அமாவாசை 2019 தேதிகள்

Aadi Amavasai
- Advertisement -

நிலவின் முதல் கலையே அமாவாசை என்றழைக்கப்படுகிறது. வானியல்படி சூரியனும் நிலவும் ஒரே நேர்கோட்டில் வரும் நாளையே நாம் அமாவாசை என்றகிறோம். இந்நாளானது மிகவும் விஷேசமான நாளாக கருதப்படுகிறது. இந்நாளில் பலர் பூஜைகள் செய்வதும் வழக்கம். அந்த வகையில் 2019 ஆம் ஆண்டின் அமாவாசை தினங்கள் இங்கு துல்லியமாக கணக்கிட்டு மாதம் வாரியாக கூறப்பட்டுளளது.

Amavasai 2019 date and time

Amavasai Dates 2019

DateDayStarting TimeEnding Time
05 January 2019SaturdayJan 04 - 12:32 amJan 05 - 11:56 pm
04 February 2019MondayFeb 03 - 01:03 amFeb 04 - 09:25 pm
06 March 2019WednesdayMar 05 - 12:14 amMar 06 - 10:48 pm
05 April 2019FridayApr 04 - 12:13 amApr 05 - 11:45 pm
04 May 2019SaturdayMay 03 - 12:21 amMay 04 - 12:51 pm
03 June 2019MondayJun 02 - 12:51 amJun 03 - 09:47 pm
02 July 2019TuesdayJuly 01 - 11:19 pmJuly 02 - 12:41 pm
01 August 2019ThursdayJuly 31 - 01:16 amAug 01 - 09:34 pm
30 August 2019FridayAug 29 - 12:51 amAug 30 - 11:03 pm
28 September 2019Saturday
(Mahalaya Amavasai)
Sep 27 - 11:47 amAug 28 - 09:56 pm
28 October 2019MondayOct 27 - 01:41 amOct 28 - 09:52 pm
26 November 2019TuesdayNov 25 - 12:04 amNov 26 - 11:45 pm
26 December 2019ThursdayDec 25 - 02:19 amDec 26 - 10:39 pm

Sashti 2019  Ashtami 2019  Navami 2019

- Advertisement -
Amavasya-Poornima

தமிழ் முன்னோர்களின் வரையறைப்படி மாதாமாதம் அமாவாசை நிகழ்வு ஏற்படும். இதனை நம் முன்னோர்கள் முறைப்படி வகைப்படுத்தியுள்ளனர். அமாவாசை நாட்களில் நமக்கு ஏற்படும் பலன் மற்றும் அமாவாசை தினங்களில் நாம் செய்ய வேண்டிய அனைத்து விஷயங்களையும் இங்கு காண்போம் வாருங்கள்.

பொதுவாக மாதம் ஒருமுறை அமாவாசை மற்றும் பவுர்ணமி வரும். அதில் இரண்டிற்குமே தனித்தனியே பொருள் உண்டு. அமாவசை தினங்களில் நிலவின் வெளிச்சம் முற்றிலும் மறைந்து இருள் சூழ்ந்து இருக்கும். அந்த நாளையே அமாவாசை நாளாக நாம் கருதுகிறோம்.

- Advertisement -

வருடம் முழுவதும் வரும் அமாவாசை தினங்களில் தை அமாவாசை மற்றும் ஆடி அமாவாசை போன்ற இரண்டு அமாவாசை தினங்களும் மிகவும் சக்தி வாய்ந்த அமாவாசை தினங்களாக கருதப்படுகிறது. ஏனெனில், இந்த இரண்டு மாதங்களில் வரும் அமாவாசை தினங்களில் நமது பித்துருக்கள் என்று அழைக்கப்படும் மூதாதையர்கள் நமது வழிபாடுகளை ஏற்க மண்ணுலகிற்கு வருவார்கள் என்ற நம்பிக்கை உண்டு.

Amavasai viratham

இதன் காரணமாகவே நமது தமிழகத்தில் உள்ள மக்கள் தங்களது முன்னோர்களின் நினைவிற்காக அவர்களுக்கு வழிபாடு செய்யும் நோக்கில் புனித நீராடுவது வழக்கம்.

