இந்த சின்ன சின்ன குறிப்புகள் கூட சமையலறையில் ஒரு சில நேரங்களில் உங்களுக்கு பெரியதாக உதவி செய்யும். மிஸ் பண்ணாம இதையும் கொஞ்சம் தெரிஞ்சிக்கோங்க.

cooking1
- Advertisement -

எதிர்பாராத சமயங்களில் நமக்கு தெரிந்திருக்கும் சின்ன சின்ன குறிப்புகள் சில நேரங்களில் பெரிய அளவில் கை கொடுக்கும். அப்படிப்பட்ட சின்ன சின்ன குறிப்புகள் உங்களுக்காக இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. டிப்ஸை தேவைப்படும்போது ட்ரை பண்ணி பாருங்க. நிச்சயமா உங்களுக்கு பயனுள்ளதாக தான் இருக்கும். பெண்களின் சமையலறை வேலையை சுலபமாக்க, சுவையாக்க 7 குறிப்புகள்.

Tip 1:
இறுதியாக இருக்கும் தோசை மாவில், தோசை வார்த்தால் சாஃப்டாக மொறுமொறுவென நமக்கு கிடைக்காது. இறுதியாக ஐந்து தோசை வரும் அளவிற்கு மாவு மிச்சமிருந்தால் அதில் 2 டேபிள் ஸ்பூன் அளவு நல்லெண்ணெயை ஊற்றி நன்றாக கலந்து விடுங்கள். அதன் பின்பு தோசை வார்த்துப் பாருங்கள். தோசை சாஃப்ட்டாக கிடைக்கும்.

- Advertisement -

Tip 2:
கேரட்டை துருவி பொறியல் செய்வது என்பது கொஞ்சம் சிரமமான விஷயம்தான். கேரட்டை ஓரளவு துண்டு துண்டுகளாக வெட்டி, கொஞ்சம் கொஞ்சமாக மிக்ஸி ஜாரில் போட்டு பல்ஸ் மோடில் விட்டு விட்டு அரைத்தால் கேரட், துருவிய கேரட் போல நமக்கு கிடைத்துவிடும். சீக்கிரம் கேரட் பொரியல் செய்து எடுத்து விடலாம்.

Tip 3:
இல்லத்தரசிகள் எல்லோருக்குமே பூண்டை உரிப்பது கஷ்டமான விஷயம்தான். பூண்டை தனித்தனி பல்லாக பிரித்து எடுத்து விடுங்கள். மேல் காம்பு பக்கத்தை மட்டும் கத்தியை வைத்து நீக்கி விடுங்கள். மேலே தலை பாகம் வெட்டப்பட்ட பூண்டுகளை ஒரு தட்டில் வைத்துவிட்டு, மைக்ரோவேவில் 10 வினாடிகள் வைத்து வெளியே எடுத்தால் போதும். பூண்டின் வால் பகுதியை பிடித்து இழுத்தால் பூண்டில் இருக்கும் தோல் அத்தனையும் வந்து விடும்.

- Advertisement -

மைக்ரோ ஓவன் உங்கள் வீட்டில் இல்லை என்றால் பூண்டின் மேல் தலை காம்பு பகுதியை வெட்டி விடுங்கள். அதன் பின்பு அந்த பூண்டுகளை வெதுவெதுப்பான தண்ணீரில் போட்டு 10 நிமிடங்கள் அப்படியே வைத்துவிட்டு, அதன் பின்பு வால் பகுதியை லேசாக அசைத்து கொடுத்தாலே போதும். பூண்டு தோலை சுலபமாக உடைத்து விடலாம்.

Tip 4:
மூடி வைத்திருக்கும் ஃபிளாஸ்கை திரும்பவும் எடுத்து பயன்படுத்தும்போது, அதில் கெட்ட வாடை அடிக்கும். பிளாஸ்க் ஸ்டோர் செய்யும் போது அதில் ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து மூடி எடுத்து வைத்தால், உள்ளே கெட்ட வாடை அடிக்காது. மீண்டும் பயன்படுத்தும் போது ஒரு முறை வெந்நீரில் கழுவி பயன்படுத்தினாலே போதும்.

- Advertisement -

Tip 5:
நீங்கள் செய்யும் குழம்பு கிரேவி எதுவாக இருந்தாலும் அதில் இன்னும் கொஞ்சம் கூடுதலான சுவை கிடைக்க, இறுதியாக அடுப்பை அணைத்து அதற்கு முன்பு அந்தக் குழம்பில் 1 ஸ்பூன் நெய்யை சேர்த்து கலந்து விட்டு அடுப்பை அணைத்து விடுங்கள்.

Tip 6:
அப்பளத்தை எண்ணெயில் போட்டு பொறிப்பதற்கு முன்பு அப்பளத்தின் மேலே இருக்கும் மாவை ஒரு வெள்ளைத் துணியை வைத்து நன்றாக துடைத்து விடுங்கள். அதன் பின்பு அப்பளத்தை பொரித்தால் எண்ணெயில் அடியில் கசடு நிற்காது.

Tip 7:
கொண்டைக்கடலை, மொச்சை கொட்டை, பச்சைப் பட்டாணி, இவைகளை முந்தைய நாளே ஊற வைக்க மறந்து விட்டீர்களா. ஒரு ஹாட் பேக்கை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் சுடசுட வெந்நீரை ஊற்றி விடுங்கள். அதில் கொண்டைக்கடலையை போட்டு ஹாட் பேக்கை மூடிவிடுங்கள். குறைந்தது 2 மணி நேரத்தில் கொண்டைக்கடலை சூப்பராக தண்ணீரில் ஊறி விடும். 8 மணி நேரம் ஊற வைத்த கொண்டக்கடலை எப்படி இருக்குமோ அதே போல் தான் இந்த கொண்டைக் கடலையும் இருக்கும். உறிய கொண்டைக் கடலைகளை நீங்கள் சமைப்பதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -