தீராத கடன் தொல்லை கழுத்தை நெறிக்கிறதா? தீர்த்து வைக்க எந்த கணபதியை வழிபட வேண்டும்?

ganapathy-kadan

வாழ்க்கையில் எவ்வளவுதான் கஷ்டத்தை நாம் எதிர்கொண்டாலும் அந்த கஷ்டத்தை தீர்ப்பதற்கு கடன் மட்டும் வாங்கி விடக்கூடாது. அதுவும் அதிக வட்டிக்கு கடன் வாங்கி விட்டால், கடன், வட்டி, வட்டிக்கு குட்டி போட்டு அந்த வட்டி குட்டி போட்டு நம் தலையை அடமானம் வைத்தால் கூட அந்த கடனை நம்மால் அடக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோம். தலையை அடமானம் வைத்தால் ஒரு ரூபாய் கூட கிடைக்காது. அப்படி ரூபாய் கிடைப்பதாக இருந்தால், இன்று பலபேர் தலையில்லாதவர்களாக தான் சுற்றிக் கொண்டிருப்போம். மாதம் மாதம் வருகின்ற வருமானத்தை வைத்து நம்மால் ஏன் குடும்பம் நடத்த முடியவில்லை? என்று யோசித்துப் பாருங்கள். இந்த காலத்தில் வந்திருக்கும் நவீன தொழில்நுட்பங்கள் தான் அதற்கு காரணம். கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட், லோன் இவைகளெல்லாம் நம் சம்பளத்தை வந்தவுடனேயே பிடுங்கிக்கொண்டு செல்கிறது. பிறகு நம் தேவைக்கு என்ன செய்வது கடன் தான் வாங்க வேண்டும். எப்படியோ கடனை வாங்கிவிட்டோம்? எப்படி திருப்பி தருவது? சிக்கனமாக செலவு செய்து கடனை அடைக்கலாம். இது நம் கையில் உள்ளது. ஆனால் கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரே, அவரது பாதங்களை சரணடைந்தால் தானே பிரச்சனைகள் தீரும். நம் கடனை திருப்பி அடைக்க ஒரு சுலபமான வழிபாட்டைத்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

kadan-loan

கடனை அடைக்க பலதரப்பட்ட பரிகாரங்கள் சொல்லி இருந்தாலும், அதில் உங்களுக்கு எதை முழுமையாக செய்ய முடியுமோ அந்த பரிகாரத்தை நீங்கள் தேர்ந்தெடுத்து நம்பிக்கையோடு முழுமையாக செய்ய வேண்டும். அப்போதுதான் அந்த பரிகாரம் பலன் அளிக்குமே தவிர, முதலில் ஒரு பரிகாரம் செய்வது. அந்தப் பரிகாரத்தை 48 நாட்கள் செய்ய சொல்லி இருப்பார்கள். 20 நாட்களே செய்து முடித்துவிட்டு, இந்த பரிகாரம் பலன் அளிக்கவில்லை என்று, உடனே அடுத்த பரிகாரத்திற்கு சென்றுவிடலாம். என்று பரிகாரத்தை மாற்றிக் கொண்டே இருக்காதீர்கள். முதலில் எடுத்த பரிகாரத்தை முழுமையாக நம்பிக்கையோடு செய்து முடியுங்கள். பலன் என்னவென்று தெரிந்து கொண்டு, பிறகு அடுத்த கட்டத்திற்குச் செல்லலாம்.

என்ன யோசனை? பரிகாரத்தை சொல்பவர்களே இதையும் கூறுகிறார்களே! என்று நினைக்கிறீர்களா! உண்மைதான். ஒரு பிரச்சினைக்கு பல பரிகாரங்கள் இருக்கும். அனைத்தையும் ஒருவர் பின்பற்ற முடியாதல்லவா? சரி. பொதுவாகவே விநாயகர் வழிபாடு என்பது ஒரு சுலபமான வழிபாடு. விநாயகரை நினைத்து நாம் எதை வேண்டிக் கொள்கின்றோமோ, அதை கட்டாயம் அவர் நிறைவேற்றி விடுவார் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். தீராத கடனை தீர்ப்பதற்கு எந்த கணபதியை, எப்படி வழிபாடு செய்தால் நல்ல பலன் கிடைக்கும் என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

thorana-ganapathy

தீராத கடன் பிரச்சனையை தீர்ப்பதற்கு தோரண கணபதியை வழிபட வேண்டும். இந்த தோரண கணபதி மயிலாடுதுறை, வாரணாசி, பிள்ளையார்பட்டி, சிருங்கேரி சாரதா பீடம், இந்த திருத்தலங்களில் காட்சி தருகின்றார். முடிந்தால் இந்த திருத்தலங்களுக்குச் சென்று இந்தப் பிள்ளையாரை வழிபடுவது நல்ல பலனைக் கொடுக்கும். தோரண கணபதியை நம் வீட்டிலேயும் முறையாக வழிபடுவதன் மூலம் நம்முடைய கடன் பிரச்சினை தீரும். இதற்கு நம் வீட்டில் தோரண கணபதியின் புகைப்படம் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். இனி இல்லாதவர்கள் புதியதாக ஒரு படத்தை வாங்கி வைத்துக். இரண்டு கைப்பிடி அளவு பச்சரிசி, அதே அளவு வெல்லம் இவை இரண்டையும் வாழை இலையில் வைத்து ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். இதை தோரணம் கணபதியின் திருவுருவப் படத்திற்கு முன்பாக நைவேத்தியமாகப் படைத்து ஒரு நல்லெண்ணெய் தீபத்தை ஏற்றி வைத்து,

- Advertisement -

தோரண கணபதியே என் கடனை நான் அடக்க வேண்டும்!
தோரண கணபதியே விரைவில் என் கடன் தீர வழி காட்டவேண்டும்!
தோரண கணபதியே என் வாழ்க்கையில் ஐஸ்வர்யத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் எந்த ஒரு குறைபாடும் இருக்கக்கூடாது!
தோரண கணபதியே என் குடும்பம் எல்லா வகை செல்வங்களையும் பெற்று பரிபூரண அருளை அடைய வேண்டும்!
ஓம் தோரண கணபதி நம! ஓம் தோரண கணபதி நம! ஓம் தோரண கணபதி நம!

thorana-ganapathy1

இப்படியாக மனமுருகி வேண்டிக் கொண்டு நீங்கள் பிசைந்து வைத்திருக்கும் பச்சரிசியையும், வெல்லத்தையும் உங்கள் கைகளால் கொழுக்கட்டை பிடிப்பது போல நன்றாக 3 உருண்டைகளை பிடித்து வாழையிலையில் வைத்து வேண்டிக் கொள்ள வேண்டும். பின்பு அந்த உருண்டைகளை எடுத்து காக்கை குருவி இவைகளுக்கு போட்டுவிடலாம். இந்தப் பரிகாரத்தை உங்களது கடன் பிரச்சனை தீரும் வரை செய்துகொண்டே இருக்கலாம். வாரம்தோறும் வரும் செவ்வாய் மற்றும் வெள்ளி இந்த இரண்டு தினங்களிலும் இந்த பரிகாரத்தை செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்தது. பூஜை செய்வதற்கு முன்பாகவே வழக்கம்போல் உங்களது பூஜை அறையையும் வீட்டையும் சுத்தம் செய்துகொள்ள வேண்டும். இந்த பரிகாரத்தை தொடங்கிய சிலவாரங்களிலேயே கடனைத் தீர்ப்பதற்கு உகந்த வழியை, அந்த தோரண கணபதி உங்களுக்கு நிச்சயமாக காட்டுவார் என்பது உண்மை.

இதையும் படிக்கலாமே
பணம், சொத்து, புகழ், கௌரவம் இவைகளை இழந்தவர்களா நீங்கள்? சுலபமாக திருப்பிப் பெற சூட்சம பரிகாரம்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Thorana ganapathi mantra in Tamil. Thorana ganapathi. Kadan prachanai theera pariharam in Tamil. Kadan thollai neenga slokam in Tamil.