மிளகாய் போடாமல் இப்படியும் ஒரு வெங்காய சட்னி செய்யலாமே.

red-chutney
- Advertisement -

சட்னி என்றாலே வர மிளகாய் அல்லது பச்சை மிளகாய் வைத்து தான் அரைப்போம். ஆனால் கொஞ்சம் வித்தியாசமான முறையில் இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள சின்ன வெங்காயத்துடன் மிளகாய்த்தூள் சேர்த்து ஒரு சட்னியை சுவையாக எப்படி அரைப்பது என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த சட்னிக்கு தேங்காய் சேர்க்கப் போவதில்லை. தாராளமாக டயட் கண்ட்ரோல் இருப்பவர்களும் இந்த சட்னியை சாப்பிடலாம்.

onion

சின்ன வெங்காயம் – 20 திலிருந்து 25 பல் தோலுரித்தது, சிறிய நெல்லிக்காய் அளவு புளி – 1 துண்டு, தனி மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன், உப்பு தேவையான அளவு, இந்த பொருட்களை மிக்ஸி ஜாரில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி, விழுதுபோல் அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இது அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

இப்போது அடுப்பில் ஒரு கடாயை வைத்து, 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ளவேண்டும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு – 1 ஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து, பெருங்காயம் – 2 சிட்டிகை சேர்த்து தாளித்து அரைத்து வைத்திருக்கும் வெங்காய விழுதை கடாயில் ஊற்றி, நன்றாக கலந்து விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து மூடி போட்டு வெங்காயத்தின் பச்சை வாடை போகும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.

kara-chutney2

இந்த சட்னி மிதமான தீயில் நன்றாக கொதித்து, சுண்டி கொஞ்சம் கெட்டி பதத்திற்கு வந்தவுடன் அடுப்பை அணைத்துவிட்டு, இட்லி தோசைக்கு பரிமாறிக் கொள்ளலாம். அவ்வளவு தான். சுவையான சின்ன வெங்காய சட்னி தயார். அடுத்தபடியாக ஒரு தேங்காய் கெட்டி சட்னியும் சுவையாக எப்படி அரைப்பது என்பதையும் சுலபமாக தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் 2 கைப்பிடி அளவு தேங்காய், தோலுரித்த சின்ன வெங்காயம் 2, சிறிய துண்டு இஞ்சி, பச்சை மிளகாய் 4 லிருந்து 5, வேர்க்கடலை 1 கைப்பிடி அளவு, சிறிய துண்டு புளி, தேவையான அளவு உப்பு, இந்த பொருட்களை எல்லாம் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி இந்த சட்னியை கட்டியாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

road-side-tomato-chutney1

அரைத்த சட்னியை மிக்ஸி ஜாரில் இருந்து தனியாக ஒரு கிண்ணத்தில் வறுத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த சட்னிக்கு ஒரு சிறிய தாளிப்பு கொடுக்கவேண்டும். எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை, தாளித்து சட்னியில் கொட்டி இதை கெட்டி சட்னி ஆகவே பரிமாறி பாருங்கள். சூப்பரான தேங்காய் கெட்டி சட்னி தயார். இந்த இரண்டு சட்னியையும் மிஸ் பண்ணாம உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -