வளமையைத் தரும் விநாயகரின் சிலை உங்களிடம் இருந்தால் இப்படி மட்டும் வைக்க வேண்டாம்! இது வறுமையை தந்துவிடக் கூடும் என்று எச்சரிக்கிறது ஆன்மீகம்! வீட்டில் விநாயகரை எப்படி வைக்கக் கூடாதுன்னு தெரியுமா?

vinayagar
- Advertisement -

வளமையையும், வெற்றியையும் தரக்கூடிய விநாயகர் எல்லோருடைய வீட்டிலும் நிச்சயம் இருப்பது உண்டு. முழு முதல் கடவுளான விநாயகரை வழிபட்ட பின்பே மற்ற தெய்வங்களை வழிபட வேண்டும் என்பது இந்து சாஸ்திரம். இந்த வகையில் விநாயகர் சிலை வீட்டில் வைத்திருப்பவர்கள் அதை எப்படி வைத்துக் கொள்ளக் கூடாது? எப்படி வைக்க வேண்டும்? என்பது போன்ற பயனுள்ள ஆன்மீக தகவல்களைத் தான் இந்த பதிவின் மூலம் நீங்கள் தெரிந்து கொள்ள இருக்கிறீர்கள்.

தும்பிக்கை விநாயகரை வழிபடுபவர்களுக்கு என்றும் நம்பிக்கை தளர்வதில்லை என்பது அனைவருக்கும் தெரியும். வெற்றியை அடைய வெற்றி விநாயகரை வழிபடுகின்றோம். விநாயகர் சிலை, விநாயகர் வழிபாடு இல்லாத எந்த ஒரு பூஜையும் நிறைவு பெறுவது இல்லை. இத்தகைய சிறப்புகள் வாய்ந்த விநாயகர் சிலை வீட்டில் நிறுவினால் ஒவ்வொரு சதுர்த்தி அன்றும் அவருக்கு குறைந்தது வெறும் சுத்த தண்ணீரால் மட்டுமாவது அபிஷேகம் செய்து வழிபட்டு வாருங்கள்.

- Advertisement -

வீட்டில் சிலைகள் வைத்திருந்தால் அதனை காய விடக்கூடாது. அபிஷேகப் பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்து வைப்பதன் மூலம் விக்கிரகங்கள் சக்தி பெறுகிறது. இதனால் தான் கோவிலிலும் அபிஷேகம் தொடர்ந்து நடைபெறுகிறது. விநாயகர் சிலை அல்லது படங்கள் நீங்கள் வாங்குவதானால் அவருடைய தும்பிகையை முதலில் கவனித்து வாங்க வேண்டும். விநாயகரின் தும்பிக்கை அன்னை பார்வதி தேவியை நோக்கியபடி இடது பக்கம் இருக்குமாறு அமைப்பது சிறந்ததாகும்.

விநாயகர் சிலைகள் வீட்டில் வைத்திருந்தால் அவருடைய பின்புறம் ஆனது வீட்டின் வெளிப்புறத்தை நோக்கி அமைக்கப்பட்டு இருக்க வேண்டும். விநாயகருடைய பின்புற பகுதியானது வீட்டில் எந்த ஒரு கதவினையும் பார்த்தபடி அமைந்திருக்கக் கூடாது. விநாயகருடைய முன்புறம் வளமையை கொடுக்கும் என்றால், பின்புறம் வறுமையை கொடுக்கும் என்று ஆன்மீகம் குறிப்பிடுகிறது. எனவே பின்புறம் வெளிப்புறத்தை நோக்கி அமைக்கப்பட வேண்டும் என்பது நியதி.

- Advertisement -

பூஜை அறையும், விநாயகர் சிலையும் தெற்கு திசையில் அமைக்கவே கூடாது. இது வறுமையையும், தரித்திரத்தையும் ஏற்படுத்தும். கிழக்கு அல்லது மேற்கு திசையில் சிலையை நிறுவ வேண்டும். உலோகங்களால் ஆன சிலைகளை வடகிழக்கு அல்லது தென்மேற்கு திசையில் அமைக்கலாம். வீட்டில் கழிவறை சுவற்றை நோக்கியபடி விநாயகர் சிலையை வைக்கக் கூடாது. சிலர் வீட்டிற்குள் மாடிப்படி அமைத்திருப்பார்கள். இந்த படியின் அடியிலும் விநாயகரை வைத்து வழிபடக்கூடாது. இது துரதிர்ஷ்டத்தை கொடுக்கும் செயலாகும்.

வெள்ளிக்கிழமையில் விநாயகருக்கு மஞ்சள், சந்தனம், சாணம், எலுமிச்சை, சாத்துக்குடி, பஞ்சாமிர்தம், நார்த்தம் பழம், இளநீர், தேன், பச்சரிசி மாவு போன்றவற்றால் அபிஷேகம் செய்வதன் மூலம் கிரக தோஷங்கள் நீங்கி, நீங்கள் வெற்றி மேல் வெற்றியை அடையலாம். வெற்றிகள் பல குவிய தொடர் தடைகள் நீங்கி, எதிர்பார்த்தவை உங்களுக்கு சாதகமாக அமைய, வளர்பிறை சதுர்த்தியில் முழு மனதோடு விநாயகருக்கு விரதம் இருந்து, கோவிலுக்கு சென்று வழிபட்டு வர வேண்டும். ஒவ்வொரு சதுர்த்தியிலும் நீங்கள் விநாயகர் வழிபாடு செய்து வருவதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் இருக்கும் துன்பங்கள் நீங்கி, இன்பங்கள் பெருகும். மேலும் தொடர் வெற்றிகள் குவியும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.

- Advertisement -