சீக்கிரம் வெள்ளையாக வேண்டும். ஒரே நாளில் ஹீரோயின் ஆகிவிட வேண்டும் என்ற ஆசையில் கடையில் விற்கும் கிரீம்களை வாங்கி உடனடியாக முகத்தில் போட்டுக் கொள்ளாதீங்க. ஒயிட்னிங் கிரீமில் எல்லாம் அதிகமான கெமிக்கல் கலந்திருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. எல்லா வகையான ஒயிட்டனிங் கிரீமும் நமக்கு நிச்சயமாக ஒரு சில நாட்களில் அலர்ஜியை பக்க விளைவுகளை கொடுத்து விடும். அதுவும் 2 நாட்களில், மூன்றே நாட்களில் சருமத்தை ப்ளீச்சிங் பவுடர் போட்டு கழுவியது போல வெள்ளையாக மாறச் செய்யும் கெமிக்கல் கலந்த கிரீமை தொடக்கூட தொடங்க. அது ஒரு பெரிய ஆபத்து. சரிங்க, அப்போ இயற்கையான பொருட்களை பயன்படுத்தி எப்படி வெள்ளையாவது. அதற்கும் ஒரு வழி இருக்கிறது. அதை பற்றிய அழகு குறிப்பு இதோ உங்களுக்காக.
சருமம் வெள்ளையாவதற்கு ஃபேஸ் பேக்:
இந்த ஃபேஸ் பேக்குக்கு நாம் பயன்படுத்த போகும் பொருள் உலுந்து, வெந்தயம், அரிசி, நாம் வயிற்றுக்கு சாப்பிடக்கூடிய எந்த ஒரு பொருளை பயம் இல்லாமல் நம்முடைய முகத்தில் போடலாம். எந்த பாதிப்புகளும் வராது. அந்த வரிசையில் உளுந்து உங்களுடைய சரும நிறத்தை சீக்கிரத்தில் மீட்டு தரும். உங்களுடைய சருமம் ஒரு சில மாதங்களுக்கு முன்பு நல்ல அழகாகத் தான் இருந்தது. இப்போதுதான் கருத்துப் போய் விட்டிங்க. முகத்தின் அடியில் இருக்கும் அந்த வெள்ளை நிற சருமத்தை சீக்கிரம் வெளியே கொண்டுவரும். அதே போல வெந்தயம் உங்களுடைய முகத்துக்கு பளபளப்பை கொடுக்கும். கரும்புள்ளிகளை நீக்கும். சூடு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு தரும்.
அரிசியை பற்றி சொல்லவே வேண்டாம். முகத்தை நன்றாக ஸ்கிரப் செய்து வெள்ளை நிறத்தை கொடுக்கும். இந்த 3 பொருட்களும் ஒன்றாக சேர்ந்து முகத்தை முழுமையான பொலிவு பெற செய்து விடும். உளுந்தம் பருப்பு 3 டேபிள்ஸ்பூன், வெந்தயம் 1/2 டேபிள்ஸ்பூன், அரிசி 1 டேபிள் ஸ்பூன், இந்த மூன்று பொருட்களையும் ஒன்றாக போட்டு ஒரு முறை கழுவி விடுங்கள்.
பிறகு நல்ல தண்ணீரை ஊற்றி 3 மணி நேரம் ஊற வைத்தால் கூட போதும். பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும். சுத்தமாக கழுவிய உங்களுடைய முகத்தில் இதை பேக் போடவும். கழுத்து பகுதியிலும் பேக் போட்டுக்கலாம். தேவைப்பட்டால் கைகளிலும் போட்டுக் கொள்ளலாம்.
சரியாக 20 நிமிடங்கள் கழித்து பேக்கை கழுவி விடுங்கள். பேக் காயவில்லை என்றாலும் பரவாயில்லை. லேசாக முகத்தை நினைத்துக் கொண்டு மசாஜ் செய்தபடி பேக்கை கழுவி விட்டு முகத்தை பாருங்கள். உங்களுக்கே முகத்தில் இருக்கும் வித்தியாசம் தெரியும்.
இதையும் படிக்கலாமே: கெத்தான அழகைத் தரும் கேஷியோநட்! எப்போதுமே டல்லா இருக்கும் உங்க முகத்தை டால் அடிக்க வைக்கலாம் வாங்க.
தொடர்ந்து இப்படி வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த பேக்கை பயன்படுத்தி வர கூடிய சீக்கிரம் அதாவது நான்கு வாரத்தில் அடடா இது நாமதானா! அப்படி ஒரு எண்ணும் தோன்றும் கண்ணாடியை பார்க்கும்போது. இதோடு அடிக்கிற வெயிலில் அப்படியே செல்லக்கூடாது. சன் ஸ்கிரீன் போட்டுக்கோங்க. அதேசமயம் உள்ளுக்கு சாப்பிடக்கூடிய காய்கறிகளை, நீர் சத்து உள்ள காய்கறிகள், பழ வகைகளாக சாப்பிடுங்கள் போதும். அழகான அழகு நிரந்தரமாக உங்களுக்கு கிடைக்கும்.