- Advertisement -

புனித நீராடும் காரணம் :

அமாவாசை தினங்களில் புனித நீராடும் அனைவரும் தங்களது பித்ருக்கள் நியாபகமாக அவர்களுக்கு வழிபாடு செய்யும் வகையில் தர்ப்பணம் கொடுக்கின்றனர்.அவ்வாறு தர்ப்பணம் கொடுத்தால் பூர்வ ஜென்ம பாவங்கள் நீங்கி சுபிட்சம் அடைவார்கள் என்று அதனை கடைபிடிக்கின்றனர்.

தமிழ் நாட்டின் பல இடங்களில் புனித நீராடும் தளங்கள் இருக்கின்றன. இதில் முக்கியமான சில இடங்கள் கன்னியாகுமரி, குற்றாலம், ராமேஸ்வரம் மற்றும் பாபநாசம் போன்ற தளங்கள் மிக முக்கியமானவை.

mahalaya-ammavasai

அமாவாசை வழிபாடுகளின் பயன்கள் :

அமாவாசை தினங்களில் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்தால் அவர்களின் மனம் சுபிட்சம் அடையும் என்றொரு நம்பிக்கை உள்ளது. எனவே பல வருடங்களாக தங்களது மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்யாதவர்கள் கூட இந்த தை மற்றும் ஆடி அமாவாசைகளில் தர்ப்பணம் செய்தால் ஆண்டு முழுவதும் தர்ப்பணம் செய்யும் பலன் உள்ளது என்று முழுவதுமாக நம்பப்படுகிறது.

இந்த நாட்களில் நாம் சாப்பாடு போன்ற பொருட்களை வைத்து படைத்தால் தான் நம் மீது நம் மூதாதையரின் பார்வை படும் என்ற அர்த்தமில்லை. அவர்களை மனதில் நினைத்து கொண்டு ஆற்றில் எள்ளு மற்றும் தண்ணீர் தெளித்து வழிபட்டாலே நமக்கு நம் முன்னோர்களின் அருள் கிட்டும்.

Amavasai Tharpanam

ஆடி மாத அமாவாசை பலன்கள் :

ஆடி மாதம் என்பது இந்திரலோகத்தில் தேவர்கள் ஓய்வெடுக்கும் காலமாகும் . அதன் காரணமாக இந்த மாதத்தில் நமது முன்னோர்கள் நமது பாவங்களை நிவர்த்தி செய்ய பூமிக்கு வரும் பழக்கத்தினை வைத்துள்ளனர் என்று நம்பப்படுகிறது. எனவே ஆடி மாதம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிக்கப்படுகிறது.

தை மாத அமாவாசை பலன்கள் :

தை மாதம் அமாவாசை நாட்கள் பூலோகத்திற்கு வந்த முன்னோர்கள் இந்திரலோகம் செல்லும் காலமாகும். எனவே பூமிக்கு வந்த முன்னோர்களை சிறந்த முறையில் வழியனுப்பவே தை மாத அமாவாசை நாட்களில் மக்கள் புனித தளங்களில் நீராடும் வழக்கத்தினை கடைபிடித்து வருகின்றனர்.

புரட்டாசி மாத அமாவாசை பலன்கள் :

பொதுவாக புரட்டாசி மாதங்களில் தங்களது முன்னோர்களை நினைவில் வைத்து அந்த வயதுவுடைய மற்றும் வயது சாரா நபர்களுக்கு அன்னதானம் வழங்குவதன் மூலம் அவர்களுக்கு தர்ப்பணம் செய்த புண்ணியம் புரட்டாசி அமாவாசை தினங்களை கிடைக்கும்.
மேலும் 2019 மாத காலண்டர் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

English Overview:
Here we have Amavasai 2019 dates. We clearly explained about what is Amavasai in Tamil and time of Amavasai pooja in 2019 and also we specified the date of Mahalaya Amavasai 2019.

- Advertisement -