‘மிளகாய் கிள்ளி போட்ட சாம்பார்’ இப்படி ஒரு முறை வைத்துப் பாருங்கள்! அடிக்கடி செய்ய ஆரம்பித்து விடுவீர்கள்.

killi-sambar2
- Advertisement -

சாம்பார் வகைகளில் எத்தனை வகைகள் இருந்தாலும் இந்த மிளகாய் கிள்ளி போட்ட சாம்பார் வகை தனியான சுவையைக் கொண்டது. சட்டென எளிமையான முறையில் செய்து விடக்கூடிய இந்த சாம்பாரை பிடிக்காதவர்கள் என்று யாரும் இருக்க முடியாது என்றே சொல்லலாம். மிளகாய்களை கிள்ளிப் போட்டு தாளித்து சாம்பார் வைப்பதால் இதற்கு ‘மிளகாய் கிள்ளி போட்ட சாம்பார்’ என்கிற பெயர் வந்தது. இதை எப்படி முறையாக செய்வது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கின்றோம்.

killi-sambar

மிளகாய் கிள்ளி போட்ட சாம்பார் செய்ய தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு – 200 கிராம், வெங்காயம் – 3, தக்காளி – 3, பூண்டு – 5 பல், புளி – எலுமிச்சை அளவு, வர மிளகாய் – 6, பச்சை மிளகாய் – 3, மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன், மிளகாய்த் தூள் – 1/2 டீஸ்பூன், பெருங்காயத்தூள், உப்பு மற்றும் எண்ணெய் – தேவையான அளவிற்கு.

- Advertisement -

மிளகாய் கிள்ளி போட்ட சாம்பார் செய்முறை விளக்கம்:
முதலில் 200 கிராம் துவரம் பருப்பை ஊற வைத்துக் கொள்ள வேண்டும். புளியையும் தனியே ஊற வைத்து கொள்ளுங்கள். ஒரு குக்கரில் துவரம் பருப்பை போட்டு, அதனுடன் பச்சை மிளகாய், தக்காளி – 2, பூண்டு பற்கள், பெருங்காயத்தூள் சிறிதளவு, தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து நான்கு விசில் வரை விட்டு வேக வைத்துக் கொள்ளுங்கள்.

killi-sambar1

பின்னர் ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் சேர்த்து தாளித்தம் செய்யவும். பின்னர் வர மிளகாய்களை கிள்ளிப் போட்டு அதனுடன் நீளவாக்கில் நறுக்கி வைத்த வெங்காயம் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின்னர் கறிவேப்பிலை மற்றும் மீதமுள்ள ஒரே ஒரு தக்காளி சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள். அதன் பின் மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கி மசித்து வைத்துள்ள துவரம் பருப்பு கலவையை இவற்றுடன் சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

- Advertisement -

சிறிது நேரம் மூடி போட்டு மூடி வைத்து விடுங்கள். சாம்பார் நன்கு கொதித்து வந்ததும் ஊற வைத்த புளியை சாறெடுத்து சாம்பாரில் சேர்க்க வேண்டும். மீண்டும் கொஞ்ச நேரம் கொதிக்க விட்டு சாம்பார் கெட்டியாகும் பொழுது நறுக்கிய மல்லித்தழை சேர்த்து இறக்கி வைத்து விட வேண்டும்.

killi-sambar3

இந்த சாம்பாரை சுலபமான முறையில் எந்த காய்கறியும் இல்லாமல் வெங்காயம், தக்காளி, மிளகாயை கொண்டே அற்புதமான சுவையுடன் விரைவாகச் செய்து விடலாம். நீங்கள் காய்கறி சேர்த்து செய்யும் சாம்பாரை விட எதுவுமே போடா விட்டாலும் இந்த சாம்பார் அலாதியான சுவையுடன் இருக்கும். இவற்றுடன் காரசாரமான கிழங்கு வகைகளைப் பொரித்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். வெண்டைக்காய் ஃப்ரை, கத்திரிக்காய் ஃப்ரை கூட சூப்பரான காம்பினேஷனாக இருக்கும். நீங்களும் ஒரு முறை உங்கள் வீட்டில் இப்படி செய்து பார்த்து உங்கள் குடும்பத்தில் இருக்கும் அனைவரையும் அசத்தி விடுங்கள்.

இதையும் படிக்கலாமே
உங்க வீட்ல இதுமாதிரி ஒருவாட்டி மாவு பிசைந்து, சப்பாத்தி சுட்டு பாருங்க! வட மாநிலத்தவர்கள் செய்யும் சப்பாத்தி ரெசிபி இது!

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -