கடன் வறுமை பிரச்சனை எதுவும் எங்களுக்கு இல்லை என்ற வார்த்தை நீங்கள் சொல்ல வேண்டுமானால் இதையெல்லாம் மட்டும் எப்போதும் இல்லை என்று தவறியும் கூட சொல்ல கூடாது.

mahalakshmi silarai writing
- Advertisement -

ஒரு வீடு நல்ல செழிப்பாக இருக்க வேண்டும் எனில் அந்த வீட்டில் முக்கியமாக லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்க வேண்டும். அப்படி லட்சுமி கடாட்சம் நிறைந்து இருக்கக் கூடிய பொருள்களை வீட்டில் எப்பொழுதும் நிறைவாக வைத்து இருக்க வேண்டியது அவசியம் என்று சாஸ்திரங்கள் சொல்கிறது. அப்படியான பொருட்களை என்ன காரணத்திற்காகவும் இல்லை என்றும் சொல்லக் கூடாது. அப்படி எந்தெந்த பொருட்களை நாம் நிறைவாக வைத்திருக்க வேண்டும். எந்தப் பொருள்களை இல்லை என்ற வார்த்தை பயன்படுத்தவே கூடாது என்பதை பற்றியும் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

வீட்டில் இல்லை என்று சொல்லக் கூடாத பொருள்கள்
இந்த வகையில் முதலில் சமையலறையில் உள்ள பொருள்களை தான் இல்லை என்று சொல்லக் கூடாது என்று சாஸ்திரங்கள் சொல்கிறது. அதிலும் குறிப்பாக சமையலுக்கு பயன்படுத்தும் துவரம் பருப்பு, அரிசி போன்ற பொருட்களை இல்லை என்று சொல்லக் கூடாது. இவை இரண்டுமே பணவரவுக்கு மட்டும் அல்ல அன்னபூரணி தாயாரின் அம்சம்.

- Advertisement -

அடுத்து மிக முக்கியமானது கல் உப்பு. இந்த கல்லுப்பை எந்த காலத்திலும் இல்லை என சொல்லக் கூடாது. அதே நேரத்தில் கல் உப்பு எப்போதும் அந்த ஜாடியில் நிறைவாக இருக்க வேண்டும். கல்லுப்பு என்பது மகாலட்சுமி தாயாரின் அம்சமாகவே பார்க்கப்படுகிறது. மற்றொன்று சில்லறை காசுகள் பண நோட்டுகளை விட சில்லறை காசுகளின் சத்தத்தை மகாலட்சுமி தாயாருக்கு மிகவும் பிடிக்கும். அந்த சில்லறை காசை யாரேனும் உங்கள் வீட்டில் சில்லரை இருந்தால் தாருங்கள் என கேட்கும் போது இல்லை என்று சொல்லாமல் பார்க்கிறேன் என்று சொல்லுங்கள் அல்லது இருந்தால் எடுத்து கொடுங்கள்.

அடுத்து பேப்பர் பேனா போன்ற படிப்பு சம்பந்தமான பொருட்களை குழந்தைகள் கேட்கும் போது வீட்டில் உள்ளவர்கள் கேட்கும் போது தேடி எடுத்து சிரமப்பட்டு இல்லை என்று சொல்லக் கூடாது. படிப்பு சம்பந்தமான பொருட்கள் எல்லாம் குருவின் அம்சம். அதே போல் வீட்டில் வஸ்திரங்களை இல்லை என்று சொல்லக்கூடாது. ஏதேனும் ஆலயத்திற்கு வந்து கேட்டாலோ அல்லது இல்லாதவர்கள் வந்து கேட்டாலும் வஸ்திரங்கள் இல்லை என்று சொல்லக் கூடாது. வீட்டில் இல்லை என்றாலும் பார்க்கிறேன் அல்லது பிறகு தருகிறேன் என்ற வார்த்தையை சொல்லி பழகுங்கள்.

- Advertisement -

இவை அனைத்திலும் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுவது தேன் சமையலறையில் எப்பொழுதும் தேன் இருக்க வேண்டும். சுவாமிக்கு எந்த நெய்வேதியம் படைத்தாலும் சிறிதளவு தேன் வைத்து படைப்பது மிகவும் சிறப்பு எனவே தேன் வீட்டில் எப்போதும் இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். அதே போல் வீட்டில் எப்போதும் கொஞ்சமாவது மலர்களை வாங்கி வைத்திருக்க வேண்டும் பூக்கள் இல்லாமல் இருக்கவே கூடாது.

பூஜை அறையில் இருக்கும் பொருட்களில் மங்களப் பொருட்களை இல்லை என்று சொல்லக் கூடாது. மஞ்சள், குங்குமம், தாலி சரடு போன்றவை எல்லாம் எப்போதும் இருக்க வேண்டும் அதையும் இல்லை என்று சொல்லக்கூடாது வீட்டிற்கு யாரேனும் வந்தால் நிச்சயமாக இந்த மங்களப் பொருட்களை நாம் கொடுப்பது வீட்டிற்கு நல்ல ஒரு சுபிட்சத்தை தரும். சமையலறையில் எப்படி தேன் இருக்க வேண்டுமோ அதே போல் பூஜை அறையில் குண்டு மஞ்சள் கட்டாயமாக வைத்திருக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: தீராத ஆசைகள் தீர, வேண்டுதல்கள் நிறைவேற 7 நாட்கள் விநாயகரை இப்படி வழிபட்டு பாருங்கள் நினைத்தது நடந்தே தீரும்!

மேலே சொன்ன இந்த பொருள்கள் எல்லாம் நம் வீட்டிற்கு ஐஸ்வர்யத்தை வழங்கக் கூடிய பொருட்கள். நம்மால் முடிந்த அளவிற்கு இந்த பொருட்கள் எல்லாம் சுத்தமாக தீரும் வரை காத்திருக்காமல் வாங்கி வைக்க வேண்டும். ஒரு வேளை இல்லை என்றாலும் அதை கேட்கும் போது இல்லை என்று சொல்லாத அளவிற்கு கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். இதை சரியாக பயன்படுத்தும் போது நம்முடைய குடும்பத்துக்கு வறுமையே வராது. இந்த பதிவில் உள்ள கருத்துக்களில் உங்களுக்கு நம்பிக்கை இருப்பின் நீங்களும் உங்கள் குடும்பத்தில் இதை பின்பற்றி செல்வ செழிப்பான வாழ்க்கையை வாழுங்கள்.

- Advertisement -