வீட்டுக்கு வருபவர்களை இந்த இடத்தில் மட்டும் அறியாமல் கூட அமர வைக்காதீர்கள்! கணவன் மனைவிக்குள் சண்டை நடக்கும்.

couple-fight-bed-paai
- Advertisement -

நம் வீட்டிற்கு வருபவர்களை இன் முகத்துடன் வரவேற்பது, விருந்தோம்பல் செய்வது நம் தமிழர்கள் உடைய பாரம்பரிய பழக்க வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் இப்போது எல்லாம் யாராவது வீட்டிற்கு வந்தாலே எதற்குத்தான் வருகிறார்களோ என்று தோன்றிவிடும் அளவிற்கு நிலைமை மாறிக் கொண்டிருக்கிறது. இந்த வகையில் நம்முடைய வீட்டிற்கு வருபவர்களை தெரியாமல் கூட இந்த இடத்தில் அமர வைத்து விடக்கூடாது என்கிறது சாஸ்திரங்கள். அப்படியான இடம் என்ன? இதனால் உண்டாகக்கூடிய விளைவுகள் என்ன? என்பதைத்தான் இந்த ஆன்மீக குறிப்பு பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

வீட்டிற்கு தெரிந்தவர்கள், உறவினர்கள் யார் வந்தாலும் முதலில் இன்முகத்துடன் வரவேற்க வேண்டும். அவர்கள் உள்ளே வந்தவுடன் மனை, சேர் அல்லது பாய் ஏதாவது ஒன்றை போட்டு தான் அமர வைக்க வேண்டும். வெறும் தரையில் ஒருபோதும் அமரும்படி சொல்லக்கூடாது. அவர்களுக்கு முதலில் அருந்துவதற்கு தண்ணீர் அல்லது நீர்மோர் ஏதேனும் ஒன்றை கொடுக்க வேண்டும் இதுதான் முறையாகும்.

- Advertisement -

அவர்கள் வயிறு குளிர செய்து விட்டாலே போதும், நமக்கு அவர்கள் மூலம் நன்மைகள் தான் நடக்கும் என்பது ஐதீகம். கெட்ட எண்ணத்தில் வீட்டிற்கு வந்திருந்தாலும் அல்லது வீட்டை பார்த்ததும் அவர்களுக்கு பொறாமை அல்லது வஞ்சக எண்ணங்கள் தோன்றி இருந்தாலும் கூட, நீங்கள் கொடுக்கும் இந்த தண்ணீரானது அதனை தணிக்கும் என்பது தான் நியதி!

இது போல வீட்டிற்கு வருபவர்களை முதல் உபசரிப்பு செய்த பின்னர் அவர்களிடம் பேச்சுக் கொடுத்து கொண்டிருக்கலாம். அப்போது சிலர் வீட்டை சுற்றிப் பார்க்கிறேன் என்கிற பெயரில் எல்லா இடங்களுக்கும் செல்வார்கள். அது போல செல்லும் பொழுது கணவன் மனைவி இருவரும் படுக்கும் படுக்கை அறைக்கும் செல்வார்கள்.

- Advertisement -

கணவன் மனைவி படுக்கும் படுக்கையில் வீட்டிற்கு வருபவர்களை ஒருபோதும் அமர செய்யக்கூடாது. முந்தைய காலங்களில் எல்லாம் கணவன் மனைவி படுக்கும் பாயை கூட மற்றவர்களுடைய கண்களுக்கு படும்படி வைக்க மாட்டார்கள். அதை தினமும் தண்ணீர் ஊற்றி கழுவி காயவைத்து பயன்படுத்துவார்கள். இப்போது எல்லோருடைய வீட்டிலும் மெத்தைகள் இருக்கிறது. அத்தகைய மெத்தையில் வீட்டிற்கு வரும் உறவினர்களையோ அல்லது நண்பர்களையோ உட்கார வைக்காதீர்கள். இதனால் கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டைகள் வருவதற்கு நிறையவே வாய்ப்புகள் உண்டு.

அது போல நோய்வாய்ப்பட்டவர்கள் வீட்டில் இருந்தால் அவர்களுக்கு தனியாக கட்டில் அல்லது மெத்தை போட்டு வைத்திருப்போம். அதில் கூட மற்றவர்களை அமர வைக்க கூடாது. குறிப்பாக வயதில் குறைந்த குழந்தைகளை அதில் இருத்த கூடாது. இதனால் அறிவியல் ரீதியாக தொற்றுகள் பரவுவதற்கு வாய்ப்புகள் உண்டு என்றாலும், ஆன்மீக ரீதியாகவும் நன்மை கிடையாது.

இதையும் படிக்கலாமே:
இன்று மாசி அமாவாசை! இன்று இரவுக்குள் இந்த 1 விஷயத்தை மட்டும் செய்துவிட்டால் நீங்கள் நினைத்த குறிக்கோளை உடனடியாக அடையலாம்.

கணவன் மனைவி இருவரும் படுக்கும் அறையில் பொதுவாக மற்றவைகளை உள்ளே கூட உங்கள் நுழைய அனுமதிக்க தேவையில்லை. எப்பொழுதும் அதனை தாழிட்டு வைத்திருப்பது நல்லது. மெத்தை, தலையனை உறைகளை வாரம் ஒரு முறையாவது சுத்தம் செய்து வைத்துவிட வேண்டும். சிலர் மாத கணக்கில் கூட இவைகளை துவைக்காமல் வைத்திருப்பார்கள். இது போல இருக்கும் இல்லங்களில் கூட அடிக்கடி கணவன் மனைவிக்குள் சண்டை, சச்சரவுகளும், கருத்து வேறுபாடுகளும் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு.

- Advertisement -