நீங்கள் விரும்பிய தெய்வம் உங்கள் பூஜை அறையில் வந்து அமரும். ஒரு கண்ணாடியை பூஜை அறையில் இப்படி வைத்தால்.

mirror-poojai
- Advertisement -

நாம் விரும்பிய தெய்வத்தை பூஜை அறையில் அழைத்து அமர வைத்து வழிபாடு செய்வதற்கான ஒரு சிறிய பரிகாரத்தை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். ஒரு வேலை உங்களுக்கு குலதெய்வம் தெரியவில்லை என்றாலும் இந்த பரிகாரத்தை நீங்கள் செய்யலாம். தெரியாத குலதெய்வம் வந்து இந்த கண்ணாடியில் அமர்ந்து நிச்சயமாக உங்கள் குடும்பத்திற்கு நல்லது செய்யும். குடும்பத்தில் தீர்க்க முடியாத கஷ்டம் இருக்கிறது. அது தெய்வ குத்தமாக இருக்குமோ என்று வருத்தப்படுபவர்களும் இந்த பரிகாரத்தை செய்து பார்க்கலாம். பரிகாரத்தை செய்ய தொடங்கிய ஒரு சில நாட்களிலேயே வீட்டில் இருக்கும் கஷ்டங்கள் படிப்படியாக குறைந்து குடும்பத்தில் அடுத்தடுத்து நல்லது நடப்பதை கண்கூடாக காண முடியும்.

இந்த பரிகாரத்திற்கு நமக்குத் தேவையான பொருள் ஒரு கண்ணாடி. அது எந்த வடிவத்தில் இருக்கும் கண்ணாடியாக இருந்தாலும் பரவாயில்லை. புதியதாக மீடியம் சைஸில் இருக்கும் ஒரு கண்ணாடியை வாங்கிக் கொள்ளுங்கள். கண்ணாடியின் ஓரங்களில் இரும்பு இருக்க வேண்டாம். அதாவது கண்ணாடி ஃபிரேம் இரும்பினால் செய்யப்பட்டதாக இருக்கக் கூடாது. கூடுமானவரை ஃபிரேம் மரத்தில் இருக்கும் படி பார்த்து கண்ணாடியை வாங்கிக் கொண்டால் மிக மிக நல்லது.

- Advertisement -

வாங்கி வந்த கண்ணாடியை சுத்தமாக மஞ்சள் தண்ணீரில் துடைத்துவிட்டு அதன் பின்பு பூஜை அறையில் மாட்ட வேண்டும். உங்களுடைய வீட்டு பூஜை அறையில் நடுப்பகுதியாக ஒரு இடத்தை பார்த்து தேர்ந்தெடுத்து இந்த கண்ணாடியை மாட்டி வைத்து விடுங்கள். அதாவது மற்ற சுவாமி படங்கள் எல்லாம் சுற்றி இருந்தாலும் நடுவில் இந்த கண்ணாடி இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

உங்கள் வீட்டு வழக்கப்படி நீங்கள் பட்டை போடுவதாக இருந்தால் அந்த கண்ணாடிக்கு பட்டை போட்டு குங்குமம் வைக்கலாம். சில பேர் நாமம் போடக்கூடிய பழக்கம் இருந்தால், நாமம் போடலாம். சில பேர் மஞ்சள் குங்குமம் தான் வைப்பீர்கள் என்றால் மஞ்சள் குங்குமத்தை அந்த கண்ணாடியில் வைத்து விடுங்கள். பிறகு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து விடுங்கள். ஒரு சொம்பு சுத்தமான தண்ணீரை வைத்து விட வேண்டும். பிறகு பூஜை அறையில் அமர்ந்து மனதார பிரார்த்தனை செய்ய வேண்டும்.

- Advertisement -

உங்களுடைய குடும்பத்தில் இருக்கும் தீராத கஷ்டங்களை துயரங்களை இறைவனிடம் முறையிடுங்கள். உங்களுக்கு குலதெய்வம் தெரியும் என்றால் அந்த குல தெய்வத்தை மனதார நினைத்து, அந்த குலதெய்வம் இந்த கண்ணாடியின் மூலம் காட்சி தர வேண்டும் என்று நினைத்து மனதார வேண்டிக் கொண்டால் குலதெய்வம் உங்கள் வீட்டிற்குள் வந்து இந்த கண்ணாடியில் அமர்ந்து உங்கள் குடும்பத்திற்கு நன்மை செய்யும்.

குலதெய்வம் தெரியாதவர்கள் தெரியாத குல தெய்வத்தை நினைத்து, இந்த கண்ணாடியை அவரவர் வீட்டு குல தெய்வமாக பாவித்து தினம் தோறும் பூஜை செய்து வரலாம். உங்களுக்கே தெரியாத குலதெய்வம், உங்கள் வீடு தேடி வந்து அந்த கண்ணாடியில் அமர்ந்து உங்கள் குடும்பத்திற்கு நல்லது செய்யும். அப்படி இல்லை என்றால் உங்களுக்கு மனதிற்கு பிடித்த ஏதாவது ஒரு தெய்வத்தை நினைத்து கூட இப்படி ஒரு கண்ணாடியை மாட்டி அந்த தெய்வத்தை மனதார அழைத்தால், அந்த தெய்வம் மனம் விரும்பி உங்கள் பூஜை அறைக்கு வந்து இந்த கண்ணாடியில் குடியேறி உங்கள் வீட்டிற்கு பிரகாசமான ஒரு வெளிச்சத்தை கொடுக்கும்.

ஆனால் இந்த பரிகாரத்தை நம்பிக்கை இல்லாமல் செய்வதன் மூலம் எந்த பலனும் கிடைக்காது. தினம் தினம் குளித்துவிட்டு பூஜை அறைக்கு வந்து விளக்கு ஏற்றி அந்த கண்ணாடியை பார்த்து வேண்டிக் கொள்ளும் போது, உங்களுடைய கண்களில் அந்த கண்ணாடியில் நீங்கள் மனதில் நினைக்கும் தெய்வம் தெரிய வேண்டும். அந்த அளவிற்கு நம்பிக்கையோடு இந்த வழிபாட்டை மேற்கொண்டால் நிச்சயமாக நீங்கள் அழைத்து வழிபாடு செய்யக்கூடிய அந்த தெய்வம் உங்கள் பூஜை அறையில் வந்து குடியேறும் என்பது நம்பிக்கை. முயற்சி செய்துதான் பாருங்களேன். உங்கள் குடும்ப கஷ்டம் தீருவதற்கு இந்த வழிபாடு உங்களுக்கு கை மேல் பலனை கொடுக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -