இந்த தண்ணீரை மட்டும் வீட்டின் மூலை முடுக்குகளில் தெளித்து விட்டு, அதன் பின்பு பூஜை செய்தால், உங்கள் வீட்டில் செய்யும் பூஜைக்கு எந்த தடையும் வராது. பூஜைக்கான பலனும் முழுமை பெறும்.

nilavasal

சில பேர் வீடுகளில் பூஜை புனஸ்காரங்களை செய்யத் தொடங்கும்போதே, பிரச்சினைகள் வர ஆரம்பித்து விடும். முட்டிமோதி பிரச்சனைகளை சமாளித்து, பூஜையை நிறைவாக முடிவு செய்தாலும், பூஜைக்கு பின்பும் வீட்டில் சண்டை சச்சரவு நிம்மதியற்ற சூழல் ஏற்படும். இதற்கெல்லாம் என்ன காரணம்? வழக்கம் போல கண்ணுக்கு தெரியாத கண் திருஷ்டியும், எதிர்மறை ஆற்றல்களும் தான் காரணமாக இருக்கும். இதை முழுமையாக நீக்க, நம்முடைய வீட்டில் நாம் செய்யும் பூஜைக்கு, முழுமையான பலனை பெற, என்ன செய்யலாம் என்பதைப் பற்றிய சில ஆன்மீக குறிப்புகளை இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

mop1

இதோடு மட்டுமல்லாமல் தினந்தோறும் வீட்டை துடைக்க முடியாதவர்கள், இந்த குறிப்பை பின்பற்றி வந்தால் தினந்தோறும் வீடு துடைத்த சுத்தத்தையும், மன திருப்தியையும் அடைய முடியும். இரவே ஒரு சிறிய பித்தளை சொம்பில் சுத்தமான தண்ணீரை ஊற்றி நிரப்பிக் கொள்ளுங்கள். அந்த தண்ணீரில் படிகார தூள், மஞ்சள் பொடி, சூடம் (சாதாரண கற்பூரம்), வேப்ப இலை, இந்தப் பொருட்களை எல்லாம் சேர்த்து முந்தைய நாளே நன்றாக கரைத்து வைத்து பூஜை அறையிலேயே வைத்து விட வேண்டும்.

அடுத்த நாள் காலை வீட்டை சுத்தமாக, மூலைமுடுக்குகளில் எல்லாம் தூசி இல்லாமல் கூட்டி விட்டு, அதன் பின்பு இந்த தண்ணீரை வீட்டின் மூலை முடுக்குகளில், மற்ற இடங்களில் தெளித்து விட வேண்டும். முடிந்தவரை மா இலை அல்லது வெற்றிலையில் தெளிக்க பாருங்கள். அதுவே முழு பலனை கொடுக்கும். முடிந்தால் காலை நிலவாசல்படியில் தண்ணீர் தெளித்து கோலம் போடும் பொழுது, நில வாசப்படிக்கு முன்பக்கத்தில் மட்டும் இந்த தண்ணீர் தெளிப்பது மேலும் சிறப்பை தரும். வீட்டிற்கு ஐஸ்வர்யத்தை கொடுக்கும்.

kalasam-sembu-lakshmi

வீட்டில் குப்பைகளை கூட்டி எடுத்தால், அதை ஒரு ஓரங்களில் குழிக்கும் பழக்கத்தை அடியோடு நிறுத்தி விடுங்கள். பெண்கள் இப்படி செய்வது அவ்வளவு சரியான முறை அல்ல. நம்முடைய வீட்டிற்கும் அது கஷ்டத்தை தான் கொடுக்கும். வீட்டில் சுபகாரிய தடை ஏற்படுவதற்கு முதல் காரணமே, குப்பையை பெண்கள் ஓரமாக ஒதுக்கி வைப்பதுதான். குப்பையை உடனே முறத்தில், எடுத்து குப்பைத் தொட்டியில் கொட்டி விடுவது நல்லது.

- Advertisement -

முடிந்த வரை வாரத்தில் இரண்டு நாட்கள் வீட்டை துடைத்து சுத்தம் செய்ய வேண்டும். முடியாதவர்கள் வாரத்தில் ஒரு நாளாவது வீட்டை கழுவி விட முடிந்தால் கழுவி விட்டு விடலாம். அப்படி இல்லையென்றால் மாப் போடுவது நல்லது. இதையும் தாண்டி தினமும் வீடு சுத்தமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், மேல் சொன்ன தண்ணீரை தெளித்து விட்டால் போதும்.

mahalakshmi

கண்ணுக்குத் தெரியாத கிருமிகள், கண்ணுக்கு தெரியாத தோஷங்கள் கூட விலகுவதற்கு இது துணை நிற்கும். முடிந்தால் ஒரு சிறிய மூடி கோமியத்தையும் இந்த தண்ணீரோடு கலந்து கொள்ளுங்கள். மேலும் நன்மை கொடுக்கும் என்ற தகவலோடு இந்த பதிவை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
வாழ்வில் அடுத்தடுத்த கட்டத்திற்கு முன்னேற, பதவி உயர்வு கிடைக்க 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய பரிகாரம் என்ன?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.