வெள்ளிப் பொருட்களை வீட்டிலேயே பாலிஷ் போட இப்படி ஒரு புது ஐடியா இருக்குதா? இந்த பொருளை வைத்து வெள்ளி பொருளை எப்படி புதுசாக மாற்றுவது?

velli-vilakku
- Advertisement -

பழைய வெள்ளி பொருளை, கருத்து போன வெள்ளி பொருளை மிக மிக சுலபமான முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எப்படி பளபளப்பாக மாற்றுவது என்பதை பற்றியும், அந்த வெள்ளி பொருளுக்கு மேலே பாலிஷ் போட ஒரு ட்ரிக் உள்ளது அதை பற்றியும் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். உங்கள் வீட்டில் இருக்கும் பழைய கொலுசு, பழைய செயின், அல்லது பூஜை அறையில் இருக்கும் விளக்கு என்று எந்த பொருட்களுக்கு வேண்டும் என்றாலும் நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றி சுத்தம் செய்து பார்க்கலாம். வாங்க நேரத்தை கடத்தாமல் இந்த சுலபமான டிப்ஸை நாமும் தெரிந்து கொள்வோம்.

பொதுவாக வெள்ளி பொருட்களை சுத்தம் செய்வதற்கு பல்பொடி ரொம்ப ரொம்ப பயன் உள்ளதாக இருக்கும். பல்பொடியை எடுத்து வெள்ளி பொருளின் மேல் லேசாக விரலை வைத்து தேய்க்கும் போது அந்த கருமை நிறம் நீங்கிவிடும். (தண்ணீர் கூட தேவையில்லை. தண்ணீரில் வெள்ளி பொருட்களை நனைப்பதற்கு முன்பு, வெறும் பல்பொடியை எடுத்து வெள்ளி பொருட்கள் மீது தேய்த்துக் கொடுத்தாலே கருமை நிறம் நீங்குவதை கண்கூடாக காணலாம்.) இந்த வெள்ளி பொருளை சுத்தம் செய்வதற்காக வேண்டி நீங்கள் கோல்கேட் பல்பொடி வாங்கி இந்த குறிப்பை பின்பற்றி பாருங்கள். நிச்சயமாக நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

- Advertisement -

கோல்கேட் பல்பொடி வாங்க முடியாது என்பவர்கள் கோல்கேட் பேஸ்ட்டை வைத்துக்கூட வெள்ளி பொருட்களை சுத்தம் செய்யலாம். ஒரு அகலமான பாத்திரத்தில் கோல்கேட் பேஸ்ட்டை 2 ஸ்பூன் அளவு போட்டு, அதில் தண்ணீரை ஊற்றி கரைத்துக் கொள்ளுங்கள். பேஸ்ட் நன்றாக தண்ணீரில் கரைந்ததும் வெள்ளி பொருளை அதில் மூழ்க வைத்து நன்றாக ஊற வையுங்கள். 15 இல் இருந்து 20 நிமிடம் ஊறிய பின்பு ஒரு பிரஷை வைத்து தேய்த்தாலே வெள்ளி பொருள் பளபளப்பாக மாறிவிடும்.

சுத்தம் செய்த வெள்ளி பொருளை ஈரம் இல்லாமல் ஒரு காட்டன் துணியை வைத்து துடைத்து விடுங்கள். அதன் பின்பு ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் விபூதி, ஒரு சிறிய துண்டு கற்பூரம் நுணுக்கி போட்டு நன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்த விபூதியும் கற்பூரம் துகளும் சேர்ந்த கலவையை விரல்களால் எடுத்து வெள்ளி பொருளின் மீது வைத்து லேசாக தேய்த்துக் கொடுத்தாலே அப்படியே வெள்ளி பாலிஷ் போட்டது போல பளபளப்பாக மாறும். (பூஜை அறையில் இறைவனுக்கு ஏற்றும் சூடம்)

- Advertisement -

வெள்ளிப் பொருட்களுக்கு கடையில் காசு கொடுத்து பாலிஷ் போட்டால் ஒரு பளபளப்பு வரும் அல்லவா. அதேபோல பளபளப்பு கிடைக்க இந்த கற்பூரமும் விபூதியும் நமக்கு உதவி செய்யும். நீங்க வேணும்னா உங்க கொலுசுக்கே இந்த டிப்ஸ் ட்ரை பண்ணி பாருங்க. ரொம்ப கருத்துப் போன கொலுசு புத்தம் புதுசு போல மாறி இருக்கும்.

இதையும் படிக்கலாமே: டீ எல்லாரும் தான் குடித்து இருப்போம். ஆனா இது மாதிரி ஒரு பர்பெக்ட்டான மசாலா டீ குடிச்சி இருக்கீங்களா, இத படிச்சிட்டு ட்ரை பண்ணி பாருங்க டீ டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.

பெரும்பாலும் இன்று நிறைய பேர் வீடுகளில் பூஜை அறையில் வெள்ளி விளக்குகள் இருக்கிறது. ஆனால் அது கருத்து போய் தான் இருக்கும். அந்த வெள்ளி விளக்குகளுக்கு இந்த குறிப்பை பின்பற்றினால் கூட வெள்ளி விளக்கு சீக்கிரத்தில் பளபளப்பாக மாறும். உங்களுக்கு இந்த குறிப்பு பிடிச்சிருந்தா ட்ரை பண்ணி பாருங்க. நிச்சயம் பயனுள்ளதாக அமையும்.

- Advertisement -