பணம், சொத்து, புகழ், கௌரவம் இவைகளை இழந்தவர்களா நீங்கள்? சுலபமாக திருப்பிப் பெற சூட்சம பரிகாரம்.

Varahi-amman

ஒரு குடும்பம் ஆரம்பத்திலிருந்தே நடுத்தர குடும்பமாக இருந்துவிட்டால் அதில் எந்த பிரச்சினையும் இல்லை. அதுவே நன்றாக வாழ்ந்தவர்கள், ராஜபோக வாழ்க்கையை அனுபவித்தவர்கள், ஜமீன்தார்கள், கோடான கோடி கோடீஸ்வரர்கள், தங்களது சொத்துக்களையும், புகழையும், கௌரவத்தையும் இழுந்து இடைப்பட்ட காலத்தில் நடுநிலையான வாழ்க்கைக்கு தள்ளப்பட்டால், அவர்களின் நிலைமையை வார்த்தையால் சொல்லிவிட முடியாது. தலைமுறை தலைமுறையாக நன்றாக வாழ்ந்திருப்பார்கள் இடையில் வந்த ஏதோ ஒரு பாதிப்பினால், ஏதோ ஒரு கஷ்டத்தால் சொத்துக்களையும், கௌரவத்தையும் இழந்து அதலபாதாளத்தில் தள்ளப்பட்டிருகப்பார்கள். சிலபேர் தன்னுடைய சொந்த முயற்சியாலும், உழைப்பாலும் குறுகிய காலத்தில் அதி விரைவாக முன்னேற்றம் அடைந்து இருப்பார்கள். ஆனாலும் அந்த முன்னேற்றமானது கொஞ்ச காலத்திலேயே சரிவை உண்டாக்கி இருக்கும். நம் அனுபவத்தில் நிறைய பேரை இப்படி பார்த்திருப்போம். பரம்பரையாக ராஜ யோகத்தில் வாழ்ந்து சரிந்தவர்களாக இருந்தாலும் சரி, தன் சொந்த முயற்சியால் முன்னேற்றமடைந்து தன்னுடைய சொத்துக்களை இழந்திருந்தாலும் சரி, இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் நல்ல பலனை அடையலாம்.

varahi

பொதுவாக இழந்த பொருளை மீட்டுத் தர வழிபட வேண்டிய தெய்வம் வாராகி அம்மன். வாராஹி அம்மனை வழிபட, பலபேர் பயப்படுவார்கள். இதற்கு காரணம் இந்த தெய்வம் உக்கிரமான தெய்வம். கோவப்படகூடிய தெய்வம் என்பதால் தான். தப்பு செய்பவர்களுக்கு தண்டனை தரும் தெய்வமாக வாராஹி அம்மன் அவதாரத்தை குறிப்பிடுவார்கள். இந்த வாராஹி அம்மனை நல்ல மனதோடு உண்மையாக வழிபடுவதன் மூலம் நம்முடைய கஷ்டங்கள் தீரும் என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. வாரந்தோறும் சனிக்கிழமை அன்று காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் அல்லது இரவு 8 மணியிலிருந்து 9 மணிக்குள் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். உங்களுக்கு எந்த நேரம் உகந்ததோ அதை தேர்வு செய்து கொள்ளலாம். கருநீல துணியில், சிறிது வெண்கடுகை போட்டு சிறிய முடிச்சாக கட்டி, புதியதாக வாங்கப்பட்ட மண் அகல் விளக்கில் போட்டு, நல்லெண்ணெய் ஊற்றி அந்த முடிச்சை நன்றாக நனைத்து, அந்த முடிச்சையே தீபமாக ஏற்றி விட வேண்டும்.

கட்டாயம் வாராஹி அம்மன் இருக்கும் கோவிலுக்கு சென்றுதான் இந்த பரிகாரத்தை செய்து வரவேண்டும். 8 வாரம் சனிக்கிழமை தொடர்ந்து இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். நிச்சயம் நீங்கள் இழந்த சொத்தாக இருக்கட்டும், கௌரவமாக இருக்கட்டும், பணமாக இருக்கட்டும், எதுவாக இருந்தாலும் அது உங்களுக்கு திரும்பி வருவதற்கான வழியை அந்த வாராஹி அம்மனே காட்டுவாள். ஆனால் உங்களை விட்டு சென்ற சொத்து நியாயமான சொத்தாக இருக்க வேண்டும். இந்த தெய்வத்தை பரிகாரத்திற்காகத்தான் வழிபட வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. சாதாரணமாக வழிபடுபவர்களுக்கு மூன்று லோகத்திலும் எதிரிகள் இருக்க மாட்டார்கள் என்பதும் ஐதீகம்.

வாராஹி அம்மன் வழிபாட்டில் கவனமாக இருக்க வேண்டும். வாராஹி அம்மனை வழிபட தூய்மை மிக அவசியம். தேவ குணமும், மிருக பலமும் கொண்டவள். நீங்கள் செய்யும் தவறுக்கு அவள் நிச்சயம் தண்டித்து விடுவாள் என்பது உண்மை. குறிப்பாக வராகி அம்மனை வழிபடும் போது காமத்தில் உள்ளம் செல்லக்கூடாது.

இதையும் படிக்கலாமே
வீட்டில் உள்ளவர்களது கருத்துவேறுபாடுகள் நீங்கி ஒற்றுமையாக இருக்க இந்த தீபத்தை ஏற்றினால் போதும். குறிப்பாக மாமியார் மருமகள் ஒற்றுமைக்கு.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Ilantha selvam pera in Tamil. Ilantha selvam metka in Tamil. Varahi amman vazhipadu in Tamil. Varahi amman poojai in Tamil. Varahi amman vazhipadu murai.