வெறும் 2 நிமிடத்தில் காரசாரமான சூப்பர் கார சட்னி தயார். இட்லி தோசை ஆப்பத்திற்கு தொட்டுக்கொள்ள இனி சைட் டிஷ் பிரச்சனையே கிடையாது.

thakkali-chutney
- Advertisement -

காரசாரமான ஒரு சட்னி ரெசிபி இல்லைங்க, இரண்டு வித்தியாசமான சுவையில் இரண்டு சட்னி ரெசிபிகளை தெரிந்து கொள்ளப் போகின்றோம். ஒவ்வொரு நாள், ஒவ்வொரு சட்னியை செய்து பாருங்கள். ஒரு சட்னி செய்வதற்கு இரண்டிலிருந்து ஐந்து நிமிடங்களே அதிகம். மிக மிக சுலபமாக காரசாரமான சூப்பரான காரச் சட்னியை இப்படி அரைத்தால் பத்து இட்லி, பத்து தோசை சாப்பிட்டாலும் பத்தவே பத்தாது. ‌இட்லி தோசை சப்பாத்தி ஆப்பம் பணியாரம் இவைகளுக்கு தொட்டுக்கொள்ள இது செம சைடிஷ் ஆக இருக்கும்.

சட்னி ரெசிபி 1:
முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நறுக்கிய பெரிய வெங்காயம் – 2,  நறுக்கிய தக்காளி பழம் – 2, வரமிளகாய் – 4, கருவேப்பிலை – 1 கொத்து, பூண்டு – 8 பல், தேவையான அளவு – உப்பு, சர்க்கரை – 1/2 ஸ்பூன், நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் அளவு ஊற்றி இந்த சட்னியை மைய அரைத்து அப்படியே ஒரு கிண்ணத்தில் மாற்றி பரிமாறினால் போதும். சூப்பரான சட்னி தயாராகி இருக்கும்.

- Advertisement -

இதை தாளிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்களுக்கு தேவைப்பட்டால் நல்லெண்ணெயில் கடுகு, உளுந்து, கருவேப்பிலை, பெருங்காயம், தாளித்து கொட்டிக் கொள்ளலாம். ஆனால் இந்த சட்னியை அப்படியே சாப்பிட்டாலும் அவ்வளவு சுவையாக தான் இருக்கும். ட்ரை பண்ணி பாருங்க.

சட்னி ரெசிபி 2:
இன்னொரு சட்னி ரெசிபியையும் பார்த்துவிடலாம். ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். நறுக்கிய வெங்காயம் – 2, சிறிய நெல்லிக்காய் அளவு – புளி, மிளகாய் தூள் – 2 ஸ்பூன், வெல்லம் – 2 ஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து, உப்பு தேவையான அளவு, 1/2 கப் – தண்ணீர் ஊற்றி இதை நன்றாக விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

அதன்பின்பு அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு – 1/2 ஸ்பூன், உளுந்து – 1/2 ஸ்பூன், பெருங்காயம் – 1/4 ஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து, போட்டு மிக்ஸி ஜாரில் அரைத்த சட்னியை இந்த தாளிப்பில் ஊற்றி அடிப்பை மீடியம் ஃபிளேமில் வைத்து இரண்டு நிமிடங்கள் சட்னியை கைவிடாமல் வதக்கி இறக்கினால் சூப்பரான காரசாரமான இன்னொரு கார சட்னி தயார்.

இந்த சட்னியில் தக்காளி சேர்க்கவில்லை. இருந்தாலும் வெறும் வெங்காயம் சேர்த்த இந்த சிகப்பு சட்னி மிக மிக சுவையாக இருக்கும். இது ஒரு வித்தியாசமான சுவையில் இருக்கும். மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

பின்குறிப்பு: இரண்டு சட்னியிலும் சர்க்கரை வெல்லம் சேர்த்திருக்கிறோம் அல்லவா. அதை மிஸ் பண்ணாம சேர்த்து அறைங்க. அப்போது தான் டேஸ்டில் பேலன்ஸ் ஆகி நமக்கு நாவிற்கு நல்ல சுவையைக் கொடுக்கும். இனிப்பு புளிப்பு காரம் சேர்ந்த சுவை இந்த சட்னிக்கு ஒரு ஹைலைட்.

- Advertisement -