அட! வேர்க்கடலையுடன் புதினாவும் சேர்த்து சட்னியை எப்படி அரைப்பது? காரசாரமான வித்தியாசமான ‘வேர்க்கடலை புதினா சட்னி’ ரெசிபி உங்களுக்காக.

kothamalli-chutney
- Advertisement -

ஒரே மாதிரி சட்னியை எத்தனை நாட்கள் தான் சாப்பிடுவது. கொஞ்சம் வித்தியாசமாக நாளை புதினாவும், வேர்க்கடலையும் சேர்த்து இப்படி ஒருமுறை சட்னியை அரைத்துப் பாருங்கள். இட்லி தோசை சப்பாத்திக்கும் இந்த சட்னி சூப்பர் சைட் டிஷ் ஆக இருக்கும். பஜ்ஜி, போண்டா, வடைக்கு கூட இந்த சட்னியை சுலபமாக அரைத்து விடலாம். இந்த புது விதமான சட்னியை எப்படி அரைப்பது தெரிந்துகொள்வோமா.

உங்களிடம் வறுத்த வேர்க்கடலை இருந்தால் அதில் இருக்கும் தோலை நீக்கிவிட்டு, அதை அப்படியே சட்னி செய்ய பயன்படுத்திக் கொள்ளலாம். வறுக்காத வேர்கடலை என்றால் அதை கடாயில் போட்டு வறுத்து தோலை நீக்கி விட்டு ஆற வைத்து சட்னிக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்தச் சட்னி செய்ய தேவையான பொருட்கள். வறுத்த தோல் உரித்த வேர்கடலை – 1/4 கப், மீடியம் சைஸ் தக்காளி – 2 (நான்கு துண்டுகளாக நறுக்கியது), பச்சை மிளகாய் 4 லிருந்து 5, சீரகம் – 1/4 ஸ்பூன், உப்பு தேவையான அளவு, புதினா – 1 கைப்பிடி அளவு.

verkadalai

முதலில் வேர்க்கடலையை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக பொடி செய்து அப்படியே வைத்துக் கொள்ளுங்கள். இது மிக்ஸி ஜாரில் அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

அடுத்தபடியாக ஒரு கடாயை அடுப்பில் வைத்து 1 ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி, அந்த எண்ணெய் காய்ந்ததும் வெட்டி வைத்திருக்கும் தக்காளி பழங்களை கடாயில் போட்டு கொள்ள வேண்டும். கூடவே பச்சைமிளகாய், சீரகம், தேவையான அளவு உப்பு போட்டு, தக்காளி கொழகொழவென வரும்வரை, பச்சை வாடை போகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும்.

mint

இறுதியாக தயாராக எடுத்து வைத்திருக்கும் புதினா தழைகளை தக்காளியுடன் சேர்த்து மீண்டும் ஒருமுறை வதக்கவேண்டும். புதினா லேசாக வாசம் வந்து சுருங்கி வதங்கி விடும். அதன் பின்பு இந்த விழுதை ஒரு தட்டில் கொட்டி நன்றாக ஆற வைத்துக் கொள்ளுங்கள்.

chutney

அடுத்தபடியாக மிக்ஸியில் வேர்க்கடலையை போட்டு கொரகொரப்பாக அரைத்து வைத்திருக்கின்றோம் அல்லவா, அதனுடன் இந்த தக்காளி புதினா விழுதையும் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் விட்டு, சட்னியை அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அரைத்த இந்த சட்னியை தனியாக ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளுங்கள். நிறைய தண்ணீர் ஊற்றி அரைக்க வேண்டாம். இந்த சட்னி கொஞ்சம் கெட்டியாக இருந்தால்தான் சுவையாக இருக்கும்.

chutney1

தேவைப்பட்டால் இதற்கு கடுகு வரமிளகாய் கருவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளலாம். அவ்வளவு தான் சட்னி தயார். வித்தியாசமான சுவையில் காரசாரமான இந்த வேர்கடலை ரெசிப்பியை மிஸ் பண்ணாம நீங்களும் செஞ்சு பாருங்க.

- Advertisement -