ஹோட்டல் ஸ்டைல் பொங்கல் செய்முறை

pongal recipe
- Advertisement -

பொங்கல் பெரும்பாலோருக்கு பிடித்தமான உணவாக உணவு தான். ஆனாலும் வீட்டில் இதை பெரும்பாலும் சமைப்பதில்லை, சமைத்தாலும் யாரும் அவ்வளவாக விரும்பி சாப்பிடுவதில்லை. ஆனால் ஹோட்டலிலோ கல்யாண வீடுகளிலோ இந்த பொங்கலை செய்த கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.

இதற்குக் காரணம் இந்த பொங்கலில் அவர்கள் சேர்க்கும் ஒரு முக்கியமான பொருள் தான். அதன் சுவையை அதிகரித்து கொடுக்கிறது. இதே சுவையில் நம் வீட்டிலும் இனி பொங்கல் செய்து அசத்தலாம் அதற்கான சீக்ரெட் டிப்ஸ் இந்த சமையல் குறிப்பு பதிவில் உள்ளது. வாங்க அதை தெரிஞ்சுக்கலாம்.

- Advertisement -

தேவையான பொருட்கள்

பச்சரிசி – 3/4 கப்
பாசிப்பருப்பு – 1/4 கப்
மிளகு -1 ஸ்பூன்,
சீரகம் -1 ஸ்பூன்,
பட்டர் – சிறிதளவு
கருவேப்பிலை -1 கொத்து,
பெருங்காயம் -1 பின்ச்,
முந்திரி – 10,
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்,
உப்பு -1/2 டீஸ்பூன்,
பால் – 1/4 கப்,

செய்முறை

இந்தப் பொங்கல் தாளிப்பதற்கு முதலில் பச்சரிசியும் பருப்பையும் நன்றாக சுத்தம் செய்து 10 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளுங்கள். இஞ்சியை தோல் சீவி துருவி எடுத்துக் கொள்ளுங்கள். இவையெல்லாம் தயார் செய்த பிறகு அடுப்பை பற்ற வைத்து குக்கர் வைத்து முதலில் தாளிப்பை செய்து விடலாம்.

- Advertisement -

பொங்கல் செய்ய அரிசி பருப்பு இரண்டையும் வேக வைத்த பிறகு கடைசியாக தான் தாளிப்பை சேர்ப்பார்கள். அப்படியில்லாமல் இந்த முறையில் செய்து பாருங்கள் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். குக்கர் சூடானவுடன் பட்டர் சேர்த்து உருகிய பிறகு மிளகு, சீரகம் இரண்டையும் கொஞ்சமாக நுணுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள்.

இத்துடன் கருவேப்பிலை முந்திரி இவைகளை சேர்த்து வதக்கிய பிறகு மஞ்சள் தூள் பெருங்காயத்தூள் இரண்டையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக ஊற வைத்த அரிசி பருப்பு இரண்டையும் தண்ணீர் இல்லாமல் வடித்து விட்டு குக்கரில் சேர்த்து பட்டர் அரிசியின் எல்லா பக்கத்திலும் படும் வரை நன்றாக கலந்து விடுங்கள்.

- Advertisement -

அதன் பிறகு ஒரு கப் அரிசி பருப்புக்கு 5 கப் அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும். இதில் நான்கு கப் அளவு தண்ணீரும் ஒரு கப் அளவு பாலையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இதற்கு காய்ச்சியப் பால், காய்ச்சாத பால் எதை வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம். கடைசியாக உப்பு சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள்.

இப்போது குக்கரை உடனடியாக மூடி விடாமல் இவையெல்லாம் சேர்த்து ஒரு கொதி வந்த பிறகு குக்கரை மூடி மூன்று விசில் வந்த பிறகு அடுப்பு அணைத்து விடுங்கள். இப்படி ஒரு கொதி வந்த பிறகு மூடுவதால் குக்கர் விசில் வரும் போது பொங்கி தண்ணீர் எல்லாம் வீணாக வெளியே வராது. அதன் பிறகு குக்கர் விசில் முழுவதுமாக இறங்கிய பிறகு மூடியை திறந்தால் நல்ல கமகமவென்று வாசத்துடன் குழைம வெந்த பொங்கல் தயார்.

இதையும் படிக்கலாமே: பீட்ரூட் பிரியாணி செய்முறை
இந்த முறையில் நீங்களும் ஒரு முறை பொங்கல் செய்து பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும். ஹோட்டல் கல்யாண வீடு என எங்கும் இது போல சுவையில் பொங்கல் சாப்பிட்டு இருக்கவே மாட்டீர்கள். இனி வீட்டில் செய்யும் பொங்கலையும் நான், நீ என்று போட்டி போட்டுக் கொண்டு சாப்பிடுவார்கள்.

- Advertisement -