விசேஷங்களும் சீக்கிரமே நடக்கும்.

- Advertisement -

சனிக்கிழமை அன்று வெற்றிவேல் மாலையை இறைவனுக்கு சாத்தினால் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை வெட்டிவேர் மாலை இறைவனுக்கு சாத்தினால் பெற்றோரின் அனுகிரகம் கிடைக்கும். உங்களுக்கு என்னென்ன தேவைகள் இருக்கின்றதோ அதை பூர்த்தி செய்து கொள்ள வெட்டிவேர் மாலையை அந்தந்த கிழமைகளில் உங்களுடைய இஷ்ட தெய்வத்திற்கு சாத்தி விட வேண்டும். வெட்டிவேர் மாலையை குறிப்பிட்டு இந்த தெய்வத்திற்கு தான் போட வேண்டும் என்ற எந்த அவசியமும் கிடையாது. எந்த தெய்வத்திற்கு போட்டாலும் பலன் ஒன்றே.

god-photo-frames

முடிந்தால் வெட்டிவேரை வாங்கி அதை சீர்படுத்தி மாலையாக உங்கள் கையாலேயே கட்டி இறைவனுக்கு போடுவது ரொம்ப ரொம்ப நல்லது. முடியாதவர்கள் வெட்டிவேர் மாலையாக வாங்கி இறைவனுக்கு அணிவிக்கலாம். இது போல எத்தனை வாருங்கள் செய்வது. உங்களுடைய வேண்டுதலுக்கு ஏற்றவாறு 11 வாரம், 21 வாரம் அல்லது 3 வாரம், 5 வாரம் என்று கணக்கு வைத்துக் வேண்டுதலை நிறைவேற்றி பாருங்கள். உங்களுடைய வேண்டுதலும் மணக்க மணக்க இனிக்க இனிக்க இனிதே நிறைவேறும்.

- Advertisement -