விபூதியில் இந்த 1 பொருளை போட்டு வைத்தால் போதும். உங்கள் வீட்டு பூஜை அறையில் இருக்கும் விபூதி கோவில் கருவறையில் இருக்கும் விபூதிக்கு சமமாகும்.

vibuthi
- Advertisement -

ஒவ்வொரு வீட்டு பூஜை அறையும் கோவில் கருவறைக்கு சமமானது தான். கோவிலுக்கு சென்றால் கர்ப்பகிரகத்தில் இருக்கும் இறைவனை பயபக்தியோடு, முழுமனதோடு நம்பிக்கையோடு எப்படி வழிபாடு செய்கின்றோம். அதேபோலத்தான் வீட்டில் பூஜை அறையிலும் நம் வீட்டு தெய்வங்களையும் வழிபாடு செய்ய வேண்டும். பூஜை அறையில் நாம் வைத்திருக்கக்கூடிய விபூதி, குங்குமம், மஞ்சள், சந்தனம், இப்படிப்பட்ட பொருட்களில் எல்லாம் இறை சக்தி நிரம்பியிருக்க அந்த பொருட்களில், வேறு எந்தெந்த பொருட்களை கலந்து வைக்க வேண்டும் என்பதை பற்றிய ஒரு சிறிய சூட்சமமான குறிப்புகளை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

உங்களுடைய வீட்டில் குங்குமம் இருந்தால் அதில் காய்ந்த துளசி இலைகள் 3, பச்சை கற்பூர பொடியைப் போட்டு கலந்து வைக்க வேண்டும். குங்குமத்தின் மகிமை பல மடங்காக உயர இந்த இரண்டு பொருட்களும் குங்குமத்துடன் கலந்து இருப்பது மிக மிக நல்லது.

- Advertisement -

அடுத்தபடியாக மஞ்சள்தூள். இறைவனுக்கு பூஜைக்காக பயன்படுத்தக்கூடிய மஞ்சள்பொடி டப்பாவில் ஒரு சிறிய காட்டன் நூல், ஒரு சிறிய சூடம் போட்டு வைக்க வேண்டும். (இறைவனுக்கு ஏற்றும் சிறிய கற்பூர வில்லை.)

எல்லோராலும் பூஜைக்கு சுத்தமான சந்தன கட்டையை வாங்கி பயன்படுத்த முடியாது. சில பேர் வீடுகளில் கட்டையில் உரசும் சந்தனம் இருக்கும். சில பேர் வீடுகளில் சந்தனப்பொடி தான் இருக்கும். அந்த சந்தனப் பொடியில் சிறிய துண்டு சந்தனக்கட்டையை போட்டு வைப்பது மிக மிக நல்லது. சந்தனத்தை நெற்றியில் இட்டுக் கொள்ளும் போதோ, சுவாமி படங்களுக்கு பொட்டு வைக்க பயன்படுத்தும் போதோ அதில் கொஞ்சமாக பன்னீர் ஊற்றி கலந்து கொள்ளுங்கள். மீதமிருக்கும் சந்தனத்தை அப்படியே உங்கள் வீட்டு பூஜை அறையில் வையுங்கள். பன்னீர் கலந்த சந்தனத்தில் இருந்து வெளிவரக்கூடிய வாசம் உங்கள் வீட்டு பூஜை அறையை கோவில் போலவே வைத்திருக்கும்.

- Advertisement -

அடுத்தபடியாக விபூதி. நெற்றியில் விபூதி பூசாமல் வீட்டில் இருந்து வெளியில் செல்லும் பழக்கத்தை நிறுத்திக்கொள்ளுங்கள். குழந்தைகளாக இருக்கட்டும், பெரியவர்களாக இருக்கட்டும் விபூதியை தினந்தோறும் நெற்றியில் இட்டு வரும் பழக்கத்தை கொண்டு வர வேண்டும். இந்த விபூதியில் ஒரு ருத்ராட்சம் போட்டு வைக்க வேண்டும். சிவன் கோவிலில் இருந்து வாங்கப்பட்ட ருத்ராட்சத்தை போட்டு வையுங்கள்.

விபூதியில் இருக்கக்கூடிய சக்தியே பலமடங்கு பெரியது. அந்த விபூதியில் ருத்ராட்சத்தை போட்டு வைக்கும்போது உங்கள் வீட்டில் இருக்கும் விபூதி இறை சக்தி நிறைந்த விபூதியாக இருக்கும். சிவன் கோவிலில் இருந்து பெறப்படும் சுத்தமான பசுசான விபூதிக்கு உள்ள மகிமை உங்கள் வீட்டு விபூதிக்கு நிச்சயம் கிடைக்கும். திடீரென்று குழந்தைகள் பயந்து அலறி அழும் போது தீராத நோயால் அவதிப்படுபவர்களுக்கு நெற்றியில் பூசப்படும் இந்த விபூதி மருந்தாகவும் இருக்கும்.

ருத்ராட்சமும் விபூதியும் எம்பெருமானுக்கு உகந்து பொருள். இந்த இரண்டு பொருட்களையும் ஒன்றாக சேர்த்து பூஜையறையில் வைத்தால் நிச்சயமாக அந்த பிரசாதம் கோவில் கருவறைக்கு சமமானது தான்.

- Advertisement -