அம்மன் கோவிலுக்கு செல்லும்போது எதிர்பாராமல் இந்த 1 பொருள் உங்கள் கைக்கு வந்தால் நீங்கள் தான் அதிர்ஷ்டசாலி. உங்கள் கஷ்டம் எல்லாம் இனி தீரப் போகிறது என்பதற்கான அறிகுறி இது.

amman
- Advertisement -

சில சமயம் நாம் கோவிலுக்கு செல்லும்போது நம்மை அறியாமலேயே, நம் மனதிற்கு சந்தோசம் தரக்கூடிய நிறைய விஷயங்கள் நடக்கும். நாம் எதிர்பார்க்காமல் கோவிலில் இருந்து பிரசாதம் கிடைக்கும். நாம் எதிர்பார்க்காமல் அம்மன் பாதங்களில் இருந்து சில பொருட்களை எடுத்து அங்கு இருக்கும் பூசாரி நம்முடைய கையில் தருவார். கோவிலில் வரக்கூடிய மற்ற பக்தர்களுக்கு எல்லாம் கிடைக்காத ஒரு பாக்கியம் நமக்கு கிடைத்திருக்கும். இப்படி நீங்கள் எதிர்பாராமல் எந்த ஒரு கோவில் பிரசாதம் உங்கள் கைக்கு வந்து சேருகிறது என்றாலும் அதற்கு காரணம், இறைசக்தி உங்களை தேடி வருகிறது என்பது தான். அந்த அம்பாள் உங்கள் வீட்டிற்கு வருகிறாள் என்பதற்கான அர்த்தத்தை குறிக்கின்றது.

சில பேர் கோவிலுக்கு சென்றால் அங்கு கொடுக்கக் கூடிய பிரசாதமாக இருந்தாலும் சரி, மற்ற பொருட்களாக இருந்தாலும் சரி, எனக்கு இன்னும் வேண்டும், எங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு இன்னும் வேண்டும், என்று கேட்டு கேட்டு வாங்குவார்கள். இது மிகவும் தவறு. உதாரணத்திற்கு கோவிலில் வெற்றிலை பாக்கு சேர்ந்த தாம்பூலம் கொடுப்பார்கள், சில பேர் மஞ்சள் குங்குமம் கொடுப்பார்கள், சில பேர் வளையல்களை தானமாக கொடுப்பார்கள். இப்படி தானமானது கோவிலில் கொடுக்கப்பட்டால், அடித்து பிடித்து சென்று அதை நாம் வாங்க கூடாது.

- Advertisement -

பொறுமையாக இருந்தால் உங்கள் கைக்கு எது சேர வேண்டும் என்று இருக்கிறதோ அதை அந்த அம்பாளே கொண்டு வந்து சேர்த்து விடுவாள். இனி கோவிலுக்கு சென்றால் அவசர அவசரமாக கூட்டத்தில் சென்று இப்படிப்பட்ட கோவில் பிரசாதத்தை வாங்கியே ஆக வேண்டும் என்று நிக்காதீங்க. அதற்காக கோவில் பிரசாதத்திற்கு முன்னுரிமை கொடுக்கக் கூடாதா என்று நினைக்க வேண்டாம். கோவில் பிரசாதம் முக்கியம் தான். ஆனால் அதை, எனக்கு ஒன்று எங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு பத்து வேண்டும் என்று கேட்டு வாங்குவது அவ்வளவு சரியான முறையல்ல. இந்த தவறை நீங்கள் செய்திருந்தால் இனி மாற்றிக் கொள்ளுங்கள்.

சரி, பதிவிற்குள் செல்வோம். அம்மன் கோவில்களுக்கு செல்கிறீர்கள். பொதுவாகவே அம்மன் கோவிலுக்கு சென்றால் எலுமிச்சம் பழத்தை கொண்டு போய் அம்பாளின் பாதங்களில் வைத்து அதை மீண்டும் வாங்கி நம் வீட்டிற்கு கொண்டு வந்து பூஜையறையில் வைப்பது மிகவும் நல்லது. நம்முடைய வீட்டில் துர்சக்திகள் இருந்தால் விலகிவிடும். இது பெரும்பாலும் எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.

- Advertisement -

அம்மன் கோவிலுக்கு செல்லும்போது நீங்கள் எலுமிச்சம் பழம் வாங்கி செல்லவில்லை. ஆனால் அம்மன் கோவிலில் இருக்கும் குருக்கள், அம்மன் பாதத்தில் வைத்திருந்த எலுமிச்சம் பழத்தை கொண்டு வந்து உங்கள் கையில் பிரசாதமாக கொடுக்கின்றார் என்றால் அந்த அம்பாளே உங்கள் வீடு தேடி வந்ததாக அர்த்தம். அன்றோடு உங்களுடைய கஷ்டம் தீர்ந்தது என்று நினைத்துக் கொள்ளுங்கள்.

கோவிலில் பெறப்பட்ட அந்த எலுமிச்சம் பழத்தை கொண்டு வந்து பூஜை அறையில் வைத்து விடுங்கள். ஒருநாள் இரவு மட்டும் பூஜை அறையில் அப்படியே இருக்கட்டும். மறுநாள் காலை எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு இந்த எலுமிச்சம் பழத்தை வெட்டி சாறு பிழிந்து வீட்டில் இருப்பவர்கள் பிரசாதமாக குடித்து விடுங்கள். இது உங்களுடைய குடும்பத்திற்கு பெரிய நன்மையை கொடுக்கக்கூடிய ஒரு வழிபாட்டு முறை.

இதேபோல எலுமிச்சம் பழத்தை யார் கொடுத்தாலும் கைநீட்டி வாங்கி விடக்கூடாது. அம்பாள் சன்னதியாக இருந்தாலும் கூட குருக்களின் கையால் மட்டும்தான் எலுமிச்சம் பழத்தை நீங்கள் வாங்க வேண்டும். மற்றவர்கள் யாராவது எலுமிச்சம் பழத்தை கொடுத்து இதை கொண்டு போய் உங்கள் வீட்டில் வை என்று சொன்னால் அந்த எலுமிச்சம் பழத்தை கைநீட்டி நீங்கள் வாங்காதீங்க. நல்லதுக்காகவே இருந்தாலும் அடுத்தவர்கள் கையில் இருந்து எலுமிச்சம் பழத்தைப் பெற்று நம்முடைய பூஜையறையில் வைப்பது என்பது சரியாக இருக்காது.

எலுமிச்சம் பழத்தை யார் எதற்கு வேண்டுமென்றாலும் எப்படி வேண்டுமென்றாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். அதாவது நல்லது நினைத்து கொடுக்கக்கூடிய எலுமிச்சம்பழம் நன்மை தரும். கெடுதலை நினைத்து கொடுக்கக் கூடிய எலுமிச்சம்பழம் கெட்ட விளைவுகளை உண்டு பண்ணும் அளவிற்கு வலிமை வாய்ந்ததாகவும் இருக்கும் என்ற தகவலோடு இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -