நினைத்தது நிறைவேற சோடஷ கலை நேரம்

porunami god
- Advertisement -

திதிகளிலே அமாவாசை திதியும் பௌர்ணமி திதியும் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த திதிகளில் நாம் செய்யும் வழிபாடுகள் பூஜைகள் நேரடியாக பலனை தருவதாக உள்ளது. திதிகள் மொத்தம் 15 என கணக்கிடப்படுகிறது. பிரதமை தொடங்கி அமாவாசை வரை உள்ள திதி தேய்பிறை திதியாகவும், அதன் பிறகு பௌர்ணமி வரை வரும் திதிகள் வளர்பிறை திதிகளாகவும் கணக்கில் கொள்ளப்படுகிறது.

இதில் நாம் பலரும் அறியாத ஒரு அபூர்வமான பதினாறாவது திதி உள்ளது .அதை தான் ஷோடஷ கலை நேரம் என்று சொல்வார்கள். இந்த நேரத்தை ஒருவர் சரியாக பயன்படுத்திக் கொண்டால் அவர் வாழ்க்கையில் நினைத்ததை சாதித்துக் கொள்ளலாம். அந்த திதி குறித்தும் அந்த நேரத்தில் நாம் செய்ய வேண்டியவை குறித்தும் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

நினைத்தது நடக்க சோடஷ கலை நேரம்

இந்த சோடஷ கலை நேரம் என்பது திதிகளில் 16வது தேதி என அகத்தியர் கூறுவதாக சொல்லப்படுகிறது. இந்த திதியானது அமாவாசை மற்றும் பௌர்ணமி முடியும் ஒரு மணி நேரத்திற்கு முன்பும் பின்பும் வரும் நேரம் தான் சோடஷ நேரம் என்று சொல்லப்படுகிறது. இந்த நேரத்தை அவ்வளவு துல்லியமாக கணக்கிட முடியாது. ஏனெனில் இந்த இரண்டு மணி நேரங்களில் ஏதேனும் ஒரு ஐந்து நிமிடம் மட்டுமே ஷோடச கலை நேரம் வரும்.

இன்றைய தினம் பௌர்ணமி திதியானது மாலை ஆறு ஐம்பதுடன் முடிவடைகிறது. இந்த திதி முடிவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே பூஜை அறையை சுத்தம் செய்து விளக்கேற்றி வைத்து விடுங்கள். இந்த பௌர்ணமி திதி முடிவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே பூஜை அறையில் ஒரு துணியை விரித்து வடக்கு திசை நோக்கி அமர்ந்து தியானத்தில் ஈடுபட வேண்டும். இந்த தியானமானது பௌர்ணமி திதி முடிந்து ஒரு மணி நேரம் வரை தொடர்ந்து செய்ய வேண்டும்.

- Advertisement -

இந்த இரண்டு மணி நேரத்தில் உங்கள் மனதிற்கு பிடித்த இஷ்ட தெய்வம் குலதெய்வம் யாரேனும் ஒருவரை நினைத்து அவர்களை வேண்டிக் கொள்ளுங்கள். அத்தோடு உங்களுக்கு எது தேவையோ ஏதேனும் ஒன்றை மட்டும் நினைத்து பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். இந்த நேரத்தில் நாம் வேண்டும் எதுவும் நிச்சயமாக கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. இதை வேண்டுதலை குடும்பமாக அமர்ந்து செய்யும் போது மேலும் நல்ல பலனை பெற முடியும்.

இந்த நேரத்தில் மும்மூர்த்திகளும் திருமூர்த்திகளாக இணைந்து பிரபஞ்சமே அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அத்தகைய அற்புதமான நேரத்தில் நாம் அவர்களை நினைத்து நம்முடைய வேண்டுதலை வைக்கும் பொழுது அது எதுவாயினும் நிச்சயமாக நிறைவேறும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: வேண்டுதல் நிறைவேற மாசி மகம் வழிபாடு

ஆகையால் இன்றைய அற்புதமான இந்த பௌர்ணமி தினத்தில் வரக்கூடிய சோடஷ கலை நேரத்தை தவற விடாமல் இந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் கனவுகளையும் ஆசைகளையும் லட்சியங்களையும் நிறைவேற்றிக் கொள்ள இது போன்றதொரு அற்புதமான தருணம் கிடைக்காது பயன்படுத்தி பலன் அடையுங்கள்.

- Advertisement -