இந்த மலரை மட்டும் ஒரு வருடம் கூட பூஜை அறையில் வைக்கலாம் தெரியுமா ?

puja-room-2

நாம் இறைவனின் பூஜைக்காக பறிக்கும் பூ எப்படி இருக்கவேண்டும் என்பதற்கே ஒரு நியதி இருக்கிறது. ஆனால் ஒரு முறை பறித்து அதை ஒரு வருடம் வரை தினமும் கழுவி மறுபடியும் இறைவனுக்கு சார்த்தக்கூடிய புண்ணியம் பெற்ற சில பூக்களும், இலைகளும் இருக்கத்தான் செய்கிறது. அந்த வகையில் இறைவனின் பூஜைக்கு பறிக்கும் மலர் எப்படி இருக்க வேண்டும்? எந்த மலரை எத்தனை நாட்கள் பூஜைக்காக உபயோகப்படுத்தலாம் இப்படி பல தகவல்களை இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

uruli

பொதுவாக கீழே உதிர்ந்த பூக்களை இறைவனுக்கு சார்த்தக்கூடாது. அதேபோல் பூச்சி அடித்த பூ, நீரில் மூழ்கிய பூ, பறவைகள் எச்சமிட்ட பூ போன்றவற்றை இறைவனுக்கு சார்த்தக்கூடாது. அதே போல எந்த தெய்வத்திற்கு எந்த மலர் உகந்தது என்றும் ஒரு வரையறை உண்டு. அதை அறிந்து அதன்படி பூஜை செய்வது மேலும் சிறப்பை தரும்.

பொதுவாக ஒருமுறை பூஜையில் வைத்த பூவை அப்படியே அடுத்தநாளும் வைத்து பூஜை செய்யக்கூடாது என்றொரு ஐதீகம் உண்டு. ஆனால் இதற்கு சில மலர்களுக்கு விதிவிலக்கு உண்டு. தாமரை மலரை 7 நாட்கள் வரை பூஜையில் வைத்திருக்கலாம். அரளியை மூன்று நாட்கள் வரையிலும் வில்வத்தை ஆறு மாதங்கள் வரையிலும் பூஜையில் வைக்கலாம்.

flower

மேலே குறிப்பிட்ட அனைத்திற்கும் மேலாக துளசியை ஒரு வருடம் வரைகூட வைத்து பூஜை செய்யலாம். கரு ஊமத்தை, துளசி, வில்வம் போன்றவற்றை தினம் தினம் கழுவி மீண்டும் பூஜையில் வைப்பதால் எந்த தவறும் இல்லை என்று சிவபூஜா பத்ததி என்ற நூல் கூறுகிறது.

sivan

இதையும் படிக்கலாமே:
உறவுக்குள் சண்டையா ? இந்த கோயிலிற்கு செல்லுங்கள் சரியாகிவிடும்

சில பூக்களை பொதுவாக அர்ச்சனைக்கு தவிர்பது நன்று. அந்த வகையில் விநாயகருக்கு துளசியால் அர்ச்சனை செய்யக்கூடாது என்பார்கள். ஆனால் சதுர்த்தி அன்று மட்டும் இதற்கு விதி விளக்கு உண்டு. சிவனுக்கு தாழம்பூ அர்ச்சனை ஆகாது. விஷ்ணுவிற்கு ஊமத்தம்பூ, எருக்கம்பூ ஆகியவற்றால் அர்ச்சனை செய்யக்கூடாது. அம்பிகைக்கு அருகம்புல் அர்ச்சனை கூடாது. இப்படி சில பூக்களை சில தெய்வங்களின் அர்ச்சனையில் சேர்க்கக்கூடாது என்பது ஐதீகம்.