வேண்டுதல் நிறைவேற விருட்ச வழிபாடு

sivan mara valipadu
- Advertisement -

ஒருவர் வாழ்க்கையில் நியாயமாக நடக்கக்கூடிய காரியங்கள் நடக்காமல் தடைப்பட்டு கொண்டு இருக்கிறது என்று வருத்தப்படுபவர்கள் பலர் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் தங்களுடைய காரியம் வெற்றிகரமாக நடைபெற வேண்டும் என்று பல வழிபாடுகளையும் பரிகாரங்களையும் மேற்கொள்வார்கள் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் எந்த கோவிலுக்கு சென்று என்ன வழிபாடு செய்ய வேண்டும் என்று தான் பார்க்கப் போகிறோம்.

ஒருவருடைய வாழ்க்கையில் முக்கியமானதாக கருதப்படுவது அவருடைய படிப்பு, வேலை, தொழில், திருமணம், குழந்தை பாக்கியம், வாழ்க்கையில் முன்னேற்றம் போன்றவை தான். அவற்றில் ஏதாவது தடைகள் ஏற்பட்டு அந்த தடைகளை நீக்க முயற்சிகள் செய்தாலும் அந்த முயற்சிகள் வெற்றி அடையாமல் ஏதாவது ஒரு ரூபத்தில் தடங்கல்கள் ஏற்பட்டு கொண்டே இருந்தால் அவர்கள் முதலில் குலதெய்வ வழிபாட்டை தான் மேற்கொள்ள வேண்டும்.

- Advertisement -

பொதுவாக ஒருவருடைய வாழ்க்கையில் ஒரு சுபகாரிய பேச்சு என்பது ஆரம்பித்த உடனேயே முதலில் குலதெய்வத்தை வழிபட வேண்டும். குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக இருந்தால்தான் ஒருவருடைய வாழ்க்கையில் காரிய தடைகள் எதுவும் இன்றி சுப காரியங்கள் நல்லவிதமாக நடைபெறும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட குலதெய்வத்தின் அருள் கிடைக்காதவர்களுக்கு சுப காரிய தடைகள் ஏற்படும்.

தங்கள் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் இல்லாத நாளாக பார்த்து குலதெய்வ கோவிலுக்கு சென்று குலதெய்வத்திற்கு தங்களால் என்ற அளவு அபிஷேக ஆராதனை செய்து வழிபட வேண்டும். முடிந்தால் தங்களால் இயன்ற ஏதாவது ஒரு பிரசாதத்தை நெய்வேத்தியமாக வைத்து அங்கு வரும் பக்தர்களுக்கு வழங்க வேண்டும். இவ்வாறு வழிபாடு செய்து முடித்த பிறகு மறுநாள் அருகில் இருக்கும் ஏதாவது ஒரு சிவன் கோவிலுக்கு செல்ல வேண்டும்.

- Advertisement -

அங்கு தல விருச்சமாக இருக்கக்கூடிய வன்னி மரம் மற்றும் வில்வமரம் இரண்டு மரங்களும் இருந்தால் மிகவும் விஷேசம் அல்லது இரண்டில் ஏதாவது ஒரு மரம் கண்டிப்பாக இருக்கும். அந்த மரத்தை 21 முறை வலம் வர வேண்டும். பிறகு அந்த மரத்தடியில் அமர்ந்து அந்த மரத்திடம் உங்களுடைய வேண்டுதல் என்னவோ அதை பொறுமையாகவும் நிதானமாகவும் கூற வேண்டும். தங்களால் முயன்றால் தினமும் கூட இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். இயலாதவர்கள் வாரத்திற்கு ஒரு முறையாவது இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.

இப்படி தொடர்ந்து செய்து வர ஒரு மாதத்திலேயே தங்களுடைய தடைப்பட்ட காரியம் நடைபெறுவதற்குரிய நல்ல செய்திகளும் நல்ல செயல்களும் உங்களைத் தேடி வரும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. சிவன் கோவிலில் இருக்கும் நந்திக்கு எந்த அளவுக்கு சக்தி இருக்கிறதோ அதே அளவிற்கு அங்கு ஸ்தல விருச்சமாக இருக்கக்கூடிய வன்னி மரம் மற்றும் வில்வ மரத்திற்கும் இருக்கிறது என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இந்த மரத்திடம் நாம் எந்த வேண்டுதலை வைத்து வணங்கினாலும் அந்த வேண்டுதல் நேரடியாக சிவபெருமானிடம் வைத்ததற்கு சமமாக கருதப்படுகிறது என்பதுதான் உண்மை. அதனால் இந்த வழிபாடு என்பது மிகவும் சக்தி வாய்ந்த வழிபாடாக கருதப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: கஷ்டம் நீக்கும் கால் படாத மண்

மிகவும் எளிமையான இந்த வழிபாட்டை நம்பிக்கையுடன் செய்பவர்கள் வாழ்க்கையில் கண்டிப்பான முறையில் சுப காரியங்கள் எந்தவித தடைகளும் இன்றி நடைபெறும் என்பது உறுதி.

- Advertisement -