உங்கள் சேமிப்பு வீண் விரயமாகாமல் இருக்க இந்தப் பிள்ளையாரை வழிபடுங்கள்.

vinayagar2

நமக்கு வரக்கூடிய வருமானத்தை மிச்சப்படுத்தி சேமித்து வைப்பது என்பது மிகவும் கஷ்டமான விஷயம். அப்படி வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி பணத்தை மிச்சப் பிடித்து வைத்தால், அந்த பணமானது தேவையற்ற வீண்விரையங்களுக்கு செலவாகும். நம் சேமிப்பு பணத்தை வீண் விரயங்களிடமிருந்து காப்பாற்றி, எப்படி நம்மிடமே வைத்துக் கொள்வது? என்பதற்கான ஒரு சுலபமான பரிகாரத்தை பற்றிதான் இந்த பதிவின் மூலம் பார்க்க போகின்றோம்.

hundi

வீட்டில் இருக்கும் பெண்கள் யாருக்கும் தெரியாமல் பணத்தை சேமித்து வருவார்கள். ஆனால் அவர்களாலேயே செலவுகளை கட்டுப்படுத்த முடியாது. இதனால் வெளியே எடுக்க முடியாத அளவிற்கு ஒரு உண்டியலை வாங்கி அதில் பணத்தை சேமிப்பார்கள். ஆனால் அந்தப் பணம் கூட பாதியிலேயே ஏதாவது ஒரு செலவுக்கு சென்றுவிடும். இப்படி இருக்கும் பட்சத்தில் நாம் ஒரு புது உண்டியலை வாங்கியவுடன் அதில், முதல் வேலையாக ஐந்து வெந்தயத்தை போட வேண்டும். ஐந்து வெந்தயம் போடப்பட்ட பின்பு, அந்த உண்டியலில் பணத்தை சேர்த்து வைத்தால் அந்த பயணமானது வீண் விரயம் ஆகாமல், உங்களை விட்டு  செல்லாமல் உங்களிடமே இருக்கும். அந்த பணத்திற்கு அப்படியும் ஏதாவது ஒரு வகையில் செலவு வந்தால் அது நிச்சயம் நல்ல செலவாகத்தான் இருக்கும். வீண் விரயம் கண்டிப்பாக ஏற்படாது.

உங்களது ஜாதக கட்டத்தில் புதன் பகவான் எட்டாம் இடத்தில் இருந்தாலும் அல்லது நீச்சநிலையில் இருந்தாலும் நீங்கள் எவ்வளவு முயற்சி தான் எடுத்தாலும் உங்களால் பணத்தை சேமிக்கவே முடியாது. இப்படிப்பட்டவர்கள் உங்களால் முடிந்தால் வாரந்தோறும் புதன்கிழமை அன்று, புதன் பகவானேக்கு விரதமிருந்து(ஒரு பொழுது உணவு), சிறிதளவு வெந்தயத்தை உங்களது உள்ளங்கைகளில் வைத்துக்கொண்டு அந்த புதன் பகவானை நினைத்து வேண்டிக்கொண்டு(என்னிடம் பணம் சேமிப்பில் இருக்க வேண்டும். வீண்விரயம் ஆகக்கூடாது), அந்த வெந்தயத்தை பறவைகளுக்கு சாப்பிடுவதற்காக போட்டு வரலாம். புதன் பகவானால் ஏற்படும் பிரச்சினையிலிருந்து உங்களை காத்துக் கொண்டு, உங்களது சேமிப்பை நிலைநிறுத்த வெள்ளெருக்கு விநாயகரை உங்களது வீட்டில் வைத்து வழிபடுவது நல்ல பலனைக் கொடுக்கும்.

vellerukku-pillaiyar

இந்த வெள்ளருக்கு பிள்ளையாரை நீங்கள் வாங்குவதற்கு முன்பு அது போலியானதா அல்லது நல்ல வெள்ளருக்கு பிள்ளையாரா என்பதை தெரிந்து கொண்டு வாங்குவது நல்லது. இந்த பிள்ளையாரை நீங்கள் புதியதாக வீட்டுக்கு வாங்கி வந்தவுடன் ஒரு வெள்ளிக்கிழமை காலை 10.30 முதல் 12குள் ராகு காலத்தில், அந்த விநாயகர் சிலை முழுவதும் அரைத்த மஞ்சளை பூசி வைக்கவும். இதுபோல் அடுத்த வெள்ளிக்கிழமை ராகுகால சமயத்தில் சந்தன விழுதை விநாயகர் சிலை முழுவதும் பூசி நிழலிலேயே உளற வைத்துக்கொள்ள வேண்டும். இதன் பிறகு உங்களது பூஜை அறையில் வைத்து எப்பவும்போல வழிபடலாம். தன ஆகர்ஷன சக்தியை  அள்ளிக் கொடுக்கக் கூடிய வல்லமையானது இந்த வெள்ளருக்கு விநாயகருக்கு அதிகமாக உள்ளது.

- Advertisement -

deepam

இதுபோல் நம் வீட்டில் விளக்குகளுக்கு போடப்படும் விளக்கு திரிக்கு பதிலாக வெள்ளெருக்குப் பட்டையில் விளக்கேற்றினால், நம் வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகள் அனைத்தும் விலகி ஓடிவிடும். இப்படியாக நீங்கள் நம்பிக்கையோடு செய்யப்படும் ஒவ்வொரு பரிகாரமும் நிச்சயம் உங்களுக்கு வெற்றியை தேடித்தரும்.

இதையும் படிக்கலாமே
நினைத்ததை சாதிக்கணும். இந்த எண்ணம் உங்களிடம் உள்ளதா? 10 நிமிட உப்பு தியானம் போதும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Puthan vazhipadu in Tamil. Vellerukku vinayagar. Vellerukku vinayagar benefits in Tamil. Vellerukku vinayagar pooja in Tamil.