நவராத்திரியில் மகாலட்சுமி தாயாரை இப்படி வழிபாட்டால் வீட்டில் செல்வ வளத்திற்கு குறைவே இருக்காது

mahalakshmi karumanjal
- Advertisement -

அம்பிகை வழிபாடுகளிலே இந்த நவராத்திரி கால வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக சொல்லப்படுகிறது. முப்பெரும் தேவியர்களையும் ஒன்றாக நினைத்து ஒவ்வொரு தேவியருக்கென தனித்தனியாக பூஜை செய்து அவர்களை வழிபடுவோம். அப்படியான இந்த நவராத்திரி கால வழிபாட்டில் மகாலட்சுமி தாயாரை நினைத்து இந்த ஒரு வழிபாடு செய்யும் பொழுது வீட்டில் செல்வ வளம் நிறைந்து இருக்கும்.

நவராத்திரி வழிபாடு செய்பவர்களும் அத்துடன் சேர்த்து இந்த வழிபாட்டை செய்யலாம். ஒரு வேளை உங்களுக்கு நவராத்திரி கொலு வைத்து வழிபடும் வழக்கம் இல்லாமல் இருந்தாலும் இந்த ஒரு வழிபாட்டை மட்டும் தனியாகவும் செய்யலாம். ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் அந்த நவராத்திரி வழிபாடு குறித்து தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

நவராத்திரி காலத்தில் செய்ய வேண்டிய வழிபாடு

இந்த வழிபாட்டிற்கு மகாலட்சுமி தாயாரின் உருவம் பதித்த வெள்ளி நாணயம் இருந்தால் நல்லது. இப்பொழுது கடைகளில் மிகவும் குறைந்த விலையில் நாணயங்கள் கிடைக்கிறது அதை வாங்கி கொள்ளுங்கள். இதை வாங்க முடியாதவர்கள் மட்டும் ஒரு ரூபாய் நாணயத்தை பயன்படுத்துங்கள்.

அடுத்து மூன்று கருமஞ்சள் வாங்கிக் கொள்ளுங்கள். இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் அல்லது ஆன்லைன்களில் அதிகமாக விற்பனையாகிறது அப்படியும் வாங்கிக் கொள்ளலாம். இதிலும் எங்களால் கருமஞ்சள் கிடைக்க வில்லை அல்லது வாங்க வசதி இல்லை என்பவர்கள் அதற்கு பதிலாக குண்டு மஞ்சள் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இதற்கு முடிந்த வரையில் வெள்ளி நாணயத்தையும் கருமஞ்சளையும் பயன்படுத்துங்கள்.

- Advertisement -

இந்த வழிபாட்டை நவராத்திரி காலத்தில் மாலையில் செய்வது தான் சிறப்பு. இந்த 9 நாட்களுக்குள் எந்த நாளில் வேண்டுமானாலும் வழிபாட்டை தொடங்கலாம். இதை தொடங்கிய நாளிலிருந்து விஜயதசமி அன்று வரை செய்ய வேண்டும். இதற்கு சிகப்பு நிறத்திலான ஒரு துணி எடுத்துக் கொள்ளுங்கள். அதே போல் வெள்ளி நாணயம், கருமஞ்சள் ஆகியவற்றை தயாராக எடுத்து வைத்து விடுங்கள்.

இப்போது பூஜை அறையில் மகாலட்சுமி தாயார் படத்திற்கு முன்பாக அகல்விளக்கில் நெய் ஊற்றி தீபம் ஏற்றி வைத்து விடுங்கள். அதன் பிறகு ஒரு தாம்பாள தட்டை எடுத்து இந்த வெள்ளி நாணயத்தை முதலில் தண்ணீர், பால், பன்னீர் என இவற்றால் அபிஷேகம் செய்த பிறகு அந்த தண்ணீரை கல்படாத இடத்தில் ஊற்றி விடுங்கள். அதன் பிறகு இந்த வெள்ளி நாணயத்தை துடைத்து தட்டில் வைத்து விடுங்கள். அத்துடன் கருமஞ்சளையும் வைத்து விடுங்கள்.

- Advertisement -

இப்போது தட்டில் இருக்கும் இந்த நாணயத்திற்கும் கருமஞ்சளுக்கும் குங்குமம் அர்ச்சனை செய்ய வேண்டும். இந்த நேரத்தில் லட்சுமி மந்திரம், அம்பிகையின் மந்திரம் இப்படி உங்களுக்கு தெரிந்த எந்த மந்திரம் இருந்தாலும் சொல்லலாம். இது எதுவும் தெரியாது என்பவர்கள் ஒம் மகாலட்சுமி தாயே போற்றி என்ற நாமத்தை சொல்லி கொண்டே அர்ச்சனை செய்து விடுங்கள்.

விஜயதசமி அன்று வரை இந்த வழிபாட்டை தொடர்ந்து செய்த பின் தட்டில் இருக்கும் குங்குமம், காயின், கருமஞ்சள் அனைத்தையும் மூட்டையாக கட்டி பீரோவில் வைத்து விடுங்கள்.அதன் பிறகு வெள்ளிக்கிழமைகளில் பூஜை செய்யும் பொழுதெல்லாம் தூபம் மட்டும் காட்டி விடுங்கள் போதும்.

இதையும் படிக்கலாமே: இந்த ஒரு வேரை குங்குமத்துடன் சேர்த்து வைத்தால் அனைத்து விதமான வசியமும் ஏற்படும்.

இதனால் வீட்டில் நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு ஐஸ்வர்யங்கள் பெருகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த வழிபாட்டு முறையில் நம்பிக்கை இருப்பின் நவராத்திரி காலத்தை தவற விடாமல் பயன்படுத்தி செய்து விடுங்கள்.

- Advertisement -