தேங்காய் சேர்க்காமல் வீட்டில் உள்ள மூன்று பொருட்கள் வைத்து இந்த சுவையான சட்னி செய்திடலாம். ஒருமுறை செய்துவிட்டால் இனிமேல் அடிக்கடி இதனை செய்து விடுவீர்கள்

onion-urud-chutney
- Advertisement -

காலை உணவுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட அவசரத்திற்கு செய்யும் ஒரு சைடிஷ் என்றால் அது தேங்காய் சட்னி தான். வீட்டில் எதுவும் இல்லாமல் இருந்தாலும் தேங்காய் மட்டும் இருந்தாலே அனைவரும் ஒரு தேங்காய் சட்னியை அரைத்து விடுகின்றனர். ஆனால் ஒரு சில சமயங்களில் தேங்காய் தீர்ந்து போனதையும் கவனிக்காமல் இருந்து விடுவோம். இதுபோன்ற நேரங்களில் பார்ப்பதற்கு தேங்காய் சட்னி போன்று இருக்கும் இந்த வெங்காய சட்னியை ஒரு முறை செய்து பாருங்கள். இதன் சுவையும் காலை உணவுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும். ஒருமுறை செய்து கொடுத்து பாருங்கள். வீட்டில் உள்ளவர்கள் மறுபடியும் இந்த சட்னி வேண்டும் என்று கேட்க ஆரம்பித்து விடுவார்கள். வாரங்கள் இதனை எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

coconut-chutney0

தேவையான பொருட்கள்:
பெரிய வெங்காயம் – 2, பூண்டு – 3 பல், பச்சை மிளகாய் – 3, உப்பு – அரை ஸ்பூன், நல்லெண்ணை – 3 ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் இரண்டு வெங்காயத்தை தோலுரித்து நீளவாக்கில் அரிந்து கொள்ள வேண்டும். பின்னர் மூன்று பல் பூண்டை தோலுரித்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும்.

onion

என்னை நன்றாக காய்ந்ததும் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். பிறகு 3 பல் பூண்டு சேர்த்து இவை இரண்டும் கண்ணாடி பதத்தில் வதங்கும் அளவிற்கு வதக்கி விட வேண்டும். பின்னர் 3 பச்சை மிளகாய் சேர்த்து லேசாக வதக்கி விட்டு அடுப்பை அனைத்துவிட வேண்டும்.

- Advertisement -

பிறகு இவற்றை ஆறவைத்து, ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவேண்டும். பின்னர் ஒரு தாளிப்பு கரண்டியை அடுப்பின் மீது வைத்து, ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் சீரகம் மற்றும் ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

coconut

பிறகு இந்த தாளிப்பை செய்து வைத்துள்ள சட்னியில் சேர்த்து, அதனுடன் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். பிறகு இந்த சட்னியுடன் சுடச்சுட இட்லி அல்லது தோசை செய்து பரிமாறி கொடுத்து பாருங்கள். எப்போதும் சாப்பிடும் அளவை விட ஒரு இட்லி அல்லது தோசை அதிகமாகவே சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு இதன் சுவை அனைவருக்கும் மிகவும் விருப்பமாக இருக்கும்.

- Advertisement -