10 நிமிடத்தில் மொழுமொழுன்னு வெண்ணை போல தக்காளி சட்னி அரைப்பது எப்படி? அரைக்கும் போதே டேஸ்ட் பார்க்கிறேன் சொல்லி, காலி பண்ணிடுவாங்க. அத்தனை ருசி இதுக்கு.

thakkali-chutney
- Advertisement -

சும்மா ஒரு பேச்சுக்காக சொல்லலைங்க. இந்த சட்னியை நீங்க அரைச்சு பாருங்க. அரைக்கும் போது லேசாக விரலில் தொட்டு நாக்கில் ருசித்துப்பாருங்கள். சட்னி அரைத்து தாளித்து முடிப்பதற்குள், நிறைய முறை இந்த சட்னியை தொட்டு தொட்டு ருசித்து பார்க்க வேண்டும் என்று தோன்றும். இட்லி தோசைக்கு பரிமாறுவதற்கு முன்பு சுவைபார்பதிலேயே பாதி சட்னியை காலி பண்ணிடுவாங்க. அந்த அளவுக்கு ருசியான சிம்பிளான ஒரு தக்காளி சட்னி ரெசிபியை தான் இன்னைக்கு பாக்க போறோம்.

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்துக்கொள்ளுங்கள். அதில் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். எண்ணெய் காய்ந்ததும் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் – 6 பல், தோல் உரித்த பூண்டு பல் – 6, வர மிளகாய் – 2 அல்லது 3 காரத்திற்கு ஏற்ப, போட்டு வெங்காயம் லேசாக கண்ணாடி பதம் வரும் வரை வதங்கிய உடன், நல்ல பெரிய சைசில் இருக்கும் 2 – தக்காளி பழங்களை வெட்டி இதில் போட்டு, இரண்டு முறை வதக்கி விட்டு, சட்னிக்கு தேவையான அளவு உப்பு தூவி, அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு ஒரு மூடி போட்டு 5 லிருந்து 7 நிமிடங்கள் வேக வைத்தால் போதும்.

- Advertisement -

அதன் பின்பு இறுதியாக மூடியைத் திறந்து விட்டு ஒரு கரண்டியை வைத்து தக்காளி பழத்தை நன்றாக கலந்து விட்டு, 2 கொத்தமல்லி தழையை மட்டுமே போட்டு, அடுப்பை அணைத்து விடுங்கள். (வெறும் 2 கொத்தமல்லி இலைகளை மட்டும் போட்டால் போதும் சட்னியில் கொத்தமல்லி தழை போட்டதே தெரியக்கூடாது.) இந்த விழுது நன்றாக ஆரட்டும். அதன் பின்பு மிக்ஸி ஜாரில் போட்டு இந்த விழுதை சட்னி போல நைசாக அரைத்துக் கொள்ளுங்கள். அதுவே வெண்ணை போல அரைந்து விடும். ஏனென்றால் நன்றாக வெந்த தக்காளிப்பழம் அல்லவா. (அந்த மிளகாய் மட்டும் கொஞ்சம் அரைபட நேரம் எடுக்கும்.)

இப்போது மிக்ஸி ஜாரில் அரைக்கும்போதே இந்த சட்னியை தொட்டு ருசி பாருங்கள். ரொம்பவும் தக்காளி பழத்தில் புளிப்பு இருந்தால் ஒரு சிறிய துண்டு வெல்லம் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். இந்த சட்னி இப்போது அப்படியே இருக்கட்டும். சட்னியை ரொம்பவும் தண்ணியாக அரைக்கக்கூடாது. கொஞ்சம் திக்காக தான் அரைத்துக்கொள்ள வேண்டும்.

- Advertisement -

அடுப்பில் மீண்டும் ஒரு கடாயை வைத்து – 3 டேபிள்ஸ்பூன் அளவு நல்லெண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம், தாளித்து மிக்ஸி ஜாரில் வைத்திருக்கும் சட்னியை எடுத்து, கடாயில் கொட்டி இரண்டு முறை அப்படியே கிளறிவிட்டு, சட்னி லேசாக சூடு வரும். அப்போது அடுப்பை அணைத்து விடுங்கள். அவ்வளவு தான். சூப்பரான வெண்ணை போல தக்காளி சட்னி தயார்.

சுடச்சுட இட்லி தோசைக்கு தொட்டு சாப்பிட்டு பாருங்க. அத்தனை அருமையாக இருக்கும். இரண்டு தக்காளிக்கு, மேலே சொல்லப்பட்ட அளவுகள் சரியாக இருக்கும். உங்களுக்கு தேவைப்பட்டால் அதிகமாக தக்காளி சேர்க்கும் போது எல்லா பொருட்களையும் இன்னும் கொஞ்சம் கூடுதலாக வைத்துக் கொள்ளுங்கள். நிச்சயம் அதே சுவை தான் கிடைக்கும். உங்களுக்கு இந்த ரெசிபி பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -