மீதியான பழைய சாதத்தில் இப்படி சுவையான ஒரு உணவை செய்து கொடுங்கள். யாருக்கும் தெரியாது இது நீங்கள் பழைய சாதத்தில் செய்ததென்று

adai
- Advertisement -

ஒவ்வொரு வீட்டிலும் தினந்தோறும் வடிக்கின்ற சாதம் எப்பொழுதும் சரியாக தீர்ந்து விடாது. அதில் ஒரு கைப்பிடி சாதகமாவது மீதியாகிவிடும். இந்த சாதத்தை தண்ணீர் ஊற்றி வைத்து மறுநாள் காலையில் சாப்பிடுவது பல வீடுகளில் வழக்கமாக இருக்கும். ஆனால் தினமும் இதனை செய்வது சற்று சலிப்பான விஷயமாகவும் இருக்கும். ஆனால் இப்பொழுது இருக்கின்ற விலைவாசி காலத்தில் 50 ரூபாய்க்கு மேல் கொடுத்து தான் ஒரு கிலோ அரிசி வாங்குகிறோம். எனவே சாதத்தை வீணாக கீழே கொட்டவும் மனம் இருக்காது. எனவே மீதியான பழைய சாதத்தில் இப்படி சுவையான ஒரு அடை தோசை செய்து கொடுங்கள். சுட சுட இதனை செய்து கொடுக்கும் பொழுது அனைவரும் தட்டாமல் சாப்பிடுவார்கள். மீதியான சாதமும் தீர்ந்துவிடும். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
பழைய சாதம் – ஒரு கப், வெங்காயம் – 2, பச்சை மிளகாய் – 4, கடலைமாவு – 2 ஸ்பூன், இஞ்சி சிறிய துண்டு – 1, கொத்தமல்லி – ஒரு கைப்பிடி, கறிவேப்பிலை – ஒரு கொத்து, சீரகம் – அரை ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், தேங்காய் – கால் மூடி, பெருங்காயத்தூள் – அரை ஸ்பூன், எண்ணெய் – 5 ஸ்பூன்.

செய்முறை:

முதலில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் அதேபோல் கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி வைக்க வேண்டும். பிறகு கால் மூடி தேங்காயை தேங்காய் துருவலை பயன்படுத்தி பொடியாகத் துருவி கொள்ள வேண்டும்.

- Advertisement -

பின்னர் ஒரு கப் சாதத்தை மிக்ஸி ஜாரில் சேர்த்து சற்று கரகரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதனை ஒரு கிண்ணத்தில் மாற்றி, அதனுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, கருவேப்பிலை இவை அனைத்தையும் சேர்த்து கலந்து விட வேண்டும்.

பின்னர் இதனுடன் ஒரு துண்டு இஞ்சியை துருவி சேர்க்க வேண்டும். பிறகு அரை ஸ்பூன் மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், இரண்டு ஸ்பூன் கடலை மாவு, தேங்காய் துருவல் மற்றும் உப்பு இவை அனைத்தையும் சேர்த்து ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். பிறகு இந்த கலவையை ஒரு 10 நிமிடம் அப்படியே ஊற வைக்க வேண்டும்.

பின்னர் ஒரு பால் கவரை எடுத்து அதில் லேசாக எண்ணெய் தடவிக் கொள்ள வேண்டும். பிறகு கலந்து வைத்துள்ள மாவிலிருந்து ஒரு உருண்டை எடுத்து, அதனை பால் கவரின் மீது வைத்து அடை போன்று தட்டிக்கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பில் ஒரு தோசைக்கல்லை வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, தட்டி வைத்த அடையை போட்டு வேகவைத்து எடுக்கவேண்டும். பிறகு இதனுடன் தேங்காய் சட்னி அல்லது கார சட்னி சேர்த்து சாப்பிட அவ்வளவு அருமையான சுவையில் இருக்கும்.

- Advertisement -