தற்பெருமைக்காக நாம் செய்யக்கூடிய இந்த 5 தவறுகள் கூட, நம்முடைய முன்னேற்றத்திற்கு தடையாக வந்து நிற்கும். இந்த தவறுகளை நீங்க செய்றீங்களான்னு பாத்துக்கோங்க.

money
- Advertisement -

நம்முடைய வாழ்க்கையில் முன்னேற்றம் தடைபடுவதற்கு நாம் அறியாமல் செய்யக்கூடிய சில தவறுகளும் ஒரு காரணமாகி விடுகின்றது. அந்த வரிசையில், தற்பெருமைக்காகவும் ஆடம்பரதிற்காகவும் நம்மைப் பற்றிய ஒரு சில விஷயங்களை வெளியாட்களிடம் பகிர்ந்து கொள்ளும்போது, அதன் மூலம் ஏற்படுகின்ற கண்திருஷ்டி, நம்முடைய முன்னேற்றத்திற்கு பெரிய முட்டுக்கட்டை போட்டு விடும். அதிவிரைவாக சில பேர் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவார்கள். அதே சமயம் அவர்களுடைய வாழ்க்கையில் அதிவிரைவாக சில சரிவுகளை சந்தித்து விடுவார்கள். இதற்கு முக்கிய காரணம் என்ன தெரியுமா கண் திருஷ்டி தான். அந்த கண் திருஷ்டி நம்மேல் படுவதற்கு நாம் செய்யக்கூடிய இந்த தவறுகளும் ஒரு காரணம் தான். அது எந்தெந்த தவறுகள்? தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

money1

முதலில் உங்களுடைய வாழ்க்கையில் முன்னேற்றம் வருகிறது என்றால், அந்த முன்னேற்றம் எதனால் உங்களுக்கு கிடைத்தது என்பதை அனாவசியமாக அடுத்தவர்களிடம் கூறிப் பெருமைப்பட்டுக் கொள்ள கூடாது. நீங்கள் எதனால் முன்னேறுகிறீர்கள் என்பது உங்களுக்குள் என்றைக்குமே இரகசியமாகத் தான் இருக்க வேண்டும்.

- Advertisement -

அடுத்தபடியாக மிக மிக முக்கியமான விஷயம். உங்களுடைய சம்பளத் தொகையாக இருந்தாலும் சரி அல்லது தொழில் செய்து உங்களுக்குக் கிடைக்கக்கூடிய லாபமாக இருந்தாலும் சரி, அதை உங்களுடைய நெருங்கிய சொந்தக்காரர்களிடம் கூட பகிர்ந்து கொள்ளும் பழக்கத்தை நிறுத்தி கொள்ளுங்கள்.

kadan

உங்களுடைய வீட்டிற்கு யாராவது உறவினர்களோ நண்பர்களோ வந்தால் கூட, அவர்களிடம் பேசிப் பழகும் போது உங்களுடைய குடும்ப விஷயங்கள் எல்லாவற்றையும் முழுமையாக அடுத்தவர்களிடம் பகிர்ந்து கொள்ளக்கூடாது.

- Advertisement -

உங்களுடைய வீட்டிற்கு யார் வந்தாலும் அவர்களை முடிந்தவரை வரவேற்பறையில் அமரவைத்து, வரவேற்பறையிலேயே பேசுவது தான் நல்லது. வீட்டிற்கு வருபவர்கள் அனைவரையும் படுக்கை அறைக்கு கூட்டி வந்து அமர வைத்து பேசுவது, சமயலறைக்கு கூட்டி செல்வது போன்ற பழக்கங்களை வைத்துக் கொள்ள கூடாது.

poojai-arai-kitchen

சில பேர், தங்களுடைய வீட்டிற்கு வருகை தரும் நண்பர்களை படுக்கை அறை வரை கூட்டி சென்று, தங்கள் வீட்டில் பீரோவுக்கு உள்ளே இருக்கும் பொருட்களைக் கூட எடுத்து காண்பிப்பார்கள். ஆனால் அதெல்லாம் மிக மிக தவறான ஒரு விஷயம். உங்களுடைய தற்பெருமைக்காக உங்களிடம் இருக்கும் விலை மதிக்க முடியாத, உங்களுடைக்கு பொக்கிஷமாக இருக்கும் பொருட்களை அடுத்தவர்களிடம் காண்பிக்கும் போது நிச்சயமாக இதன் மூலம் உங்களுக்கு எதிர்மறை விளைவுகள் உண்டாகவும் நிறையவே வாய்ப்புகள் உள்ளது.

- Advertisement -

kitchen-cash

சமையல் அறைக்கு கூட்டி சென்று உங்கள் சமையலறையை நீங்கள் எப்படி பராமரித்து வருகிறீர்கள் என்று அடுத்தவர்களுக்கு நீங்கள் காண்பிக்கும்போது அதிலும் கண் திருஷ்டி விழுவதற்கு நிறையவே வாய்ப்புள்ளது.

family2

அன்றாடம் உங்களுடைய வீட்டிற்காக நீங்கள் என்னென்ன வேலை செய்கிறீர்கள். எப்படி உங்களுடைய குடும்பத்தை வழிநடத்திச் செல்கிறார்கள், எப்படி உங்களுடைய பிள்ளைகளை நீங்கள் கவனித்துக் கொள்கிறார்கள், என்ற விஷயங்களை கூட முடிந்தவரை அடுத்தவர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது உங்களுடைய குடும்பத்திற்கு மிக மிக நல்லது.

poojai arai

குறிப்பாக உங்கள் வீட்டிற்கு வருபவர்கள் அனைவருக்கும் உங்கள் வீட்டு பூஜை அறையை காண்பிக்கக் கூடாது. உங்கள் வீட்டு பூஜை அறை வரவேற்பறையில் இருந்தால் கூட தீபம் ஏற்றும் நேரத்தை தவிர மற்ற நேரங்களில் பூஜை அறையை திரை போட்டு மறைத்து விட வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

family

இதற்காக உங்கள் வீட்டிற்கு வரும் சொந்த பந்தங்கள் நண்பர்களை எல்லாம் ஒதுக்கி வைக்க வேண்டும் என்று சொல்ல வரவில்லை. இருப்பினும் உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு நடக்கக்கூடிய சில நல்ல விஷயங்களை வெளியில் சொல்லும் போது ஒரு ஒளிவுமறைவு இருக்க வேண்டும். சொல்ல வேண்டிய விஷயங்களை சொந்த பந்தங்களிடமும் நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்வது தவறு கிடையாது. ஆனால் சொல்லக்கூடாது என்று சில விஷயங்கள் உள்ளது. அந்த விஷயங்களை உங்களுடைய தற்பெருமைக்காக நீங்கள் என்றைக்குமே வெளியே சொல்லக் கூடாது. அது உங்களுடைய வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு தடைக்கல்லாக தான் நிற்கும் என்ற கருத்துடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -