சில பொருட்களை மீண்டும் சமைத்தால் விஷமாக மாறும் தெரியுமா? சமையலறையில் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய அட்டகாசமான 10 குறிப்புகள்!

kitchen-egg-potato
- Advertisement -

நாம் சமைக்கும் சாப்பாட்டில் இருந்து தான் ஆரோக்கியம் கிடைக்கிறது. நீண்ட நாள் ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு செய்யும் சமையல் கவனமுடன் இருப்பது அவசியமாகிறது. சில பொருட்களை மீண்டும் மீண்டும் சமைப்பதால் அது விஷமாக மாறும்! அதே போல சில பொருட்களை இப்படி வைத்தால் ருசியும் அதிகரிக்கிறது. இப்படி நமக்கு தெரியாத சமையல் குறிப்புகள் பத்தினை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

குறிப்பு 1:
உருளைக்கிழங்கை வேக வைத்து சமைத்தால் தான் அதன் முழு சத்தும் நமக்கு கிடைக்கும். உருளைக்கிழங்கை ஒருமுறை சமைத்த பிறகு மீண்டும் சூடேற்றக் கூடாது அது விஷமாக மாறிவிடும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

குறிப்பு 2:
ஊறுகாய் தயாரிப்பவர்கள் அதில் சேர்க்கப்படும் எண்ணெயை நன்கு கொதிக்கவிட்டு ஆவி ஆக்கி பின்னர் குளிர வைத்த எண்ணெயில் ஊறுகாய் தயாரித்தால் அவ்வளவு எளிதாக பூஞ்சனம் பிடிக்காது.

குறிப்பு 3:
அடிக்கடி சப்பாத்தி சுடுபவர்கள் அலுமினியம் பாயில் பேப்பர் என்று கேட்டு கடையில் இருந்து வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். இந்த அலுமினியம் ஃபாயில் பேப்பரில் சுட சுட சப்பாத்தியை சுற்றி வைத்தால் நீண்ட நேரம் அப்படியே சூடாக இருக்கும். ஃபாயில் பேப்பரை சுற்றி ஹாட் பாக்ஸ் இல் போட்டு வைத்தால் இன்னும் அதிக நேரம் அதே சூட்டுடன் இருக்கும்.

- Advertisement -

குறிப்பு 4:
வாழைக்காயை கறுத்துப் போகாமல் ஃப்ரிட்ஜில் வைக்க அப்படியே வைக்கக் கூடாது. அதை இரண்டாக வெட்டி ஒரு பேப்பரை சுற்றி வையுங்கள், நீண்ட நாட்களுக்கு கெட்டுப் போகாது.

குறிப்பு 5:
வெயில் காலங்களில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைய ஆரம்பிக்கும். இதனை ஈடு கட்டுவதற்கு ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ள எலுமிச்சை பழச்சாறு, நெல்லிக்காய் சாறு, சாத்துக்குடி, ஆரஞ்சு போன்றவற்றை அடிக்கடி ஜூஸ் போட்டு பருகலாம்.

- Advertisement -

குறிப்பு 6:
பூரிக்கு உருளைக்கிழங்கு மசாலா செய்யும் பொழுது சுவை அதிகரிக்க சிறிதளவு பொட்டுக்கடலை மற்றும் சோம்பு அரைத்து சேர்க்கலாம். மசாலா கிழங்கு திக்காக, கிரேவியாகவும் வரும்.

குறிப்பு 7:
முட்டையில் இருக்கும் புரோட்டீன்கள் நமக்கு முழுமையாக கிடைக்க அதை அதிகம் வேக வைக்க கூடாது. மீண்டும் மீண்டும் முட்டையை வேக வைப்பதால் ஏற்படக்கூடிய மாற்றம் நம்முடைய உடம்பில் செரிமான மண்டலத்தை மோசமாக பாதிப்படைய செய்து விடும்.

குறிப்பு 8:
காய்கறிகளை சமைக்கும் பொழுது காய்கறிகள் நன்கு வெந்த பின்னர் உப்பு சேர்ப்பதால் அதில் இருக்கும் இரும்புச்சத்து வீணாகாமல் இருக்கும். முன்னரே நீங்கள் உப்பு சேர்த்து விட்டால் இரும்பு சத்து வீணாகிவிடும்.

குறிப்பு 9:
இடியாப்பத்திற்கு மாவு தயாரிக்கும் பொழுது பாலை நன்கு கொதிக்க வைத்து இதனுடன் ஊற்றி இடியாப்பம் பிழிந்தால் நல்ல சுவையாகவும், வெண்மையாகவும், மெத்தென்று மிருதுவாகவும் வெந்து வரும்.

குறிப்பு 10:
மணத்தக்காளி அல்லது சுண்டைக்காய் வத்தல் போன்ற வத்தல் குழம்பு வகைகளை செய்யும் பொழுது இறக்கும் பொழுது சுட்ட அப்பளத்தை நொறுக்கி சேர்த்து பாருங்கள், அவ்வளவு ருசியாக இருக்கும்.

- Advertisement -