5 நிமிடத்தில் காரசாரமான மிளகாய் சட்னி ஒருமுறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க. 10 இட்லி சாப்பிட்டாலும் நிச்சயம் பத்தாது.

milagai-thuvaiyal
- Advertisement -

வரமிளகாய் வைத்து விதவிதமாக நிறைய பேர், காரச் சட்னி செய்வார்கள். எல்லோருக்கும் பிடித்த காரசாரமான இந்த கார சட்னியை மிக மிக சுவையாக அரைப்பது எப்படி என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த கார சட்னி அரைத்து விட்டு 10 இட்லி சாப்பிட்டாலும் அது உள்ளே இறங்குவது தெரியாது. அந்த அளவுக்கு ருசியாக இருக்கும். கஷ்டப்படாமல் சுலபமாக சுவையாக சூப்பர் கார சட்னி ரெசிபி உங்களுக்காக.

முதலில் 10 லிருந்து 15 மிளகாய்களை காம்பை நீக்கிவிட்டு தண்ணீரில் போட்டு நன்றாக ஊற வைத்துக் கொள்ளுங்கள். 15 நிமிடம் போல மிளகாய்கள் தண்ணீரில் ஊறினால் போதும். அதன் பின்பு தண்ணீரை வடித்து மிளகாய்களை மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ளுங்கள். இதோடு சட்னிக்கு தேவையான அளவு உப்பு போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி மிளகாய்களை நன்றாக மைய அரைத்து கொள்ள வேண்டும். விதைகள் அனைத்தும் அறைந்து விட வேண்டும்.

- Advertisement -

அரைத்த மிளகாய் விழுதுடன் தோல் உரித்த 10 – சின்ன வெங்காயத்தைப் போட்டு மீண்டும் மிக்ஸி ஜாரில் நன்றாக மொழு மொழுவென அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது நமக்கு மிளகாய் வெங்காயம் சேர்த்து அரைத்த சட்னி கிடைத்திருக்கும். இந்த சட்னியை வழித்து ஒரு சிறிய கிண்ணத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். (சின்ன வெங்காயம் இல்லை என்றால் மீடியம் சைஸில் இருக்கும் ஒரு பெரிய வெங்காயத்தையும் கொஞ்சம் சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்துக் கொள்ளலாம்.)

அடுப்பில் ஒரு தாளிப்பு கரண்டியை வைத்து 1 குழிக்கரண்டி அளவு நல்லெண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் கடுகு – 1 ஸ்பூன், உளுத்தம்பருப்பு – 1 ஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து போட்டு தாளித்து சுட சுட இருக்கும் இந்த தாளிப்பு எண்ணெய்யை அப்படியே சட்னியில் ஊற்றி சட்னியை நன்றாக கலக்க வேண்டும். (கட்டாயம் நல்லெண்ணெயில் தான் இந்த சட்னி தாளிக்க வேண்டும்.)

- Advertisement -

இந்த சட்னியில் நாம் எல்லாமே பச்சையாக சேர்த்து தான் அரைத்து இருக்கின்றோம். ஆகவே கட்டாயம் சுடச்சுட எண்ணெயை ஊற்றி, சட்னியை நன்றாக எல்லா இடங்களிலும் படும்படி கலந்து விட்டால் அந்த பச்சை வாடை நீங்கி சட்னியில் நல்ல ருசி கிடைக்கும். மத்த சட்னியை போல இந்தச் சட்னியை நிறைய தொட்டு எல்லாம் சாப்பிட கூடாது. இந்த சட்னியை அரைக்கும்போது நமக்குக் கிடைக்கும் அளவும் மிகக் குறைந்த அளவுதான் இருக்கும்.

இட்லிகோ மொரு மொரு தோசைக்கோ கொஞ்சமாக ஊறுகாய் போல இந்த சட்னியை தொட்டு சாப்பிட்டாலே போதும். தேவைப்பட்டால் இதனுடன் தேங்காய் சட்னி வைத்து பரிமாறினால் இதன் சுவை இன்னும் கூடுதலாக இருக்கும். உங்களுக்கு காரச்சட்னி ரொம்ப ரொம்ப பிடிக்குமா. ஒருமுறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க. எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.

- Advertisement -