தக்காளியை வேக வைத்து சட்னி இப்படி ஒரு முறை அரைத்து பாருங்க செம டேஸ்டாக இருக்கும்! வித்தியாசமான சுவை மிகுந்த தக்காளி சட்னி ஈசியாக செய்வது எப்படி?

boiled-tomato-chutney_tamil
- Advertisement -

விதவிதமான சட்னி வகைகளில் காரசாரமான தக்காளி சட்னி அனைவரும் விரும்பும் ஒரு சட்னயாக இருந்து வருகிறது. அதிலும் இந்த மாதிரி தக்காளியை வேக வைத்து ஒருமுறை சட்னி செய்து கொடுத்துப் பாருங்க மூணு இட்லி சாப்பிடும் இடத்தில் கண்டிப்பாக பத்து இட்லி கூட சாப்பிட சலிக்கவே சலிக்காது. அந்த அளவிற்கு சுவை செமையாக இருக்கக்கூடிய இந்த வேக வைத்து செய்யும் தக்காளி சட்னி ரெசிபி எப்படி எளிதாக செய்வது? என்று இந்த பதிவில் தெரிஞ்சுப்போம் வாங்க.

தக்காளி சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
பழுத்த தக்காளி பழம் – மூன்று, பெரிய வெங்காயம் – ஒன்று, பச்சை மிளகாய் – 4, துருவிய தேங்காய் – கால் கப், உப்பு – தேவையான அளவு, பூண்டு – ரெண்டு பல், சமையல் எண்ணெய் – இரண்டு டேபிள் ஸ்பூன்.

- Advertisement -

தக்காளி சட்னி செய்முறை விளக்கம்:
முதலில் பழுத்த மூன்று தக்காளி பழங்களை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளுங்கள். பின்னர் அதை ஒரு பாத்திரத்தில் போட்டு மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி ஐந்து நிமிடம் நன்கு கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள். தக்காளி பழம் நன்கு வெந்துவிடும், அதன் பிறகு அதன் மேல் தோலை எடுத்து ஒரு பாத்திரத்தில் தக்காளிகளை போட்டு வைத்துக் கொள்ளுங்கள். பின் தேவையான மற்ற எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வையுங்கள்.

இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் தோல் உரித்து சுத்தம் செய்து பொடி பொடியாக நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயம் ஒன்றை சேர்த்து நன்கு வதக்குங்கள். வெங்காயம் வதங்கி வரும் பொழுது நீங்கள் வேக வைத்து எடுத்து வைத்துள்ள தக்காளி பழத்தையும் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். தக்காளி பழம் சேர்த்ததும் சட்னி கொதிக்க ஆரம்பிக்கும். இதனுடன் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து வதக்குங்கள்.

- Advertisement -

பிறகு உங்களுடைய காரத்திற்கு ஏற்ப பச்சை மிளகாய்களை காம்பு நீக்கி நறுக்கி சேர்த்து வதக்குங்கள். மிளகாய் ரெண்டு நிமிடம் நன்கு வதங்கிய பின்பு நீங்கள் துருவி வைத்துள்ள தேங்காய் துருவலை சேர்த்துக் கொள்ள வேண்டும். தேங்காயை துருவ முடியாதவர்கள் அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கியும் சேர்க்கலாம். சிறிது நேரம் வதக்கிய பின்பு நன்கு கெட்டியாகும், அதன் பிறகு அடுப்பை அணைத்து ஆறவிட்டு விடுங்கள்.

இதையும் படிக்கலாமே:
டீக்கடை மசால் போண்டா 10 நிமிடத்தில் எளிதான முறையில் வீட்டில் எப்படி செய்வது? இது தெரிஞ்சா இனி கடையில போய் வாங்கவே மாட்டீங்களே!

இந்த பொருட்கள் நன்கு ஆறிய பின்பு ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்து அதில் சேர்த்து மைய நைசாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அரைத்து எடுத்த இந்த சட்னிக்கு ஒரு சிறு தாளிப்பு கொடுத்துக் கொள்ளுங்கள். தாளிப்பு கரண்டி ஒன்றை அடுப்பில் வைத்து தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுந்து, கருவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளித்துக் கொள்ளுங்கள். பின்னர் இந்த சட்னியுடன் இதை சேர்ந்து கலந்து வைத்து இட்லி, தோசைக்கு பரிமாறி பாருங்கள், எவ்வளவு இட்லி கொடுத்தாலும் உள்ளே இறங்கி கொண்டே இருக்கும். அந்த அளவிற்கு சுவை செம டேஸ்டாக இருக்கும். நீங்களும் இதே மாதிரி ட்ரை பண்ணி அசத்துங்க.

- Advertisement -