2 வெங்காயம் இருந்தா போதும் ஒரே நிமிஷத்துல காரசாரமா இப்படி சட்னி அரைச்சா 20 இட்லி கூட உள்ள போகும்!

big-onion-chutney
- Advertisement -

விதவிதமான சட்னி வகைகளில் வெங்காய கார சட்னி மிகவும் தனித்துவமானது. வெங்காயத்தின் பச்சை வாசத்துடன், எண்ணெயில் போட்டு வதக்காமல் செய்யும் இந்த காரச் சட்னி ரொம்பவே ருசியை கொடுக்கக் கூடியது. தக்காளி, தேங்காய் போன்ற எந்த பொருளும் இதற்கு தேவையில்லை. ஒரே நிமிஷத்துல மிக்ஸியில் போட்டு அரைத்தால் கமகம சட்னி ரெடி ஆகி விடும். இத்தகைய இந்த வெங்காய கார சட்னி எப்படி நாமும் சுலபமாக செய்வது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

வெங்காயம்

வெங்காய கார சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
பெரிய வெங்காயம் – 2, பூண்டு பற்கள் – 6, ஜீரகம் – அரை டீஸ்பூன், மிளகாய்த் தூள் – 2 டேபிள் ஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், நல்லெண்ணெய் – ஒரு குழிக்கரண்டி, உப்பு – தேவையான அளவு.

- Advertisement -

வெங்காய கார சட்னி செய்முறை விளக்கம்:
வெங்காய கார சட்னி அரைக்க வீட்டில் இருக்கும் இந்த பொருட்கள் இருந்தாலே போதும். கடகடன்னு செய்து விடலாம். அலாதியான சுவையைக் கொடுக்கும் இந்த கார சட்னிக்கு ரெண்டு பெரிய வெங்காயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதனை தோல் சீவி நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். பூண்டு பற்களை தோலுரித்து வைத்துக் கொள்ளுங்கள்.

vengayam

அரை டீஸ்பூன் சீரகம், 2 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூளை சேர்க்க வேண்டும். பின்னர் தாளிக்கும் பொழுது நல்லெண்ணையை பயன்படுத்தலாம் அப்போது தான் இந்த காரத்தை சமன் செய்ய முடியும். ஏனென்றால் நாம் இதனை வாணலியில் போட்டு வதக்க போவது இல்லை. ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் நறுக்கிய வெங்காயம், தோல் உரித்த பூண்டு பற்கள், ஜீரகம் மற்றும் மிளகாய்த் தூள் போட்டு தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இதில் மிளகாய் தூள் உடைய அளவு உங்கள் காரத்திற்கு ஏற்ப கூட்டிக் குறைத்துக் கொள்ளலாம். பின்னர் மிக்ஸியை இயக்கி கொரகொரவென்று அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் கூட இந்த சட்னிக்கு தண்ணீர் சேர்க்கக் கூடாது. கெட்டியாக அரைத்த பின்னர் இதன் பச்சை வாசம் போக நல்லெண்ணையை சுடசுட வேண்டும் காய்ச்சி எடுக்க வேண்டும். எனவே இதற்காக அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு தாளிப்பு கரண்டியை வையுங்கள். அதில் ஒரு குழி கரண்டி அளவிற்கு நல்லெண்ணெயை ஊற்றி கொள்ளுங்கள்.

onion-thokku2

நல்லெண்ணெயை நன்கு புகை வர காய்ச்சியதும் அரை டீஸ்பூன் அளவிற்கு கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் இதனை சட்னியுடன் சூடாக அப்படியே சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும். எண்ணையின் சூட்டிலேயே வெங்காயம், பூண்டு மற்றும் மிளகாய் தூளின் பச்சை வாசம் நீங்கிவிடும். அவ்வளவுதாங்க எவ்வளவு இட்லி கொடுத்தாலும் இந்த சட்னிக்கு பத்தவே பத்தாது! அந்த அளவிற்கு மிகவும் ருசியான இந்த சட்னியை இதே முறையில் நீங்களும் ஒருமுறை செய்து பார்த்து அசத்துங்கள்.

- Advertisement -