இறைவனை அலங்காரம் செய்வதற்கு பின் உள்ள சூட்சுமம் தெரியுமா ?

sivan
- Advertisement -

எங்கும் எதிலும் உள்ள பரம்பொருளை சிலையாகவோ அல்லது புகைப்படமாகவோ வைத்து நமது வீடுகளிலும் கோவில்களிலும் அளகரிப்பதை நாம் வழக்கமாக கொண்டுள்ளோம். இன்று நேற்று அல்ல காலம் காலமாக இந்த வழக்கம் நமது கலாச்சாரத்தில் பின்னி பிணைந்த ஒன்றாக இருக்கிறது. ஆதி அந்தமற்ற இறைவனுக்கு எதற்காக அலங்காரம்? அதில் உள்ள சூட்சுமம் என்ன வாருங்கள் பார்ப்போம்.

Perumal

ஒரு கற் சிலையையோ அல்லது புகைப்படத்தையோ தெய்வம் என்று கூறி மக்களை தரிசிக்க சொன்னால் மக்களும் தரிசிப்பார்கள் ஆனால் மக்களின் மனமானது அதில் லயித்து போகுமா என்றால் சந்தேகம் தான்.

- Advertisement -

இறை பக்திக்கு மிக முக்கியமாக கருதப்படுவது எண்ணங்களை ஒருமுக படுத்துவதே, இறைவனை சிறப்பாக அலங்காரம் செய்வதன் மூலம் நம் கண்களானது அவனை தவிர வேறு எதையும் பார்க்க நினைக்காது. நம் மனமானது தன் எண்ணங்களை இறைவன் மீதே செலுத்தும் இதன் மூலம் நமது மனம் அமைதி கொண்டு இறைபக்தியில் மூழ்கும்.

amman

தங்க நகைகளையும், வைர வைடூரியங்களையும் வாசனை மிக்க மலர்களையும் கொண்டு இறைவனை அலங்கரிப்பதற்கான முக்கிய காரணம் இதுவே. இப்படி அலங்காரம் செய்வதன் மூலம் இறைவனின் உருவம் நம் மனதில் நன்றாக பதிந்துவிடும், நாம் கோவிலிற்கு சென்று மீண்டும் வீடு திரும்பிய சில மணி நேரம் வரை இறைவனின் அலங்காரம் நமது மனதில் நிலைத்திருக்கும். நமது சிந்தையானது அவனை பற்றியே யோசிக்கும்.

- Advertisement -

murugan

நமது முன்னோர்கள், மக்களை இறை பக்தியில் மூழ்க செய்ய எத்தனையோ வழிகளை கண்டறிந்தனர் அதில் ஒன்று தான் இந்த அலங்காரம். இறைவன் என்பவன் அழகுக்கெல்லாம் அப்பாற்பட்டவன். நாம் அலங்கரிப்பதால் இறைவன் புதிதாக அழகாக மாறப்போவதில்லை. அவனை அலங்கரிப்பதன் மூலம் நாம் ஒரு வித தியான நிலைக்கு செல்கிறோம் என்பதே உண்மை.

இதையும் படிக்கலாமே:
கைலாயத்தில் தோன்றிய சிவனின் உருவம் – படம் பிடித்த கூகிள் மேப்

ஆன்மிகம் சம்மந்தமான இது போன்ற மேலும் பல தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள தெய்வீகம் மொபைல் APP-ஐ டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்.

- Advertisement -