தேங்காய் சட்னியுடன் இந்த பொருட்களை சேர்த்தால் போதும். இதன் சுவை இன்னும் அதிகமாகிவிடும். வாருங்கள் இரண்டு வகை சட்னியை தெரிந்து கொள்வோம்

chutni
- Advertisement -

அதிகப்படியான நாட்களில் இட்லி தோசையுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட செய்யப்படுவது தேங்காய் சட்னி தான். இந்த தேங்காய் சட்னியை எப்பொழுதும் ஒரே விதமாக செய்யாமல், அதன் சுவையை அதிகப்படுத்துவதற்காக அதனுடன் வேறு சில பொருட்களும் சேர்த்து அரைக்கும் பொழுது மிகவும் சுவையாகவும், உடலிற்க்கு ஆரோக்கியமாகவும் இருக்கும். ஒரு சிலர் தேங்காயுடன் பொட்டுக்கடலை சேர்த்து செய்வார்கள். ஒரு சிலர் வெறும் தேங்காய், மிளகாய் மட்டும் சேர்த்து சட்னி செய்வார்கள். அவ்வாறு பல விதங்களில் செய்யக்கூடிய தேங்காய் சட்னியுடன் எந்த பொருட்களை சேர்த்தால் மிகவும் சுவையாக இருக்கும், அதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

சட்னி: 1
முதலில் அரை மூடி தேங்காயைத் கீறி எடுத்து, அவற்றை பொடியாக நறுக்கி, மிக்சி ஜாரில் சேர்க்க வேண்டும். பின்னர் இதனுடன் 50 கிராம் பொட்டுக்கடலை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதன்பின் இவற்றுடன் சிறிய துண்டு புளியை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு இதனுடன் அரை ஸ்பூன் உப்பு நான்கு வரமிளகாய் மற்றும் ஒரு கொத்து புதினா தழை சேர்க்க வேண்டும். பின்னர் இவற்றுடன் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ள வேண்டும். அதன்பின் ஒரு தாளிக்கும் கரண்டியை அடுப்பின் மீது வைத்து, ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்க்க வேண்டும்.

சட்னி: 2
முதலில் அரை மூடி தேங்காயை பொடியாக நறுக்கி மிக்சி ஜாரில் சேர்க்க வேண்டும். அதன்பின் இவற்றுடன் 50 கிராம் பொட்டுக்கடலை சேர்க்க வேண்டும். பின்னர் அரை ஸ்பூன் உப்பு சேர்க்க வேண்டும். அதன் பிறகு 4 பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு இவற்றுடன் ஒரு சிறிய துண்டு இஞ்சி, ஒரு பல் பூண்டு சேர்த்து, அதனுடன் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு தாளிப்பு கரண்டியை அடுப்பின் மீது வைத்து, ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

பிறகு இந்த தாளிப்பை சட்னியுடன் சேர்த்து கலந்து விட வேண்டும். இவ்வாறு புதினா சேர்த்த சட்னியாக இருந்தாலும், இஞ்சி, பூண்டு சேர்த்த சட்னியாக இருந்தாலும் வெவ்வேறு விதமான சுவையில் மிகவும் அற்புதமாக இருக்கும். இந்த சட்னியுடன் சுடச்சுட இட்லி மற்றும் தோசை சேர்த்து சாப்பிட்டுப் பாருங்கள். இதன் சுவைக்கு சாப்பிட சாப்பிட இறங்கிக்கொண்டே இருக்கும். போதும் என்ற மனமே வராது, அவ்வளவு அற்புதமாக இருக்கும்.

- Advertisement -