வெறும் 10 நிமிடத்தில் சுவையான சூப்பரான வேர்க்கடலை சட்னி இப்படியும் செய்யலாம்.

- Advertisement -

ஒவ்வொரு வீட்டிலும் வேர்க்கடலை சட்னி ஒவ்வொரு விதமாக அரைக்கப்படும். அந்த வரிசையில் கொஞ்சம் வித்தியாசமாக சுலபமாக ஒரு வேர்கடலை சட்னி ரெசிபியை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இட்லி தோசை பணியாரம் இவைகளுக்கு தொட்டுக்கொள்ள இந்த சட்னி சூப்பர் சைட் டிஷ்ஷாக இருக்கும். வாங்க அந்த சிம்பிள் ரெசிபிய நேரத்தைக் கடத்தாமல் தெரிஞ்சுக்கலாம்.

verkadalai

முதலில் இரண்டு கைப்பிடி வேர்க்கடலையை கடாயில் போட்டு வறுத்து ஆற வைத்து, தோல் உரித்து சுத்தம் செய்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள். இது அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

அடுத்தபடியாக ஒரு கடாயில் 1 – ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, சீரகம் – 1 ஸ்பூன், தோல் உரித்த பூண்டு பல் – 10, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 2 டேபிள்ஸ்பூன், வரமிளகாய் 4 லிருந்து 5 காரத்திற்கு ஏற்ப, இந்த பொருட்களை சேர்த்து வறுத்து ஆற வைத்துக் கொள்ள வேண்டும். வறுத்து ஆறிய இந்த பொருட்களை மிக்ஸி ஜாரில் போட்டு கொள்ள வேண்டும்.

இந்த பொருட்களுடன் வறுத்த வேர்க்கடலையை போட்டு, தேங்காய் துருவல் 2 கைப்பிடி அளவு சேர்த்து, 1/4 ஸ்பூன் பெருங்காயம், தேவையான அளவு உப்பு போட்டு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி இந்த சட்னியை பக்குவமாக அரைத்துக் கொள்ள வேண்டும். சட்னி கொஞ்சம் கெட்டியாக தான் இருக்க வேண்டும். (ரொம்பவும் தண்ணீர் ஊற்றி அரைத்து விடக்கூடாது.)

- Advertisement -

அரைத்த இந்தச் சட்னியை ஒரு கிண்ணத்தில் மாற்றி கொள்ளுங்கள். கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கரைத்து தளதளவென இந்த சட்னியை வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்பு ஒரு சிறிய தாளிப்பு கரண்டியில் 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய், கடுகு – 1 ஸ்பூன், உளுந்து பருப்பு – 1 ஸ்பூன், வரமிளகாய் 2, கருவேப்பிலை – 1 கொத்து சேர்த்து மணக்க மணக்க தாளித்து சட்னியில் கொட்டி விட வேண்டும்.

verkadalai-chutney

அவ்வளவு தாங்க. சட்னியை கலந்து சுடச்சுட இட்லி, தோசை, கோதுமை தோசை, பணியாரத்திற்கு கூட தொட்டுக்கொள்ளலாம். அவ்வளவு அட்டகாசமாக இருக்கும் இதன் ருசி. சாதாரணமாக அரைக்கும் வேர்க்கடலை சட்னியை விட சீரகம் பூண்டு வெங்காயம் சேர்த்து அரைத்து பாருங்கள். இந்த வேர்க்கடலை சட்னிக்கு சுவை கொஞ்சம் கூடுதலாகத்தான் இருக்கும். ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -