அட! இப்படி எல்லாம் கூடவா பரிகாரங்கள் இருக்கிறது. பல பிரபல்யங்கள் பின்பற்றி, கோடீஸ்வர யோகத்தை பெற்ற இந்த பரிகாரங்களை நாமும் செய்து தான் பார்ப்போமே.

cash1
- Advertisement -

நான் அன்றாட வாழ்வில் இயல்பாக செய்யக்கூடிய விஷயங்கள் கூட, கிரகங்களோடு தொடர்பு பெற்று இருக்கின்றது. அந்த வரிசையில் தினமும் நாம் எதிர் கொள்ளக்கூடிய பிரச்சனைகளை சரி செய்வதற்கு, குறிப்பாக பண பிரச்சனைகளை சரி செய்வதற்கு, இந்த பரிகாரங்கள் நிச்சயம் உங்களுக்கு கை கொடுக்கும்.

பல ஜோதிட பிரபலங்களால் சொல்லப்பட்டு, பல பேர் பின்பற்றி பயனடைந்த அந்த எளிமையான பரிகாரங்கள் என்னென்ன என்று நாமும் தெரிந்து வைத்துக் கொள்வோம். இதையெல்லாம் நேரம் வரும்போது, நேரம் கிடைக்கும்போது முயற்சி செய்தும் பார்ப்போம். நாமும் பிரபல்யமாகி செல்வந்தர் ஆகி, வாழ்வில் உயர்ந்த நிலையை அடைந்தால் அது நமக்கு நன்மை தானே. வாருங்கள் அந்த விசித்திரமான ஆன்மீகம் சொல்லும் பரிகாரங்களை நாமும் தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

பணம் தரும் விசித்திர பரிகாரங்கள்:
கையில் எப்போதும் ஒரு வெள்ளை கைக்குட்டையை வைத்துக் கொள்ளுங்கள். கூடவே கையில் எப்போதும் ஒரு வாட்டர் கேனில் தண்ணீர் வைத்துக் கொள்ளுங்கள். இந்த இரண்டு பொருட்களும் உங்கள் கையில் இருந்தால் பெரிய பிரச்சனைகள் வராது. எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் உங்களுக்கு மனக்குழப்பம் என்பது வரவே வராது. தெளிவான முடிவை எடுப்பதற்கு இந்த பரிகாரம் உதவியாக இருக்கும்.

அதே போல இந்த இரண்டு பொருட்களை கையில் வைத்துக் கொண்டால் உங்களுக்கு பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் தீரும். (எத்தனையோ பெரிய பெரிய அரசியல்வாதிகள் இதை பின்பற்றுகிறார்கள். அதுமட்டுமில்லாமல் பெரிய பெரிய நிறுவனங்களில் வெளிநாடுகளில், பெரிய அளவில் மீட்டிங் வைக்கும் போது பார்த்தாலே உங்களுக்கு தெரியும். கான்ஃபரன்ஸ் ரூமில் டேபிளில், வரிசையாக கண்ணாடி டம்ளரில் தண்ணீரும், வாட்டர் கேனில் தண்ணீர் தான் அடுக்கப்பட்டு இருக்கும்.)

- Advertisement -

பணத்தை நாம் எப்போதும் தண்ணீரோடு தான் ஒப்பிட்டு பேசுகின்றோம். தண்ணீர் போல பணத்தை கரைக்காதே, தண்ணீர் நிறைய ஊற்றினால் பணம் கையில் இருந்து கரையும் என்று. இதற்கு என்ன காரணம் தெரியுமா பணத்திற்கும் சந்திரனுக்கும் தொடர்பு உண்டு. சந்திரனுக்கும் தண்ணீருக்கும் தொடர்பு உண்டு. ஆகவே தான் தண்ணீர் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நாம் கவனமாக இருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

அதிகம் கருப்பு நிற செருப்பை பயன்படுத்தாதீங்க. அதற்கு பதில் வெள்ளை நிற செருப்பை அணிந்து பாருங்கள். வாழ்வில் உண்டாக கூடிய மாற்றத்தை. கருப்பு சனியின் ஆதிக்கம். அதனால் தான் நிறைய அரசியல்வாதிகள் கருப்பு நிற செருப்பை பயன்படுத்தாமல் வெள்ளை நிற செருப்பை பயன்படுத்துகிறார்கள்.

- Advertisement -

இட்லி நம்முடைய பாரம்பரிய உணவு. இட்லியின் நிறம் வெள்ளை. பார்ப்பதற்கு சந்திரனைப் போல தெரிகிறதா. இந்த இட்லியை அடிக்கடி சாப்பிட்டாலும் உங்களுக்கு பல நன்மைகள் நடக்கும். சந்திரனின் அருள் ஆசி உங்களுக்கு கிடைக்கும். இட்லியை அன்னதானமாகவும் கொடுக்கலாம்.

உங்களுடைய கையில் கைபேசி இருக்குதா. செல்போன். அதில் டெம்பர் கிளாஸ் உடைந்து இருக்குதா என்று பாருங்கள். உடைந்த டெம்பர் கிளாஸ் கைபேசியை பயன்படுத்தக் கூடாது. அதை உடனடியாக மாற்றி விடுங்கள். கைபேசியை பாத்ரூமுக்கு உள்ளே கொண்டு போய் பயன்படுத்தாதிங்க.

உங்களுக்கு சந்திராஷ்டமம் நாள் வந்தாலே ரொம்பவும் பயமாக இருக்குமா. உங்களுடைய கைப்பேசியில், உங்களை நீங்களே ஒரு செல்ஃபி எடுத்துக் கொள்ளுங்கள். அந்த செல்ஃபியை உடனடியாக டெலிட் செய்து விடுங்கள். சந்திராஷ்டம நாளில் பெரியதாக பிரச்சனைகள் வராது. சந்திராஷ்டம நாள் தொடங்கக்கூடிய நேரத்தில் இரண்டு குட் டே பிஸ்கட்டை சாப்பிட்டு தண்ணீர் குடித்துவிட்டு, அன்றைய நாள் முழுவதும் நல்ல நாளாக தான் இருக்கும் என்று முடிவு செய்து விட்டீர்கள் என்றால், அந்த நாளில் பெரியதாக பிரச்சனைகளும் வராது.

உங்களுக்கு உதவி செய்பவர்களிடம் அடிக்கடி நன்றி சொல்லுங்கள். தவறு செய்தால் அடுத்தவர்களிடம் சாரி கேளுங்கள். எப்போதும் சிரித்த முகத்துடன் அடுத்தவர்களிடம் பழகுங்கள். இது ஒரு நல்ல பாசிட்டிவ் எனர்ஜியை உங்களுக்குள் கொடுத்துக் கொண்டே இருக்கும். அதுவே வாழ்க்கையில் வெற்றி பெற காரணமாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: கண்ணுக்குத் தெரியாத எதிரியை கூட கண் காண தூரத்திற்கு விரட்டி அடிக்க ஒரே ஒரு வெற்றிலையை இப்படி செய்து உங்க பக்கெட்டில் வைத்து கொள்ளுங்கள் போதும்.

பல பிரபல்யங்களால் பல நேர்காணலில் சொல்லப்பட்ட, பல பரிகாரங்கள் தான் இந்த பதிவில் உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. இதையெல்லாம் செய்தால் ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆகி விட முடியாது. இதை நீங்கள் உங்களுடைய வாழ்நாள் பழக்கமாகவே மாற்றிக் கொள்ளுங்கள். பிறகு வாழ்வில் நிச்சயம், ஒரு சில நாட்களில் நல்ல மாற்றம் தெரியும் என்ற இந்த தகவலோடு இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -