4 விட்டமின் E கேப்ஸ்யூல் இருந்தால் போதும். 4 ஊருக்கும் சேர்த்து நீங்க தான் பியூட்டி குயின். இப்படி ஒரு பேரழகு உங்க சுற்று வட்டாரத்திலேயே இருக்காது.

face4
- Advertisement -

நாம் இருக்கும் தெருவில் நாம் தான் பியூட்டி குயினாக இருக்க வேண்டும் என்பது ஒவ்வொரு பெண்மணிகளின் ஆசையாக இருக்கும். சருமம் ஜொலி ஜொலிக்க பேரழகை பெற வேண்டும் என்றால், இன்று பியூட்டி பார்லருக்கு நம் சொத்தையே எழுதி வைக்க வேண்டியதுதான். அப்பப்பா எவ்வளவு செலவு. மிக மிக எளிமையான முறையில் வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் வைத்து நம்முடைய வீட்டிலேயே எளிமையாக பேசியல் செய்து கொள்வது எப்படி. 4 ஸ்டெப்பில் இந்த ஃபேசியல் செய்து முடிக்கலாம். அழகு பெண்மணிகளுக்கான, அழகு குறிப்பு இதோ உங்களுக்காக.

விட்டமின் E கேப்ஸ்யூல் ஃபேசியல் செய்வது எப்படி?
முதலில் முகத்தை கிளன்ஸ் செய்ய வேண்டும். ஒரு சிறிய கிண்ணத்தில் தயிர் 1 டேபிள் ஸ்பூன், விட்டமின் ஈ கேப்ஸ்யூல் 1, போட்டு நன்றாக கலந்து இந்த கலவையை முகம் முழுவதும் அப்ளை செய்து நன்றாக ஐந்து நிமிடம் மசாஜ் செய்து, குளிர்ந்த தண்ணீரில் முகத்தை கழுவி விடுங்கள்.

- Advertisement -

அடுத்தபடியாக முகத்தை எளிமையாக ஸ்கரப் செய்யலாம். சர்க்கரை பவுடர் 1 ஸ்பூன், காபி தூள் 1/2 ஸ்பூன், விட்டமின் ஈ கேப்ஸ்யூல் 1, ஆலுவேரா ஜெல் 1/2 ஸ்பூன், போட்டு இதை ஒரு பேஸ்ட் போல கலந்து உங்களுடைய முகத்தில் தேய்த்து 3 நிமிடம் ஸ்க்ரப் செய்ய வேண்டும். குறிப்பாக மூக்கு பகுதி, தாடை பகுதியில், நெற்றியில் எல்லாம் கவனம் செலுத்தி ஸ்கிரப் செய்யுங்கள். அப்போதுதான் பிளாக்கெட்ஸ் வைட் டெட்ஸ் நீங்கும். பிறகு சுத்தமான நீரில் முகம் கழுவி விடுங்கள்.

அடுத்தபடியாக சூப்பரான பேஸ் மாசாஜ் செய்ய வேண்டும். ஒரு சிறிய கிண்ணத்தில் அலோவேரா ஜெல் 2 ஸ்பூன், விட்டமின் ஈ கேப்ஸ்யூல் 1, பால் தேவையான அளவு ஊற்றி கலந்தால் சூப்பரான கிரீமி ஃபேஸ்பேக் கிடைக்கும். இதை முகம் முழுவதும் அப்ளை செய்து விட்டு, 10 நிமிடம் நன்றாக மசாஜ் செய்து, இரண்டு நிமிடம் கழித்து முகத்தை கழுவி விடுங்கள்.

- Advertisement -

இறுதியாக ஒரு ஃபேஸ் பேக். ஒரு சிறிய கிண்ணத்தில் சந்தன பவுடர் 1 டேபிள் ஸ்பூன், தேன் 1 ஸ்பூன், விட்டமின் ஈ கேப்ஸ்யூல் – 1, ரோஸ் வாட்டர் சிறிதளவு ஊற்றி, இதை பேக்காக தயார் செய்து முகம் முழுவதும் போட்டுக் கொள்ளுங்கள். 15 இலிருந்து 20 நிமிடம் கழித்து பேக் இறுக்கி பிடிக்கும். நன்றாக காய்ந்து விடும். முகத்தை ஈரம் செய்து வட்ட வடிவில் மசாஜ் செய்து முகத்தை கழுவினால் உங்களுடைய முகத்தில் பொலிவு அப்படியே கிளார் அடிக்கும் பாருங்கள்.

இதையும் படிக்கலாமே: 1/2 கேரட் இருந்தா போதும் 10 பைசா செலவு செய்யாமல் ஊரே மயங்கும் அழகி ஆகலாமே!

விட்டமின் ஈ கேப்ஸ் பயன்படுத்தும் போது, அதன் முனையில் வெட்டி உள்ளே இருக்கும் ஜல்லை மட்டும் இந்த அழகு குறிப்புக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். உங்களுடைய சருமம் ரொம்பவும் சென்சிடிவ்வான சருமம் என்றால் இந்த விட்டமின் ஈ கேப்ஸ்யூலை ஒருமுறை பேட்ச் டெஸ்ட் எடுத்துக் கொள்ளுங்கள். எந்த ஒரு ரேஷஸும் உங்களுக்கு வரவில்லை என்றால் தாராளமாக இந்த பேசியலை வீட்டிலேயே நீங்கள் செய்து கொள்ளலாம். முகத்தில் உடனடியாக ஒரு பொலிவு கிடைக்கும்‌. இந்த ஃபேசியலை மாதம் ஒருமுறை செய்து கொள்ளலாம். பிறகு உங்கள் தெருவில் மட்டுமல்ல, உங்கள் ஊரில் மட்டும் அல்ல, நான்கு உருக்கு சேர்த்து நீங்கதான் குயின்.

- Advertisement -