வாராஹி தேவியின் அருளை உடனடியாக பெறக்கூடிய அந்த 4 நபர்கள் யார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?

varahi

வாராஹி தேவி இயல்பாகவே உக்கிரமானவள் என்பதால், இந்த அம்மனை வணங்குவதற்கு அனைவருக்குமே மனதில் பயம் இருக்கும். வீட்டில் வாராகி திருவுருவப் படத்தை வைத்து வணங்குவதற்கு அஞ்சுவார்கள். ஆனால் நாம் எல்லோரும் நினைக்கும் அளவிற்கு வாராஹி தேவி கோப குணத்தை கொண்டவள் இல்லை. குழந்தை மனம் கொண்ட வாராஹி தேவியை தன்னலம் பாராமல், கெட்ட எண்ணங்களை மனதில் வைத்துக்கொள்ளாமல் வணங்கினால் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து உதவி செய்யும் தெய்வம் தான் இந்த வாராஹி அம்மன். வாராஹி அம்மனை தொடர்ந்து வழிபட்டு வந்தால் நமக்கு இருக்கும் எப்பேர்பட்ட பெரிய கஷ்டங்கள் கூட, சுலபமாக விரைவாக தீர்ந்துவிடும் என்பது உண்மை. ஆனால் நம்மில் பலர் வாராஹி அம்மனை வழிபடுவது ஆபத்து என்று நினைத்துக் கொண்டிருக்கின்றோம். நிச்சயமாக இல்லை. வாராஹி அம்மன் வேண்டிய வரத்தை, நம் கையில் கொடுக்கும் சக்தி வாய்ந்தவள் என்பதை மறந்துவிடாதீர்கள். நமக்கு காவல் தெய்வமாக நின்று, நம்மை கெட்ட சக்திகளிலிருந்து பாதுகாத்து அருள் பாவிப்பால் என்பதும் உண்மை. வராஹி அம்மனை எப்படி வழிபட்டால் தீராத கஷ்டங்கள் கூட, விரைவாக, சுலபமாக தீர்ந்துவிடும் என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

Varahi amman

பொதுவாகவே கிருத்திகை, பூரம், மூலம், ரேவதி இந்த 4 நட்சத்திரங்களை கொண்டவர்கள் வாராஹி அம்மனை மனதார வழிபட்டாலே போதும். அவர்களுக்கு உடனடியாக பலன் கிடைத்துவிடும். இந்த நட்சத்திரம் இல்லாதவர்கள், இந்த நட்சத்திரம் வரும் நாட்களில் வாராஹி அம்மனை வழிபடுவது சிறந்தது.

நமக்கு இருக்கும் தீராத கஷ்டமாக இருந்தாலும், தீராத நோயாக இருந்தாலும், தீராத மன கஷ்டம், பணக்கஷ்டம், எப்படிப்பட்ட கஷ்டமாக இருந்தாலும் வாராஹி அம்மனை நினைத்து, தலைவாழை இலை விரித்து, அதில் பச்சரிசியை கொட்டி பரப்பி, அதன் மேல் ஒரு தேங்காயை உடைத்து இரண்டுமுடிகளாக வைத்து, அதில் இலுப்ப எண்ணெய் ஊற்றி, சிவப்பு திரி போட்டு, தீபம் ஏற்றினால் போதும். இந்த பரிகாரத்தை உங்கள் வீட்டின் அருகில் வாராஹி அம்மன் கோவில் இருந்தால் அங்கு செய்யலாம். கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே சிறிய வாராகி அம்மன் திருவுருவப் படத்தை வைத்து அதன்முன் செய்து வரலாம். எப்படிப்பட்ட கஷ்டமாக இருந்தாலும் அந்த கஷ்டம் கூடிய விரைவில் நீங்குவதை நீங்கள் கண்கூடாக பார்க்க முடியும். இந்தப் பரிகாரத்தைச் செவ்வாய்க்கிழமை எமகண்ட வேளையில் செய்ய வேண்டும். தொடர்ந்து 5 வாரம் செய்து பாருங்கள். பலனை நிச்சயம் உங்களால் உணர முடியும்.

வாராஹி அம்மனுக்கு சிவப்பு மலர் மிகவும் விருப்பமானது அதிலும் சிவப்பு தாமரை மிகவும் பிடிக்கும். பஞ்சமி திதி அன்று வராகியை மனதார நினைத்து வழிபடுவது நல்ல பலனைத்தரும். வராகி அம்மனை மாதம்தோறும் வரும் பஞ்சமி திதி அன்று சிவப்பு மலர் சூட்டி, அவளுக்கு பிடித்த பிரசாதத்தை நைவேத்தியமாக செய்து வைத்து தொடர்ந்து வழிபட்டு வந்தால் நம்மை எந்த விதமான கெட்ட சக்தியும் அண்டாது. நம்முடைய வாக்கு வன்மையும், தைரியமும் அதிகரிக்கும்.

- Advertisement -

varahi

வராகி அம்மனுக்கு பூண்டு கலந்து தோல் நீக்கப்படாத உளுந்து வடை, நவதானிய அடை, மிளகு சேர்த்த வடை, வெண்ணை நீக்காத தயிர்சாதம், நவதானிய அடை தோசை இவைகள் அனைத்தும் மிகவும் பிடிக்கும். இதில் உங்களால் முடிந்த ஏதாவது ஒன்றை நைவேத்தியமாக படைப்பது மிகவும் சிறந்தது. வாராஹி அம்மன் வழிபாட்டில் ஒருபோதும் அடுத்தவர் கெட்டு போக வேண்டும் என்ற எண்ணத்தோடு வழிபடவே கூடாது என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். அனைவரின் நலனுக்காக மட்டுமே வரம் கொடுப்பவள் வராஹியம்மன். தவறான எண்ணத்தோடு வாராஹி அம்மனை வழிபடுவது தண்டனையை நாமே தேடிக் கொள்வதற்கு சமம்.

இதையும் படிக்கலாமே
வீட்டில் பூஜை செய்யும் போது பூஜை முழுமை பெற இதை கண்டிப்பாக செய்ய வேண்டும்..

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Varahi amman pooja at home. Varahi amman poojai in Tamil. Varahi amman vazhipadu in Tamil. Varahi vazhipadu at home.