சமையல் செய்வதுடன் மட்டுமல்லாமல் இந்த குறிப்புகளையும் தெரிந்து கொண்டால் மட்டுமே உங்கள் வீடு எப்பொழுதும் சுத்தமாகவும், சமையல் செய்யும் பொருட்கள் வீணாகாமல் இருக்கும்

kitchen
- Advertisement -

ஒவ்வொரு வீட்டிலும் சமையலறையின் ராணியாக இருப்பவர்கள் பெண்கள் தான் அவர்கள் வீட்டில் பெரும் பாலான நேரத்தை செலவிடுவது இந்த சமையலறையில் தான். காலை எழுந்து கண் விழிப்பதும் இந்த சமையலறையில் தான். அவ்வாறு பெண்கள் எப்பொழுதும் இங்கு வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஒரு சிலருக்கு என்னதான் சமையல் செய்ய தெரிந்தாலும் அந்த இடத்தை எவ்வாறு சுத்தமாக வைத்துக் கொள்வது, அங்கு செய்யும் பொருட்களை எப்படி வீணாகாமல் மிச்சம் பிடிப்பது என்றெல்லாம் தெரிவதில்லை. சமையல் செய்வதோடு மட்டுமல்லாமல் இவ்வாறான விஷயங்களை தெரிந்து கொண்டால் மட்டுமே சுத்தமாகவும் இருக்க முடியும், அதிக அளவு செலவு செய்யாமல் சிக்கனமாகவும் இருக்க முடியும். இன்றைய சூழ்நிலையில் சுத்தமும் அவசியம், கையில் பணம் இருப்பதும் அவசியம். எனவே இவை இரண்டிற்கும் ஏற்றார் போன்ற இந்த சின்ன சின்ன சமையல் குறிப்புகளை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

எப்போதும் மதிய உணவிற்கு சாதத்துடன் சேர்த்து சாப்பிட ஏதாவது குழம்பு செய்யும் பழுது, என்றாவது ஒருநாள் இந்த குழம்பில் காரம் அல்லது உப்பு அதிகமாகி விட்டால் என்ன செய்வது என்று யோசிக்க ஆரம்பித்து விடுவோம். உடனே சட்டென்று ஒரு தக்காளிப் பழத்தை சிறு துண்டுகளாக அரிந்து அவற்றை குழம்புடன் சேர்த்து ஒரு கொதி வரும்வரை அடுப்பின் மீது வைத்து குதிக்க விடுங்கள். அவ்வளவுதான் உங்கள் பிரச்சனை உடனே சரியாகிவிடும்.

- Advertisement -

உருளைக்கிழங்கு வைத்து ஏதாவது டிஷ் செய்ய நினைக்கும் போது அதனை முதலில் வேக வைக்க வேண்டும். இப்படி வேக வைத்த உருளைக்கிழங்கு அதிகமாக இருந்தது என்றால் அவை கெட்டுப் போகாமலிருக்க, உருளைக்கிழங்கின் மீது சிறிதளவு வினிகரை தெளித்து, அதனை ஃப்ரிட்ஜில் வைத்து விட்டால் போதும், உருளைக்கிழங்கு கெடாமல் இருக்கும்.

சமைக்கும் அடுப்பின் மீதும் அடுப்பைச் சுற்றியுள்ள இடங்களிலும் எண்ணெய் பிசுக்குகள் அதிகமாக இருக்கும். இவற்றை எவ்வளவு தேய்த்தாலும் சரி செய்ய முடியாது. எனவே ஒரு எலுமிச்சை பழத்தை இரண்டாக அறிந்து கொண்டு, அதனுடன் சிறிது உப்பை தொட்டு தொட்டு எண்ணெய் பிசுகுகள் இருக்கும் இடத்தில் தேய்த்து விட்டால் போதும், சட்டென எண்ணெய் கரைகள் மறைந்து விடும்.

- Advertisement -

பால் விரைவாக கெட்டுப் போகாமலிருக்க பால் காய்ச்சும் பொழுது அதனுடன் ஒரு ஏலக்காயை சேர்த்து கொதிக்க விட வேண்டும். சாப்பாட்டுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட பொறித்து வைத்துள்ள அப்பளம் நமத்து விட்டால் அதனை தூக்கி கீழே போடாமல், மறுநாள் நீங்கள் செய்யும் கூட்டுடன் இவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள் கூட்டு மிகவும் ருசியாக இருக்கும்.

அதேபோல் வாரத்திற்கு ஒரு முறை இட்லி மாவு அரைத்து வைப்பது அனைவரின் வழக்கமாக மாறி விட்டது. இந்த மாவு சீக்கிரத்தில் புளிக்காமல் இருக்க அவற்றுடன் ஒரு வெற்றிலையை மாவின் மேல்புறமாக வைத்துவிட வேண்டும். இவ்வாறு செய்யும்பொழுது அரிசி மாவு சீக்கிரத்தில் புளித்துப் போகாது.

- Advertisement -