வேர்க்கடலையுடன் இவற்றை சேர்த்து இப்படி ஒரு முறை சட்னி அரைத்து பாருங்கள். இதன் சுவைக்கு 10 இட்லி கொடுத்தாலும் பத்தாது என்பார்கள்

- Advertisement -

இட்லி, தோசையுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட அடிக்கடி செய்யும் ஒரு சைடிஷ் என்ன வென்றால் வேர்க்கடலை சட்னி அல்லது பொட்டு கடலை சட்னி இவை இரண்டும் தான். ஆனால் எப்பொழுதும் ஒரே சுவையில் சாப்பிட்டு அலுத்துப் போன பலருக்கு சற்று வித்தியாசமான சுவையில் சாப்பிட ஆசை இருக்கும். அப்படி உள்ளவர்கள் இந்த வேர்க்கடலை சட்னியை ஒரு முறை ட்ரை செய்து பாருங்கள். நீங்கள் எதிர்பாராத வகையில் மிகவும் வித்தியாசமான சுவையில் அற்புதமாக இருக்கும். இதன் சுவைக்கு எத்தனை இட்லி சாப்பிட்டு உள்ளீர்கள் என்று உங்களுக்கே தெரியாத அளவிற்கு இதன் சுவையில் உங்களையே நீங்கள் மறந்து விடுவீர்கள். இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

coconut-chutney0

தேவையான பொருட்கள்:
உளுத்தம்பருப்பு – 2 ஸ்பூன், கடலைப் பருப்பு – 2 ஸ்பூன், பச்சை வேர்க்கடலை – 4 ஸ்பூன், வரமிளகாய் – 3, பூண்டு – 4 பல், வெங்காயம் – 2, தக்காளி – 2, உப்பு – அரை ஸ்பூன், கொத்தமல்லி தழை – ஒரு கொத்து, எண்ணெய் – 2 ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் இரண்டு ஸ்பூன் கடலைப்பருப்பு, இரண்டு ஸ்பூன் உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் நான்கு ஸ்பூன் வேர்க்கடலை சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும்.

verkadalai

பிறகு இவற்றுடன் 4 வர மிளகாய் மற்றும் நான்கு பல் பூண்டு சேர்த்து நன்றாக வதக்கி விட்டு, 2 வெங்காயம் மற்றும் 2 தக்காளியை நான்காக நறுக்கி இவற்றுடன் சேர்த்து, நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பின்னர் அரை ஸ்பூன் உப்பு மற்றும் ஒரு கொத்து கொத்தமல்லி தழையை சேர்த்து ஒருமுறை நன்றாக கலந்து விட்டு, அடுப்பை அனைத்து விட்டு, இவற்றை வேறு ஒரு தட்டிற்கு மாற்றி நன்றாக ஆற விட வேண்டும்.பிறகு இவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

verkadalai

அதன்பின் அடுப்பின் மீது ஒரு தாளிப்பு கரண்டியை வைத்து, ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் சீரகம் மற்றும் ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்து வைத்துள்ள சட்னியுடன் சேர்த்து கலந்து விட்டால் போதும் சுவையான வேர்கடலை சட்னி தயார் ஆகிவிடும்

- Advertisement -