உங்க வாழ்க்கையில் இந்த 2 தவறுகளை நீங்கள் செய்யாமல் இருந்தால் உங்களை அடிச்சுக்க வேற ஆளே கிடையாது தெரியுமா? தெரியாம கூட இந்த தப்ப பண்ணாதீங்க!

enemies-astro
- Advertisement -

ஒரு மனிதன் வாழ்நாள் முழுவதும் இந்த 2 தவறுகளை செய்யாமல் இருப்பது தான் அவர்களை மென்மேலும் உயர்நிலைக்கு கொண்டு செல்லும் பண்புகள் ஆகும். உடல், மனம், சுற்றுச்சூழல் அனைத்தையும் சீராக வைத்துக் கொள்ள உதவும் இந்த ரெண்டு விஷயத்தில் கோட்டை விட்டுவிட்டால், வெற்றி என்பது உங்களுக்கு தூரம் ஆகிவிடும். ஒரு மனிதன் தன் வாழ்நாளில் செய்யக்கூடாத 2 தவறுகள் என்னென்ன? அவன் வெற்றி அடையக்கூடிய சாத்தியக்கூறுகளை அதிகரிக்க கூடிய இந்த விஷயம் என்ன? என்பதைத் தான் இனி பார்க்க இருக்கிறோம்.

ஒவ்வொரு மனிதனும் கடிவாளம் போட்டது போல, தன் இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் தான் பயணத்தை துவங்குகிறான் ஆனால் இடையில் எவ்வளவோ இடையூறுகளும், சஞ்சலங்களும் ஏற்பட்டு இலக்கை அடைவதில் தடங்கல்கள் ஏற்பட்டு விடுகின்றன. இத்தகைய மன சஞ்சலங்கள் மற்றும் தடங்கல்களை தகர்த்து எரியக்கூடிய பண்பு இந்த இரண்டு பண்புகள் ஆகும்.

- Advertisement -

உடல் ஆரோக்கியத்தையும், உள ஆரோக்கியத்தையும் சேர்த்து பாதுகாக்கும் இப்பண்புகள் எவர் ஒருவரிடம் இருக்கிறதோ, அவரை வெல்ல இந்த உலகில் வேறு ஒருவர் கிடையாது என்று கூறலாம். அந்த அளவிற்கு ரொம்ப முக்கியமான பண்புகளாக இருக்கும் இவைகள், உங்களிடம் இருக்கிறதா? என்பதை அவ்வபோது பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

முதலாவதாக உங்கள் மனதில் இருக்கும் பொறாமை என்னும் குணத்தை நீக்க வேண்டும். ஒருவரை பார்த்து நீங்கள் பொறாமை பட நேர்ந்தால் உங்களுடைய உடல் ஆரோக்கியம் அறிவியல் ரீதியாக யோசித்தால் பாதிக்கப்படுவது புரியவரும். உடல் ஆரோக்கியம் பொறாமை, கோபம், குரோதம் போன்றவற்றால் பெரும் அளவு பாதிக்கப்படுகிறது. ஒருவர் மீது நீங்கள் கோபப்படும் பொழுது உங்களுடைய சக்தியை கணிசமாக இழந்து விடுவீர்கள். மேலும் உள்ளிருக்கும் இந்த வன்மம் மற்றும் பொறாமை குணம் உங்களுக்கு நோயை ஏற்படுத்தும். ஒருவர் நன்றாக இருக்கிறார் என்றால் நாம் அதை பார்த்து மகிழ்ச்சி அடையா விட்டாலும் பொறாமை படாமல் இருக்க வேண்டும்.

- Advertisement -

பொறாமை என்னும் தீய குணம் உங்களிடம் இருந்தால் வெற்றி உங்களை விட்டு பின்னோக்கி செல்லும். அடுத்ததாக ஒருவர் தெரியாத்தனமாக ஏதோ ஒரு தவறு செய்து விட்டு இருப்பார்கள். அதன் மூலம் உங்களுக்கு ஏதோ ஒரு தீங்கு விளைவித்து விட்டார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்களைப் பற்றிய தவறான எண்ணங்கள் உங்கள் மனதில் வேரூன்ற ஆரம்பித்து விடும். அதே போல உங்களுக்கு தீங்கிழைத்தவர்களை எப்படியாவது பழி வாங்க வேண்டும் என்கிற இந்த எண்ணமும் தீய குணங்களாக இருக்கின்றன. நமக்கு தீங்கிழைப்பவர்களும், துன்பம் கொடுப்பவர்களும் கடவுளால் தண்டிக்கப்படுவார்கள் என்று விட்டுவிட்டு நம்முடைய வேலையில் முழு ஃபோக்கஸ் உடன் கவனம் செலுத்த வேண்டும். ஐயோ இப்படி நம்மைப் பற்றி கூறிவிட்டார்களே, ஐயோ இப்படி நம்மை நினைத்து விட்டார்களே என்று ஆதங்கப்பட்டுக் கொண்டிருந்தால் உடல் நலம் மட்டுமல்லாமல், மன ஆரோக்கியமும் பாதிக்கப்படுகிறது.

நம்முடைய சுற்றுச்சூழலில் இருப்பவர்கள் ஒரு முறை நம்முடைய குணத்தை அறிந்து விட்டால் அதை அவர்கள் மாற்றிக் கொள்ளவும் மாட்டார்கள் எனவே ஒருவர் நமக்கு தீங்கே இழைத்தாலும் பரவாயில்லை, உனக்கு என்னை பற்றிய புரிதல் அவ்வளவுதான்! என்று தூக்கி போட்டு விட்டு போய்க் கொண்டே இருங்கள். இந்த பொறாமை குணம் மற்றும் உள்ளே இருக்கும் குரோதம், கோபம் போன்றவை நம்முடைய வாழ்க்கையை அழித்துவிடும். எனவே இந்த இரண்டு விஷயங்களை தவிர்த்து உங்கள் வாழ்க்கையை பயணித்து பாருங்கள், எந்த விதமான இடையூறுகளும் ஏற்படாமல், வெற்றியை சுலபமாக அடைந்து விடலாம்.

- Advertisement -