உங்களுடைய வாழ்வில் எது தேவையானது? எது தேவை இல்லாதது? என்பதை எப்படி அறிந்து கொள்வது தெரியுமா? இத படிங்க தெரிஞ்சுக்கிடுங்க!

temple-buddhar
- Advertisement -

நம் வாழ்வில் நமக்கு எது தேவையானது? எது தேவையில்லாதது? என்ற பகுத்துப் பார்க்கும் அறிவு இல்லாமல் போவதால் மட்டுமே துன்பங்களை இன்றும் தேவையில்லாமல் சுமந்து கொண்டு நடந்து கொண்டிருக்கிறோம். ஆறறிவுள்ள மனிதன் இதை பகுத்துப் பார்க்கவே படைக்கப்பட்டிருக்கிறான். பகுத்தறிவு இல்லாவிட்டால் மனிதன் என்பதற்கு அடையாளமே இல்லாமல் போய்விடும். உங்கள் வாழ்வில் எது முக்கியமானது? எது முக்கியம் இல்லாதது? என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள இந்த கதை உங்களுக்கு நிச்சயம் உபயோகமாக இருக்கும் படிச்சு பாருங்க பயனடையுங்க.

ஒரு ஊரில் கோலாகலமாக திருவிழா நடந்து கொண்டிருக்கிறது. திருவிழாவிற்கு செல்ல அவ்வூர் மக்கள் அனைவரும் தத்தம் வீடுகளில் தயாராகிக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் திடீரென மழை பெய்ய துவங்கி விட்டது. மழை சற்று நேரத்தில் அதிகரிக்கவே, சாலை எங்கும் ஆங்காங்கே வெள்ளப் பெருக்கும் ஏற்பட துவங்கியது. இதில் அழகிய இளம் பெண் ஒருவர் சாலையை கடக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறாள்.

- Advertisement -

அச்சாலையின் அருகே ஒரு குடிசை வீடு ஒன்று இருந்தது. அதற்கு கீழ் மழைக்காக இரண்டு புத்த துறவிகள் ஒதுங்கி இருந்தனர். சாலையை கடக்க முடியாமல் தவிக்கும் அப்பெண்ணை பார்த்த புத்த துறவிகளில் ஒருவர், பெண்ணே! உனக்கு ஏதேனும் உதவி தேவையா? என்ன ஆயிற்று? என்று கேட்டார். அதற்கு அப்பெண் நான் திருவிழாவுக்கு சென்று கொண்டிருக்கிறேன், என் அழகிய பட்டு உடையானது சகதி ஆகிவிடுமோ என்று பயமாக இருக்கிறது. எப்படி இந்த சாலையை கடக்கப் போகிறேன்? என்று தெரியவில்லை என புலம்பிக் கொண்டிருந்தாள்.

சரி, என் தோள்களின் மீது ஏறிக் கொள், நீ எங்கு சேர வேண்டுமோ, அங்கே உன்னை பத்திரமாக சேரும், சகதியும் இல்லாமல் சேர்த்து விடுகிறேன் என்று கூறினார் அந்த துறவி. அதே போல அவள் சேர வேண்டிய இடத்திற்கு பத்திரமாக தூக்கிக் கொண்டு போய் சேர்த்து விட்டார் துறவி. பிறகு நீண்ட நேரம் பயணத்திற்கு பிறகு மற்றொரு துறவி, உதவி செய்த துறவியிடம் கோபமாக ஏதோ முணுமுணுத்துக் கொண்டு வந்தார்.

- Advertisement -

ஏன், என் மீது கோபமாக இருக்கிறீர்கள்? என்று இன்னொரு துறவி கேட்க, இந்த துறவி நீங்கள் ஒரு துறவி என்பதை மறந்து விட்டு, எப்படி அந்த பெண்ணை தொட்டு தூக்குவீர்கள்? இது உங்களுக்கு பாவமாக தெரியவில்லையா? என்று கேட்டார். நான் உதவிக்காக தூக்கிய அந்த பெண்ணை எப்பொழுதோ பத்திரமாக இறக்கி வந்து விட்டேன். ஆனால் நீரோ இந்த விஷயத்தை மனதில் இருந்து இறக்காமல் இன்னும் சுமந்து கொண்டிருக்கிறீர்கள் என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.

உதவி செய்த துறவிக்கு அது ஒரு உதவியாக மட்டுமே தெரிந்தது. ஆனால் இவருக்கு தேவையில்லாத எண்ணங்கள் மனதில் தோன்றியதால், இவ்வளவு நேரமாகியும் அது மனதை உருத்தி கொண்டிருந்தது. எது தேவை? எது தேவையில்லை? என்பதை பகுத்து பார்க்க வேண்டியது நம் கையில் தான் உள்ளது. மற்றவர்கள் ஏற்படுத்திய காயங்களை, மன கசப்புகளை சுமந்து கொண்டு திரிவதும், அதை அங்கேயே இறக்கிவிட்டு நம் மகிழ்ச்சியை நோக்கி பயணிப்பதும், நம் கையில் தான் இருக்கிறது. நமக்கு எது தேவை? என்பதை நாமே பிரித்துப் பார்க்க வேண்டும். மற்றவர்கள் வந்து இதில் உபதேசம் கூற ஒன்றும் இல்லை.

- Advertisement -