தடைப்பட்ட காரியம் நடக்க பிரதோஷ வழிபாடு

siva lingam manthiram
- Advertisement -

முப்பெரும் தெய்வங்களில் ஒருவரான சிவபெருமானை வணங்கவும் அவரின் அருளாசியை பெறவும் இந்த பிரதோஷ வழிபாடு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த பிரதோஷமானது மாதத்தில் இரண்டு முறை வரும். ஒன்று வளர்பிறை பிரதோஷம் மற்றொன்று தேய்பிறை பிரதோஷம். இதில் ஒவ்வொரு நாளில் வரக் கூடிய பிரதோஷம் கூட ஒவ்வொரு விசேஷமான பலனை தரக் கூடியதாக அமைந்துள்ளது.

அந்த வகையில் தேய்பிறை வெள்ளிக்கிழமையின் வரும் இந்த பிரதோஷ நாளில் சிவபெருமானை நினைத்து நாம் வீட்டிலேயே எளிமையாக இந்த மந்திரத்தை சொல்லி வழிபட்டால் இதுவரை தடைப்பட்ட காரியங்கள் அனைத்தும் சிறப்பு நடப்பதுடன் வீட்டில் நல்லது தொடர்ச்சியாக நடக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அந்த வழிபாட்டை பற்றி ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

நல்லது மட்டுமே நடக்க பிரதோஷ வழிபாடு

இன்றைய தினத்தில் பிரதோஷ வழிபாடு செய்பவர்கள் காலை முதலே விரதத்தை தொடங்க வேண்டும். விரதம் ஏற்க முடியாதவர்கள் எளிமையாக உணவை கொண்டு விரதத்தை தொடரலாம். இன்றைய தினத்தில் பூஜையறையில் தீபம் ஏற்றி வைத்து சிவபுராணத்தை படிக்கலாம் அல்லது ஒலிக்க விட்டு கேட்கலாம்.

மாலை நேரத்தில் பிரதோஷ நேரமான 4.30 லிருந்து 6.00 மணி வரையிலான இந்த நேரத்தில் பூஜை அறையில் ஒரு விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள். வீட்டில் சிவலிங்கம் வைத்து வழிபடுபவர்கள் இந்த நேரத்தில் சிவன் லிங்கத்திற்கு பாலபிஷேகம் செய்து வழிபட்டால் பல மடங்கு நன்மை பயக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

- Advertisement -

சிவலிங்கம் இல்லாதவர்கள் சிவபெருமான் படம் மட்டும் தான் உள்ளது எனில் ஒரு டம்ளர் பாலை மட்டும் வைத்து வணங்கினால் போதும். சிவபெருமானின் படம் கூட இல்லை என்றாலும் நீங்கள் ஏற்றி இருக்கும் தீபத்திலேயே சிவபெருமான் இருப்பதாக பாவித்து கொண்டு வணங்குங்கள் நிச்சயம் அவர் அருள் புரிவார்.

இன்றைய நாளில் அருகில் இருக்கும் சிவாலயத்திற்கு சென்று சிவனை வழிபடுவது மிகவும் நல்லது. இவையெல்லாம் செய்த பிறகு மாலையிலும் சிவபுராணத்தை படிக்க வாய்ப்பு உள்ளவர்கள் கட்டாயமாக படியுங்கள். படிக்க முடியாதவர்கள் இந்த நேரத்தில் கேட்கவாவது செய்யுங்கள். இப்போது நீங்கள் ஏற்றிருக்கும் தீபத்தின் முன் அமர்ந்து இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும்.

- Advertisement -

ஓம் தத் புருஷாய வித்மகே
மகா தேவாய தீமஹி
தன்னோ ருத்ர பிரத்யோதாயாத்

என்ற இந்த மந்திரத்தை 11 முறை சொல்ல வேண்டும். அதன் பிறகு நீங்கள் நெய்வேத்தியமாக வைத்திருக்கும் பாலை அருந்தி வீட்டில் உள்ளவர்கள் பிரசாதமாக கொடுங்கள்.

இந்த தீபத்தை பிரதோஷ காலத்தில் ஏற்றுவது மிகவும் சிறந்தது. ஒரு வேளை ஏற்ற முடியாது சூழ்நிலையில் உள்ளவர்கள் மாலை 6.30 மணிக்கு மேல் 9 மணிக்குள்ளாவது இந்த தீபத்தை ஏற்றி இப்படி வழிபாடு செய்து கொள்ளுங்கள். இந்த தீப வழிபாட்டை செய்தால் உங்கள் வீட்டில் நல்ல காரியங்கள் தொடர்ந்து நடக்கும். நல்ல செய்திகள் உங்களைத் தேடி வரும். தீராத பிரச்சனைகள் தீரும்.

இதையும் படிக்கலாமே: அதிர்ஷ்டம் தரும் தீபம்

இந்த பிரதோஷ கால மந்திர வழிபாட்டு முறையில் உங்களுக்கும் விருப்பம் இருந்தால் நீங்களும் இது போல எளிமையாக உங்கள் வீட்டில் பூஜை செய்து கொள்ளலாம். இதன் மூலம் நாம் இருக்கும் இடத்தில் இருந்து சிவ அருளை முழுமையாக பெற முடியும். இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருப்பின் நீங்களும் இதைப் பின்பற்றி பலன் அடையுங்கள்.

- Advertisement -